Announcement

Collapse
No announcement yet.

வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்ன? -பாகம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்ன? -பாகம

    வேதம்-வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்ன? -பாகம் 6


    இது இது என்று எதைச் சொல்லிக்கொண்டிருக்கிறோமே, அந்த இதம் என்பது, மூலம் இல்லாதது அன்று மூலம் இல்லாமல் இது என்று ஒன்று தோன்றாது. விதை இல்லாமல் மரம் தோன்றாது. இவ்வளவு பிரபஞ்சத்திற்கும் - மலைகள், சமுத்திரம், ஆகாசம், பூமி, மாடு, மனுஷன், கோபம், பயம், பிரியம், இந்திரியங்கள், சக்தி இப்படி எல்லாவற்றுக்கும் - இது என்று சுட்டப்படும் எல்லாவற்றுக்கும் - மூலம் உண்டு. பார்க்கப்படுகிறது, கேட்கப்படுகிறது, முகரப்படுகிறது, நினைக்கப்படுகிறது, உஷ்ணம் சீதளம் என்பதாக ஸ்பர்சிக்கப்படுகிறது, மனசினாலே இந்திரியங்களினாலே ஆராயப்படுகிறது. அநுபவிக்கப்படுகிறது - இவை எல்லாவற்றுக்கும் 'இதம்' என்றுதான் பெயர்.

    புத்திசாலித்தனம், ஆச்சரியமான காரியங்கள், இதுவரை வந்த விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் முதலிய எல்லாம், அதாவது அறியப்படுவன எல்லாம் 'இதம்' தான். இவை எல்லாம் ஒரு மூலத்தையே காரணமாக உடையன. மூலம் இல்லாது போனால் 'இது' என்கிறது ஒன்றுமே இராது. மூலம் இல்லாது போனால் இது என்கிறது ஒன்றுமே இராது. மூலம் இல்லாமல் ஒரு பொருள் கிடையாது.

    எல்லாவற்றுக்கும் ஒரு மூலம், பீஜம் இருக்கிறது. மநுஷ்ய சரீரம் என்றால் பீஜம் இருக்கிறது. மநுஷ்ய சரீரம் என்றால் பீஜம் இருக்கிறது. மரம் என்றால் அதற்கு ஒரு பீஜம் (விதை) இருக்கிறது. மூலம் இல்லாமல் ஒன்றுமே கிடையாது. ஆதலால் பிரபஞ்சத்துக்கு ஒரு மூலம் இருக்க வேண்டும். பிரபஞ்சத்தில் என்ன என்ன சக்தி இருக்கிறதோ அவ்வளவும் அந்த மூலத்தில் இருக்க வேண்டும்.

    புளியங்கொட்டை முளைக்கிறபோது பார்த்தால் தெரியும். முளை கண்டவுடன் அந்த விதையை இரண்டாகப் பிளந்து பார்த்தால் அதற்குள் ஒரு மரமே இருப்பது தெரியும். பெரிய மரமாக வளரக்கூடிய சக்தி அதனிடத்தில் இருக்கிறது. எல்லா விதைகளிலும் அப்படியே இருக்கும். என்றாலும், புளியங்கொட்டையில்தான் நன்றாக நாம் பார்க்க முடியும்.


    மந்திரங்களில் பீஜாக்ஷரங்கள் என்று உண்டு. ஒரு சின்ன விதைக்குள் ஒரு மஹாவிருக்ஷம் இருப்பதுபோல், இந்த அக்ஷரங்களுக்குள்ளே அளவுகடந்த சக்தியை அடைத்து வைத்திருக்கிறது. ஐகாக்ரியத்தோடு (one- pointed concentration -ஒடு) லக்ஷக்கணக்கான ஆவிருத்தி அந்த அக்ஷரத்தை ஜபித்தால், அதன் உள் சக்தி முழுதையும் கிரஹிக்க முடியும்.

    உலகத்திற்குள் எவ்வளவு சக்தி இருக்கிறதோ, எவ்வளவு மேதை இருக்கிறதோ அவ்வளவும் மூலமான ஸ்வாமிகள் இருக்க வேணடும். மூலம் இல்லாமல் இவை ஒன்றுமே தோன்றாது.

    வேதம் முரசறைவதாவது, "இது இது என்று தோன்றும் பொருள்கள் எல்லாம் ஒரு மூலம் இன்றித் தோன்றவில்லை. மூலத்தில் இருக்கும்படியான சக்தி எதுவோ அதுவேதான் உலகம் முழுவதும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அந்த மூலம் எங்கே இருக்கிறது? இது இது என்று பார்க்கப்படுகிவனவற்றுள், உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருக்கிற ஆத்மாவேதான் மூலம்."

