Announcement

Collapse
No announcement yet.

3. அழகர் அந்தாதி - 004/100 அழகா ! கடையனைக் கணியாய் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3. அழகர் அந்தாதி - 004/100 அழகா ! கடையனைக் கணியாய் !

    3. அழகர் அந்தாதி- 004/100 அழகா ! கடையனைக் கணியாய் !

    பித்தரும்பாநின்ற நெஞ்சனை வஞ்சனை பேர் உலகோர்
    கைத்தரும்பாவி எனும் கடையோனை கடைக்கணியாய் !
    முத்தரும்பாரும்தொழும் அழகா ! வண்டு மூசும் துழாய்ப்-
    புத்தரும்பார்முடியாய் ! அடியாரைப் புரப்பவனே !


    :
    பதவுரை : பித்து + அரும்பாநின்ற
    கைத்து + அரும்பாவி
    முத்தரும் + பாரும்
    புது + அரும்பு + ஆர்


    முத்தரும் பாரும் தொழும் அழகா முக்தி பெற்றவரும் உலகத்தாரும் வணங்கும் அழகனே !
    வண்டு மூசும் வண்டுகள் மொய்க்கும்
    துழாய்ப் புத்தரும்பு ஆர் முடியாய் துளசியின் உதிய அரும்புகள் பொருந்திய முடி உள்ளவனே !
    அடியாரைப் புரப்பவனே பக்தர்களைக் காப்பவனே !
    பித்து அரும்பாநின்ற நெஞ்சனை பித்து உண்டாகும் நெஞ்சு உடையவனும் ,
    வஞ்சனை வஞ்சகமுடையவனும் ,
    பேர் உலகோர் கைத்து பெரிய உலகில் உள்ள பலரும் வெறுத்து
    அரும்பாவி எனும் கடையேனை கொடிய பாவி என்று இகழும் கடைப்பட்டவனுமான என்னை
    கடைக் கணியாய் கடாட்சித்து அருள்வாய் !

Working...
X