Announcement

Collapse
No announcement yet.

Name of Muruga - Muruga naamam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Name of Muruga - Muruga naamam

    Courtesy;Sri.Nakasundaram
    http://omshanthi.forumta.net/t128-topic


    ஸ்ரீ குருப்யோ நம:


    முருக நாமம்


    ஒருமுறை மைசூர் சமஸ்தான ராஜா திருமுருக கிருபானந்த வாரியாரிடம் ஏன் எப்போதும் முருகனையே வணங்கிக் கொண்டிருக்கிறீர்? முருகனை வழிபட்டால் என்ன கிடைத்து விடப்போகிறது என்று கேட்டார். அதற்கு வாரியார் முருகனை வழிபட்டால் அடைய முடியாதது எதுவும் இல்லை,இன்னது கிடைக்கும் என்று சொல்வது அரிது. எனவே என்ன கிடைக்காது/வாராது என்பதை சொல்கிறேன் என்று பின்வரும் பாடலை எடுத்து சொன்னார். (கட்டளைக் கலித்துறையில் அமைந்த அழகான பாடல்)


    முருகா எனவுனை யோதுந்தவத்தினர் மூதுலகில்
    அருகாத செல்வம் அடைவர் வியாதி யடைந்துநையார்
    ஒருகா லமுந்துன்ப மெய்தார் பரகதி யுற்றிடுவார்
    பொருகாலன் நாடு புகார்சம ராபுரிப் புண்ணியனே!
    - ஸ்ரீமத் சிதம்பரசுவாமிகள்


    சமராபுரி என்னும் திருப்போரூரில் எழுந்தருளுகின்ற புண்ணியனே! முருகா என்று உன் திருநாமத்தை ஓதுந்தவத்தினர் (நாமம் ஓதினாலே தவச்சீலர் ஆகிவிடுவர், ஆம்! முருகா! என்று ஓதுதல் வேண்டும். மாதவம் செய்தவர்கே இந்த வாய்ப்பு அமையும். நாமத்தை ஓத வேண்டுமாம் ஓதுவதற்கும் சொல்வதற்கும் வேறுபாடு உளது.) இந்த பழைய உலகில் அள்ள அள்ள குறையாத அல்லது வற்றாத செல்வத்தை அடைவர். பதினாறு வகை செல்வத்தையும் குறைவிலாது பெற்று இன்புறுவார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப எந்த நோய் நொடியும் அணுகாமல், மெலிந்து நைந்து போகார். ஒருபோதும் ஒருவகையான துன்பத்தையும் அடைய மாட்டார்கள். நல்ல முறையில் வாழ்ந்து பின் பரகதி அடைவர். பரகதி என்றால் இரு வினைநீங்கி,பிறவிப்பெருங்கடலைவிட்டு நீங்கி, சீவன் சிவனோடு சேர்தல். எந்த நிலையை அடைந்தால் பிரிதொன்றும் தேவையில்லையோ அந்த நிலை பரகதி. இதுவே வீடுபேறு அல்லது முக்தி. இவ்விதம் முக்தி அடைந்தவர் ஆனதால் கொடிய அல்லது கடுமையான காலன் நாடான எமபுரி இருக்கும் திசைகூட செல்ல மாட்டார்கள். (ஆம்! அம்மாதவச் சீலர்கள் காலன் ஊர் சேரமாட்டார்கள்; வேலனூர் சேர்வார்கள்.)


    முருகா என்று எப்ப கட்டாயம் ஓதவேண்டும், ஏன் ஓதவேண்டும் என திருமுருகாற்றுபடையின் பிற்சேர்க்கை பாடலான பின் வரும் வெண்பா நினைவிற்கு வரும்.


    அஞ்சு முகம்தோன்றில் ஆறுமுகம் தோன்றும்;
    வெஞ்சமரில் அஞ்சல்என வேல் தோன்றும்;-நெஞ்சில்
    ஒருகால் நினைக்கில், இருகாலும் தோன்றும்;
    முருகா என்று ஓதுவார் முன்!


    எல்லோரும் பார்த்தவுடன் அஞ்சும்படி கொடிய எமனின் முகம் தோன்றும் போது ஒருக்கால் முருகா! என்று மனதில் நினைத்தீர்கள் ஆனால் உங்களை காக்க அவன் ஆறுமுகம் தோன்றும், எம்னோடு போரிட துணையாக வேல் தோன்றும், அடியாரோடு சேர்க்க அவன் இருகால்களும் தோன்றும்!


    அருணகிரிநாதர் கூறியது போல் தும்பல் ஏற்படும்போதாவது அவன் நாமத்தை சொல்லுங்கள்.
Working...
X