    பெரிய நிலைக்கண்ணாடியை வைத்துவிட்டு அதில் பார்க்கிறோம். நம் உருவம் அதில் இருக்கிறது. நான்கு நிலைக் கண்ணாடிகளை முன்பின் வரிசையாக வைத்துவிட்டுப் பார்த்தால் ஆயிரம் உருவங்கள் தெரிகின்றன. அந்த ஆயிரத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறவன், ஆயிரத்துக்கும் மூலமான ஒரே ஒருவன்தான். இப்படி இத்தனை கோடி ஜீவர்களுக்கும் உள்ளே இருந்து, இது இது என்று பார்த்துக் கொண்டிருக்கிற ஒரே ஒருத்தன்தான் ஸ்வாமி!பார்க்கிற பொருள்தான் பார்க்கப் படுகிற வஸ்துக்களுக்கெல்லாம் மூலம். அந்த மூலம் என்பது அறிவுதான்.

    அறிவு என்பதே எல்லா ஜகத்திற்கும் காரணம். அந்த அறிவு எங்கே இருக்கிறது?உன்னிடமே இருக்கிறது. அகண்டமாக (பிரிவில்லாததாக) இருக்கக்கூடிய இது, உன்னிடம் கண்டமாக (பிரிந்ததாக) த் தோன்றுகிறது.

    இது சின்ன பல்பு, அது பெரிய பல்பு. அது நீல விளக்கு, இது பச்சை விளக்கு. விளக்கில் அநேக உருவங்கள் இருக்கின்றன. இருந்தாலும் அவை எல்லாவற்றுக்குள்ளும் இருக்கும் சக்தி- மின்சார சக்தி - ஒன்றுதான். எங்கும் வியாபித்திருக்கிற மின்சக்தி இங்கே, இந்த விளக்குக்குள் இருந்து பிரகாசிக்கச் செய்கிறது; fan (MCP) க்குள் இருந்து சுற்ற வைக்கிறது. இந்த எல்லாக் காரியங்களுக்கும் மூலமான சக்தி ஒன்று. அது அகண்டமானது. அதுவே ஒயர் (கம்பி) க்குள் வருகிறபோது கண்டமாகிறது.

    இயற்கையில் பளீர் பளீர் என்று மின்னும்போது, ஜலம் அருவியாகக் கொட்டும் போது, அங்கெல்லாம் இது தானே வெளிப்பட வந்து விடுகிறது. இந்த மாதிரி உனக்குள்ளேயே இருக்கிற பரம ஸத்யமான தத்வம் உனக்கு flash ஆகும்படியாக (பளிச்சிடும்படியாக) பண்ணிக் கொள். கர்மாநுஷ்டானத்தில் ஆரம்பித்து, யக்ஞம், தேவதா உபாஸனை எல்லாம் பண்ணிக்கொண்டே போய், மஹாவாக்யத் தியானத்தில் முடிகிற வேத வேதாந்த ஸாதனங்களெல்லாம் இதற்குத்தான்.

    வேதத்தில் இருக்கிற சமூக வாழ்க்கை முறைகள், குடும்ப தர்மங்கள், ராஜாங்க நீதிகள், கவிதை, வைத்தியம், ஜியாலஜி முதலான சாஸ்திரங்கள் எல்லாமும், இந்த ஆத்ம ஸாக்ஷ£த்காரத்தில் கொண்டு போய் விடுவதற்காக ஏற்பட்ட படி வரிசைதான். முதலில் இப்படி 'தத்'தும் 'த்வம்'மும் ஒன்றாயிருப்பதை, மின்னல் வெட்டு மாதிரி சில க்ஷணங்களுக்கு மட்டுமே தெரிந்து கொள்வாய். பிரம்மாநுபவம் மின்னலில் மின்னல் மாதிரிக் கண்கொட்டுகிற நேரம்தான் உண்டாகும் என்று கேனோபநிஷத்தில் (iv.4) சொல்வது இந்த நிலையில்தான்.

    அதோடு விடாமல் அப்யாஸம் செய்து கொண்டேயிருந்தால், அருவி தாரை கொட்டுகிறபோதும் எப்போதும் மின்சாரம் உண்டாகிற மாதிரி, எப்போதும் அந்த அநுபவத்திலேயே இருக்கலாம். இதுதான் சரீரத்தில் இருக்கிறபோதே மோக்ஷம். அப்புறம் சரீரம் போனபின், அந்தப் பரம ஸத்தியமாகவே இருந்து விடலாம். இப்படி சரீரம் உள்ளபோது ஜீவன் முக்தி, உயிர் போனபின் , அந்தப் பரம ஸத்தியமாகவே இருந்து விடலாம். இப்படி சரீரம் உள்ளபோது ஜீவன் முக்தி, உயிர் போனபின் விதேஹமுக்தி என்று வித்யாஸம் சொல்வதுகூட, மற்றவர்கள் பார்வையில்தான். ஞானிக்கு இரண்டும் ஒன்று தான்.

