Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 28/114 : ஸ்ரீ வராஹ அவதார வைப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 28/114 : ஸ்ரீ வராஹ அவதார வைப

    5. திருவரங்கத்து மாலை - 28/114 : ஸ்ரீ வராஹ அவதார வைபவம் 1/3

    அவனிக்கு அரந்தை அழித்த அரங்கரை அளவிடல் ஆருக்கு ஆம் ?

    ஆருக்கு இவரை அளவிடல் ஆம் ? - தென் அரங்கர் இந்தப்-
    பாருக்கு அரந்தை தவிர்ப்பதற்காக , பழிப்பு இல் பெரும்
    சீர் உற்ற செங்கண் கரும்பன்றி ஆகி , திருக் குளம்பின்
    மேரு கணகணமா , தலை நாளில் , வினோதிப்பரே

    பதவுரை :




    தென் அரங்கர் அழகிய திரு அரங்கத்தில் இருக்கும் எம்பெருமான்
    தலை நாளில் முன் ஒரு காலத்தில்
    இந்தப் பாருக்கு இந்த பூமிக்கு
    அரந்தை தவிர்ப்பதற்காக ஹிரண்யாக்ஷனால் ஏற்பட்ட துன்பத்தைத் துடைப்பதற்காக
    பழிப்பு இல் குற்றம் இல்லாததும் ,
    பெரும் சீர் உற்ற மிக்கச் சிறப்பு உடையதும் ,
    செங்கண் சிவந்த கண்களை உடையதுமான
    கரும்பன்றி ஆகி கரு நிறம் கொண்ட வராஹ அவதாரம் ஆகி ,
    திருக் குளம்பின் தமது திருவடிக் குளம்பிற்கு
    மேரு கணகணமா மகா மேரு மலை சிறிய சிலம்பு ஆகும்படி
    வினோதிப்பரே விளையாடி மகிழ்ந்தார் ;

    இவரை அளவிடல் இவருடைய பெருமையை மதித்துச் சொல்லுவது
    ஆருக்கு ஆம் எத்தகையவருக்கு முடியும் ? (முடியாது)


    அடுத்து வருவது : ஸ்ரீ வராஹ அவதார வைபவம் 2/3
    --

    V.Sridhar


Working...
X