3. அழகர் அந்தாதி - 087/100 சோலை மாமலை நம்பனையே பாடுமின் , பாவலர்காள் !
புலமையிலே நிமிர்ந்து , அற்பரைப் போற்றி , பொது மகளை ,
"குலமையிலே ! குயிலே ! கொடியே !" என்றும் , "கூர் விழி ஆம்
பலவையிலே" என்றும் , பாடாமல் பாடுமின் , பாவலர்காள் !
நலமையிலேய் முத்தம் ஆர் சோலை மாமலை நம்பனையே
பதவுரை :குல + மையிலே
பல + ஐயிலே
நல் + அமையில் + ஏய்
பாவலர்காள் கவி பாட வல்ல புலவர்காள் !
புலமையிலே நிமிர்ந்து நீங்கள் கல்வியில் சிறந்து ,
அற்பரைப் போற்றி ஆனால் இழிவான மனிதர்களைப் புகழ்ந்து
பொது மகளை குணம் இல்லாத பெண்களை
குலமையிலே ! குயிலே ! 'சிறந்த மயிலே ! குயிலே
கொடியே ! என்றும் பூங்கொடியே' என்றும்
கூர் விழி ஆம் பல ஐயிலே அவளது கூரிய கண்கள் 'வலிமையான வேலாயுதம்
என்றும் பாடாமல் போன்றது ' என்றும் கவி பாடாமல்
நல் அமையில் சிறந்த மூங்கில்களில் பொருந்திய
ஏய் முத்தம் ஆர் சோலை மலையில் முத்துக்கள் நிறைந்த சோலை மலையில்
நம்பனையே பாடுமின் இருக்கும் அழகனைப் பாடுங்கள் !
--
V.Sridhar