    இப்படி, எல்லாம் ஒரே பிரம்மம்தான் என்று நாம் அநுபவத்தில் தெரிந்து கொண்டு, இங்கேயே மோக்ஷத்தில் இருக்கும்படியாகப் பண்ணுவதுதான் ஸகல வேதங்களுக்கும் பரம தாத்பர்யமாகும்.

    இன்றைக்கு லோக விஷயங்களைப் பத்திரிக்கைகளின் (ந்யூஸ் பேப்பர்களின்) மூலம் தெரிந்து கொள்கிறோம். பல தேசத்திலுள்ள ரிப்போர்ட்டர்கள், ந்யூஸ் ஏஜென்ஸிகள் எல்லோரும் கடிதம் எழுதியும், தந்தி கொடுத்தும், டெலிப்ரிண்டர் மூலம் மெஸேஜ் கொடுத்தும் இந்தச் செய்திகள் எல்லாம் கிடைக்கின்றன. லோகத்திலுள்ள இப்படிப்பட்ட கருவிகளாலும், ஸாதாரண மநுஷ்ய புத்தியாலும் தெரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் இருக்கின்றனவே! அவற்றைத் தெரிந்துகொள்ள ஒரு பத்திரிக்கை வேண்டாமா?

    எதை இந்தக் கருவிகளால் தெரிந்து கொள்ள முடியாதோ, எந்த ஊரிலிருந்து தந்தியும் டெலிப்ரின்டரும் வராதோ, அங்கேயுள்ள விஷயங்களைச் சொல்கிற பத்திரிக்கைதான் வேதம். அதீந்திரிய சக்தி வாய்ந்த ரிஷிகள் அந்தப் பத்திரிக்கையின் வழியாகத்தான் லோகாதீதமான, நம் ஸாதாரண புத்திக்கு அதீதமான ஸமாசாரங்களைச் சொல்லியிருக்கிறார்கள்.
    இப்படி அநேக ஸமாசாரங்கள் வேதத்தில் இருந்தாலும் அதிலும் தள்ளப்படும் சில பாகங்கள் உண்டு.

    "தள்ளப்படுவது" என்றால் ஒரேடியாகத் தப்பு என்று ஒதுக்கி விடுவது என்று அர்த்தமில்லை. வேதத்தில் தப்பான ஸங்கதி ஒன்றுகூட இருக்க முடியாது. அப்படியிருக்கும் என்று நினைத்தாலே அபச்சாரம். ஆனாலும், முக்யமான ஒரு விஷயத்தை ஏற்கச் செய்வதற்குப் பக்க பலமாகவும், பூர்வாங்கமாகவும் அதிலே பல விஷயங்கள் வரும்போது முக்கியமான விஷயத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு பாக்கியைத் தள்ளவேண்டியதுதான் என்று நம் பூர்விகர்களே ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.

    ஒரு ஆரம்ப நிலையில் அல்லது இடைநிலையில், சில விஷயங்களை எடுத்துக் கொண்டாலும், மேல் நிலைக்குப் போகிறபோது அவற்றை விட்டு விடும்படியாக ஜீவனை உயர்த்திக் கொண்டே போகிற வேதத்தில் இருக்கின்றன. இவை ஒரு நிலையில் ஏற்கப்பட்டாலும் அதற்கு மேலே இன்னொரு நிலையில் தள்ளப்படுகிறவைதான்.

    இப்படியில்லாமல் பரம தாத்பரியம் அல்லது "விதி"என்பதாக பூர்ணமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் வேதத்தில் இருக்கின்றன. அப்படியில்லாமல், ஸாரம் போக, பாக்கி தள்ளப்பட வேண்டியவற்றுக்கு "அர்த்தவாதம்" என்றும் "அநுவாதம்" என்றும் பெயர்.

    ஒரு தத்வத்தை, விதியை நம் மனஸிலே படுகிற மாதிரி எடுத்துச் சொல்வதற்காக, அதற்கு மிகவும் உயர்வைக் கல்பிக்கிறதான அநேக கதைகளை வேதம் சொல்வதுண்டு. இப்படிச் சொல்லும்போது, விதியையே பூர்ணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கதைகளை வேதம் சொல்வதுண்டு. இப்படிச் சொல்லும்போது, விதியையே பூர்ணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கதைகளை 'அர்த்தவாதம்' என்று தள்ளி விடலாம். அதாவது, அவற்றை நாம் அனுஷ்டானத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இது "அர்த்தவாதம்".

    Contd...7...
    Source: subadra
Working...
X