திரு வேங்கடத்து அந்தாதி 55/100 மாலை அற்று மாலையால் மாலையே நினைவீர் !
பிறைமாலையாலொருபேதைநைந்தாளந்தபேதைக்குநின்
நறைமாலைதாவென்றுமானிடம்பாடியநாவலர்காள்
நிலைமாலையற்றுகவிமாலையாநினைவீர் திருவெள்-
ளறைமாலைவேங்கடத்தேயுறைமாலையரங்கனையே !
பதவுரை : பிறை + மாலையால் (பொழுது)
நறை + மாலை (பூ மாலை)
நிலை + மாலை (மயக்கம்)
வெள்ளறை +மாலை (திரு மாலை)
பிறை மாலையால் சந்திரன் தோன்றும் மாலைப் பொழுதால்
ஒரு பேதை நைந்தாள் ஒரு பெண் மெலிந்தாள்
அந்தப் பேதைக்கு அந்தப் பெண்ணிற்கு
நின் நறை மாலை தா என்று உன் மணமுள்ள பூ மாலையைக் கொடு என்று
மானிடம் பாடிய நா வலர்காள் மனிதனைப் பாடிய புலவர்களே !
நிலை மாலை அற்று இந்த மயக்கம் இல்லாமல்
கவி மாலையால் பா மாலை கொண்டு
திரு வெள்ளறை மாலை வெள்ளறையில் இருப்பவனும் ,
வேங்கடத்தே உறை மாலை வேங்கடத்தில் இருப்பவனுமான
அரங்கனையே நினையீர் அரங்கநாதனையே கருதிப் பாடுவீர் !