4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 066/116 வண் பரிசாரம் மாற்கு பெண் பரிசு ஆர் சொல்வார் ?
திருப்பதி - 60/108. மலை நாடு - 02/13 : திரு வண் பரிசாரம்
அடியும் குளிர்ந்தாள் , அறிவும் குலைந்தாள் ,
முடிகின்றாள் , மூச்சு அடங்கு முன்னே , கடிது ஓடி
பெண் பரிசு , ஆர் , அங்குப் பிறப்பித்து மீளுவார்
வண் பரிசாரம் கிடந்த மாற்கு ?
பதவுரை :
அடியும் குளிர்ந்தாள் பிரிவாற்றமையால் தலைவியின் கால்கள் குளிர்ந்து விட்டன ;
அறிவும் குலைந்தாள் அறிவும் அழிந்து விட்டது ;
முடிகின்றாள் மரணம் அடைய போகிறாள் ;
மூச்சு அடங்கு முன்னே இவளது சுவாசம் ஒடுங்கு முன்னே
வண் பரிசாரம் கிடந்த மாற்கு வண் பரிசாரத்தில் இருக்கும் திரு வாழ் மார்பனிடம்
கடிது ஓடி விரைந்து சென்று
பெண் பரிசு இப்பெண்ணின் நிலைமையை
அங்குப் பிறப்பித்து அவரிடம் விளக்கி
மீளுவார் ஆர் திரும்ப வரக்கூடியவர் யார் ?
V.Sridhar

Comment