Announcement

Collapse
No announcement yet.

KANCHI MAHAN: LOKA SAMASTHA SUKHINO BHAVANTHO

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • KANCHI MAHAN: LOKA SAMASTHA SUKHINO BHAVANTHO

    Courtesy: Sri.VK.Mani
    சேய்க்கு வந்த நோய்க்கு தாயும் மருந்து உண்பது போல!"

    ஒரு சிறுவனின் சருமத்தில் கருந்திட்டுகள் தோன்றி உடல் முழுதும் பரவி
    விட்டது. பார்க்கவே அருவறுப்பூட்டும் தோற்றம். உடன் படித்தவர்களும் அவனை
    ஒதுக்கி விட்டனர். உடல் வியாதி பாதியும் மனச் சோகம் மீதியுமாக சோம்பிப்
    போன பிள்ளையை அவனின் அம்மா சுவாமிகளிடம் அழைத்து வந்தாள். பெரியவர் அந்த
    சிறுவனிடம் கேட்டார்: ''குழந்தே, என்னோட மூணு நாள் இருக்கியா?'' சிறுவன்
    ஒப்புக்கொள்ள அம்மாவும் சுவாமிகளிடம் அவனை விட்டு விட்டுப் போனாள்.

    ''நான் என்ன சாப்பிடறனோ அதையேதான் நீயும் சாப்பிடணும். நமக்குள்ள
    ஒப்பந்தம். சரியா?'' என்று சுவாமிகள் கேட்க பையன் சந்தோஷமாய்
    சம்மதித்தான். அடுத்த மூன்று நாட்கள் பெரியவர் சாப்பிட்ட அதே ஆகாரம்தான்
    பிரசாதமாய் பையனுக்கும் வழங்கப்பட்டது. அது என்ன உணவு? பச்சை வாழைத்தண்டை
    பொடிப்பொடியாக நறுக்கி எந்தவிதத் தாளிப்பும் சேர்க்காமல் சிறிது தயிர்
    மட்டுமே கலந்ததுதான் அந்த உணவு. அதை மட்டுமே சாப்பிட்ட அந்த சிறுவனின்
    நோய் மூன்றே நாளில் நன்கு நிவர்த்தி ஆகியது. சோம்பி வந்த சிறுவன்
    மலர்ச்சியோடு வீட்டிற்குத் திரும்பிச் செல்ல ரெடியானான். ''வீட்டிற்குப்
    போன பின்பும் ஒரு மாசம் உப்பு, புளி, காரம் சேர்க்காமே சாப்பிடு. இந்த
    வியாதி இனிமே வரவே வராது'' என்று ஆசி கூறி சுவாமிகள் அந்த சிறுவனை
    வழியனுப்பி வைத்தார்.

    உண்மையில் பெரியவர் அந்தக் காலத்தில் ஓரளவு காய்கறிகளும் சிறிது அரிசிச்
    சாதமும் எடுத்துக் கொள்ளும் வழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தார். ஆனால்
    பையனுக்கு இந்தப் பத்தியம் அவசியம் என்பதால் அந்த மகான் தன் உணவையும்
    மாற்றிக் கொண்டார். குழந்தை தன் நாக்கைக் கட்டுப்படுத்தும் போது தாமும்
    அந்தக்கட்டுப்பாட்டை ஏற்க வேண்டும் என்று கருதி காரியத்திலும் செய்து
    காட்டினார். சேய்க்கு வந்த நோய்க்கு தாயும் மருந்து உண்பது போல!
    Source : K N RAMESH
Working...
X