ரோஸ் பீட்டர் 1812 -ஆம் வருடம் மதுரை கலெக்டராக இருந்தார். அன்னை மீனாட்சியிடம் அளவற்ற பக்தி கொண்டவர். ஒரு மழைக்கால இரவில் இடிந்து விழுந்த அவரது மாளிகையிலிருந்து பீட்டரை வெளிவரச் செய்து உயிரைக் காப்பாற்றினாள் அன்னை மீனாட்சி. அதற்கு நன்றிக்கடனாக பீட்டர் அன்னையின் குதிரை வாகனத்திற்கு தங்கக் காப்புகளை அர்ப்பணித்தார். அவரது நல்ல குணங்களும் மீனாட்சி அன்னையிடம் கொண்ட பக்தியும் பொதுமக்களிடம் அவருக்கு பீட்டர் பாண்டியன் என்ற பெயரைப் பெற்றுத் தந்தன. பீட்டரின் பக்தியை ஒத்தது கலெக்டர் வில்லியம் காரோவின் பக்தி. பவானி, காவிரி, அமுத நதி என்ற மூன்று நதிகளின் சங்கமம் பவானி. சேலத்திலிருந்து 15 கி.மீட்டரில் உள்ளது. இந்தத் தலத்து இறைவன் சங்கமேஸ்வரர், அன்னை வேதநாயகி. இவ்வூரில் 1802-இல் கலெக்டராக வில்லியம் காரோ இருந்தார். இங்கு அவர் 10 வருடகாலம் தங்கியிருந்தார். அவர் தீர்த்த மகிமை, தல விருட்ச மகிமை, கோயில் அமைப்பு, தேவி மகிமை இவற்றைக் கேட்டு அறிந்தார். மக்களிடமும் பக்தர்களிடமும் பண்பும் மதிப்பும் அன்பும் உடையவராக இருந்தார். கோபுர தரிசனம் கண்டு வில்லியம் காரோ மனம் நெகிழ்வார். அன்னை, சிவனுடன் உற்சவக் காலங்களில் வெளிவருவது கண்டு, வியந்து துதிப்பார். விபூதி குங்குமம் அணிவார். கற்பூரம் கண்ணில் ஒற்றிக் கொள்வதின் பொருள் கேட்டு, கற்பூரம் போல் இவ்வுடலும் ஒரு நாள் கரைந்து மறையும் என்பதையும் உணர்ந்தார்.
தேவியின் மீது அவரது ஈடுபாட்டை அறிந்த தாலுகா தாசில்தார், அவருக்காக வெளிப் பிராஹார மதில் சுவரில் ஒரு துளை செய்தார். அதன் வழியே பார்த்தால் பலிபீடம், த்வஜஸ்தம்பம், வாகனங்கள் முதலியவை தெரியும். கர்ப்பக்கிருகத்தில் விளக்கு எரியும்போது அன்னையின் தரிசனம் சிறிது தெரியும். அந்தத் துளையை இன்றும் கோயில் மதிலில் காணலாம். வில்லியம் காரோ தங்கியிருந்த பங்களா கோயிலுக்கு அருகில் இன்றும் உள்ளது. ஒரு நாள் இரவு வில்லியம் தனது விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தார். பலத்த மழை, யாரோ ஒரு சிறிய பெண் தூங்கும் அவரை உலுக்கி, சீக்கிரம் எழுந்திரு, வெளியே போ என்றாள். அவரோ புரண்டு படுத்தார். அதட்டும் தோரணையில் மறுபடியும் அதே குரல். ஆச்சரியம் கலந்த கோபத்துடன், யார் இவள்? எங்கிருந்து எப்படி வந்தாள்? என முனகிக் கொண்டே வெளியில் வந்தார் வில்லியம். ஐந்து நிமிடங்களில் அந்த வீடு இடிந்து தரைமட்டமானது. அப்போது மின்னல் ஒளியில் அன்னையைத் தரிசித்தார் வில்லியம். ஆஹா, என் உயிரைக் காப்பாற்றிய தேவியே உனக்கு கோடி நமஸ்காரங்கள் என்று கோயில் இருந்த திசை பார்த்துக் கும்பிட்டார். அதற்குக் கைம்மாறாக அன்னைக்கு 11.1.1804 அன்று ஒரு தந்தக் கட்டில் பரிசாக வழங்கியுள்ளார். இன்றும் அதைக் கோயிலில் காணலாம்.
சுடுகாட்டு சித்தன்