3. அழகர் அந்தாதி - 039/100 மதி உடையோர் நெடு மால் நெஞ்சுக்கு உகப்பாய் நிற்பர் !
தஞ்சந்தனம் என்று தேடி புல்லோர் , தையலார் கடைக்கண் ,
வஞ்சந்தனம் கொள்ள வாளா இழப்பர் - மதி உடையோர் ,
செஞ்சந்தனப் பொழில் மாலிருஞ்சோலைத் திரு நெடு மால்
நெஞ்சந்தனக்கு உவப்பாக நல்கா நிற்பர் , நேர் படினே
பதவுரை : தஞ்சம் + தனம் (செல்வம்)
வஞ்சம் + தனம் (கொங்கை)
செம் + சந்தன
நெஞ்சம் + தனக்கு
புல்லோர் சில அற்பர்கள்
தனம் தஞ்சம் என்று தேடி செல்வமே பாதுகாப்பு என்று அதைத் தேடிச சம்பாதித்து ,
தையலார் கடைக்கண் பெண்களுடைய கடைக்கண்களின்
வஞ்சம் தனம் கொள்ள வஞ்சனையும் , கொங்கைகளின் பொலிவும் கவர்ந்து கொள்ள ,
வாளா இழப்பர் வீணாக அந்த பொருளை இழந்து விடுவார்கள் .
மதி உடையோர் நேர் படில் நல்ல அறிவு உடையவர்கள் பொருள் கிடைத்தால் ,
செம் சந்தனப் பொழில் சூழ் சிவந்த சந்தன மரங்களின் சோலையை உடைய
திரு மாலிருஞ்சோலை திரு மாலிருஞ்சோலையில் இருக்கும்
திரு நெடு மால் நெஞ்சம் உவப்பாக திருமாலின் திருவுள்ளத்திற்குப் பிரியமாகும்படி
நல்காநிற்பர் அப்பொருளை நன்கு உபயோகிப்பர்