தியானம் செய்வதற்கு, சுகமான ஆசனத்தில் அமர வேண்டும். தரையில், பாய் மீதோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து கொள்ளவும். பாதங்களை ஒன்றின் மீது ஒன்றாக இணைத்துக் கொள்ளவும். இரு கை விரல்களை ஒன்றுடன் ஒன்றாகக் கோர்த்துக்கொள்ளவும். உடல் இறுக்கமாக இல்லாமல் தளர்த்தியபடி இயல்பாக இருக்க வேண்டும். பின்பு கண்ணாடி இருந்தால் கழற்றி விட்டு, கண்களை மெதுவாக மூடிக்கொண்டு நம்மில் இயல்பாகவும், இயற்கையாகவும், மென்மையாகவும் நடக்கும் சுவாசத்தின் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும். எந்த மந்திரங்களையும் உச்சரிக்க வேண்டாம். கடவுள் மற்றும் மகான்களின் உருவத்தை நினைக்கக் கூடாது. மனதில் எண்ணங்கள் எழும்போது, அவற்றைவிட்டு, முழு கவனத்தையும்சுவாசத்தின் மீது செலுத்தவும்.
தியானம் செய்யும் நேரம்
தினமும் குறைந்தபட்சமாக, அவரவரது வயதிற்கு நிகரான நேரம் தியானம் செய்ய வேண்டும். உதாரணமாக, 10 வயது சிறுமி 10 நிமிடங்களும், 60 வயதுடையவர் தொடர்ந்து 60 நிமிடங்களும் தினமும் தவறாமல் தியானம் செய்ய வேண்டும்.