6. திரு வேங்கட மாலை 077/104 : வேங்கடமே அம் கை ஏற்றான் பதி !
மட்டு வளர் சாரலினும் , மாதவத்தோர் சிந்தையினும்
விட்டு மதி விளங்கும் வேங்கடமே - கட்டு சடை
நீர்க்கங்கை ஏற்றான் இரப்பு ஒழித்தான் , நீள் குரல் ஆய்ப்-
பார்க்கங்கை ஏற்றான் பதி
பதவுரை
நீர்க்கங்கை ஏற்றான் - நீர் + கங்கை + ஏற்றான்
பார்க்கங்கை ஏற்றான் - பார்க்கு + அம் + கை + ஏற்றான்
மட்டு வளர் சாரலினும் தேன் பெருகி வழியும் மலையின் பக்கங்களில்
விட்டு மதி விளங்கும்ஒளி விட்டுப் பிரகாசிக்கும் சந்திரன் இருக்கும் இடமும்
மாதவத்தோர் சிந்தையினும் பெரும் தவம் உடைய முனிவர்களின் மனதில்
விட்டு மதி விளங்கும் திருமாலின் ஞான ஒளி இருக்கும் இடமுமான
வேங்கடமே திரு வேங்கட மலையே
கட்டு சடை நீர்க்கங்கை கட்டிய சடையில் கங்கை நீரை உடைய
ஏற்றான் எருது வாஹனம் உடைய சிவனின்
இரப்பு ஒழித்தான் யாசித்தலை நீக்கியவனும் ,
நீள் குறள் ஆய் நீண்டு வளர்ந்த வாமனனாய்
பார்க்கு அம கை ஏற்றான் உலகம் பெற அழகிய கையில் நீரை பெற்ற திருமாலின்
பதி திருத் தலம் ஆகும்
V.Sridhar