சாமரம் அல்லது சவுரி என்பது அரசர் மற்றும் தெய்வங்களுக்கு மரியாதைப் பொருளாக வீசப்படும் விசிறி ஆகும். இது ஈ முதலானவற்றை விரட்டவும் இதமான சூழலை ஏற்படுத்தவும் வீசப்படுகின்றது. இது கவரிமானின் மயிரில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.
இந்திய மற்றும் இந்தோனேசியா கலாசாரத்திலே சிவன் முதலான தெய்வங்களுக்கு சாமரம் வீசப்படுகின்றது. இந்து சமயம், தாவோயியம், மற்றும் பௌத்தகலாசாரங்களில் சாமரம் முக்கியம் பெறுகின்றது.[1]