Announcement

Collapse
No announcement yet.

KANCHI MAHAN: LOKA SAMASTHA SUKHINO BHAVANTHO

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • KANCHI MAHAN: LOKA SAMASTHA SUKHINO BHAVANTHO

    Courtesy: Sri.VK.Mani
    நாற்பது வருஷத்துக்கு முன்னாடி காஞ்சிபுரத்தில் ஒரு அக்ரஹாரத்தின் வழியாய் காமாட்சியம்மன் கோயிலுக்குப் போய்க்கிட்டிருந்தேன். திடீரென பெரியவர் வர்றார்ன்னு குரல் கேட்டது. பரபரப்பாய் மக்கள் இங்கேயும், அங்கேயும் போய்க்கிட்டிருந்தாங்க. நானும் ஏதோ வயசான பெரியவர் வர்றார்ன்னு திரும்பிப் பார்த்தா, மஹா பெரியவா. நான் சடார்ன்னு அந்த ஞானியின் காலைப் பிடிச்சிட்டேன். அப்புறம் அவர் அந்த இடத்தை விட்டுப் போயிட்டார். நான் ஒரு மணி நேரம் அந்த இடத்திலேயே நின்னேன். அக்ரஹாரத்து அய்யர்களெல்லாம், 'நாங்க கூட-இவரைத் தொட்டது கிடையாது. நீ காலையே பிடிச்சுட்டியே'ன்னாங்க. நான் ரொம்பப் பயந்து போயி, கோயிலுக்குள் நுழைந்தேன்.
    கோயிலுக்குள் மஹா பெரியவர் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் பண்ணிக்கிட்டிருந்தார். தூரத்தில் நின்ன என்னை 'வா'ன்னு சைகையால கூப்பிட்டார்.
    'சாமி தெரியாமல் காலைப் பிடிச்சுட்டேன்'னேன்.
    அதற்குப் பெரியவர் 'ஏதோ பூர்வஜென்ம வாசம், என் காலைப் பிடிச்சுட்ட. பரவாயில்லை, என்ன பண்றே'ன்னு கேட்டார்.
    'சினிமாவுல இருக்கேன்' என்றேன்.
    'அதனால என்ன? எங்க இருந்தாலும் ஒழுக்கமாக இரு' என்று சொல்லி தமது கைகளை எனது கைகள் மீது வைத்து ஆசீர்வாதம் பண்ணினார்.
    அன்றிலிருந்து இன்று வரை காமாட்சின்னு சொல்லும்போது, அந்த மஹா பெரியவர் என்னை ஆசீர்வதிக்கிறதா உணர்றேன்."
    ~ குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி
    நன்றி: "கல்கி"
    Source : K N RAMESH
Working...
X