Announcement

Collapse
No announcement yet.

,Sinthikka-20

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ,Sinthikka-20

    சிந்திக்க -20.
    “ தர்மம் “ என்றால் ஏதோ பிச்சைக்கார ர்களுக்கு காசு போடுவது மட்டுமே என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். இது மிகதவறு. மனிதர்களாக, ஏன் விலங்குகளாகப் பிறவி எடுத்திருந்தால் கூட ஒவ்வொருவருக்கும் தர்மமுண்டு என்று சாஸ்திரங்களில் கூறப்-பட்டுள்ளது. அதிலும் மனிதனாகப் பிறந்தவர்களுக்கு, ஒவ்வொரு நிலையிலும் அவரவர்களுக்கான தர்மங்கள் வரையறுக்கப்பட்டு-ள்ளது. அவற்றை அவர்கள் கடைப்பிடித்தே ஆகவேண்டும் இல்லை என்றால் இம்மையிலும் மறுமையிலும் துன்பப்பட நேரிடும். ப்ரம்- மசாரிகளுக்கு, க்ரஹ்ஸதர்களுக்கு, மனைவிக்கு, கணவனுக்கு, மாமி-யார்களுக்கு, மைத்துனர்களுக்கு, பெற்றோர்களுக்கு, என்று தனித்-தனியான தர்மங்கள் உண்டு. அதுமட்டுமில்லை வர்ணாஸ்த்ர தர்-ம்மென்று நான்கு வர்ணத்தினருக்கும் தனித்தனியாக தர்மங்களுண்டு. ஒவ்வொருவருடைய தர்மங்களும் என்ன என்ன என்பதைப் பிறகு விரிவாகப் பார்க்கலாம். முதலில் தர்மம் என்றால் என்று கேட்டால் அவை அவரவர்களின் கடமை. அதாவது ஒவ்வொருவரும் வாழ்-வில் செய்ய வேண்டியவைகள் என்பதே எல்லோருக்கும் பொதுவான தர்மம் மற்றவர்களுக்கு உதவுவது. பிச்சைபோடுவதும் அவசியம்-தான். அதைவிட முக்யமானது மற்றவர்களுக்கு சரீரத்தால், பணத்-தால் உதவுவதுகூட தர்மம்தான். ஒருவர் சாலையில் அடிப்பட்டுக்-கிடந்தால் ஓடிவலியச்சென்று உதவவேண்டும். ஏழைக்குழந்தை-களுக்கு படிப்புவசதி செய்து தரவேண்டும். அநாதை இல்லங்-களுக்கு, முதியோர் இல்லங்களுக்கு, பணத்தால் உதவுவதுடன் சரீரத்தாலும் உதவ முன்வரவேண்டும். கோயில்கைங்கர்யங்களில் பங்கு கொள்ள வேண்டும். இவற்றில் எவ்வளவு நாம் செய்திருக்-கிறோம். நினைத்துப்பார்த்தால் தலைகுனிவோம்
    coutesy:Poigaiadiyan
Working...
X