313.இல்லையென நாணி
313வெள்ளிகரம்
வெள்ளிகரம் 9 திருப்புகழ் பாடல்களிலும் வள்ளிமலை, வள்ளிபிறப்பு, வள்ளி குருவியோட்டிய தினைப்புனம், அவள் கொடுத்த தினைமாவு, அவள்மீது காதல் கொண்டது, அவள் கரம் பிடித்தது ஆகிய அனைத்தையும் சொல்வதைப் பார்த்தால் தேவசேனையை மறந்து விட்டார் போலும் என்று சொல்லத் தோணும்.
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தான தனதான
[hd2]இல்லையென நாணி யுள்ளதின் மறாம
லௌளினள வேனும் பகிராரை
எவ்வமென நாடி யுய்வகையி லேனை
யெவ்வகையு நாமங் கவியாகச்
சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத
தொல்லைமுத லேதென் றுணரேனைத்
தொய்யுமுடல் பேணு பொய்யனை விடாது
துய்யகழ லாளுந் திறமேதோ
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
மையவரை பாகம் படமோது
மையுலாவு சோலை செய்யகுளிர் சாரல்
வள்ளிமலை வாழுங் கொடிகோவே
வெல்லுமயி லேறு வல்லகும ரேச
வெள்ளிலுட னீபம் புனைவோனே
வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
வெள்ளிநகர் மேவும் பெருமாளே[/hd]
பதம் பிரித்து உரை
சுருக்க உரை

தம்மிடம் உள்ள பொருளில் ஒரு எள்ளளவு கூட பகிரந்து கொடுக்காதவர்களை அறிந்து பிழைக்கும் வழி இல்லாத என்னை, எந்த முறையிலும் உன் திரு நாமங்களைப் பாடலாக அமைத்துச் சொல்லத் தெரியாத என்னை, முழு முதல் பொருள் இன்னது என உணராத என்னைப் புறக்கணித்துத் தள்ளி விடாமல், உனது திருவடி ஆண்டருளும் வழி ஏதேனும் உண்டோ?
வலிய அசுரர்கள் அழியவும், நல்ல தேவர்கள் வாழவும் போரிட்டவனே, வள்ளி நாயகியின் கணவனே வெள்ளி நகரில் வீற்றிருக்கும் பெருமாளே பொய்யனாகிய என்னை ஆளுந் திறம் ஏதோ?
வலிய அசுரர்கள் அழியவும், நல்ல தேவர்கள் வாழவும் போரிட்டவனே, வள்ளி நாயகியின் கணவனே வெள்ளி நகரில் வீற்றிருக்கும் பெருமாளே பொய்யனாகிய என்னை ஆளுந் திறம் ஏதோ?