241.ஏட்டின் விதிப்படி
241
திருக்கடவூர்
தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன தனதான
ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுர
வீட்டி லடைத்திசை வேகசை மூணதி
லேற்றி யடித்திட வேகட லோடம தெனவேகி
ஏற்கு மெனப்பொரு ளாசைபெ ணாசைகொ
ளாத்து வெனத்திரி யாபரி யாதவ
மேற்றி யிருப்பிட மேயறி யாமலு முடல்பேணிப்
பூட்டு சரப்பளி யேமத னாமென
ஆட்டி யசைத்திய லேதிரி நாளையில்
பூத்த மலக்குகை தோபொதி சோறென கழுகாகம்
போற்றி நமக்கிரை யாமென வேகொள
நாட்டி லொடுக்கென வேவிழு போதினில்
பூட்டு பணிப்பத மாமயி லாவருள் புரிவாயே
வீட்டி லடைத்தெரி யேயிடு பாதக
னாட்டை விடுத்திட வேபல சூதினில்
வீழ்த்த விதிப்படி யேகுரு காவலர் வனமேபோய்
வேற்றுமை யுற்றுரு வோடியல் நாளது
பார்த்து முடித்திட வேயொரு பாரத
மேற்பு னைவித்தம காவிர மாயவன் மருகோனே
கோட்டை யழித்தசு ரார்பதி கோவென
மூட்டி யெரித்தப ராபர சேகர
கோத்த மணிக்கதி ரேநிக ராகிய வடிவேலா
கூற்று மரித்திட வேயுதை பார்வதி
யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள்
கோட்டு முலைக்கதி பாகட வூருறை பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
கசை மூணு - சுழுமுனை, இடைக்கலை, பிங்கலை என்னும் மூன்று நாடிகள்
ஒப்புக
-www.vamsadhara.blogspot.com

பிரமனின் விதிப்படி உயிரை உடலில் அடைத்து,மூன்று நாடிகளை அதில் பொருத்தி, பல காலம் கழித்து, பொன், பெண் ஆசைகளால் வருந்தி, பலர் இகழ அந்த உடலைப் பேணி, மன்மதன் போல் ஆடம்பர வாழ்வில் ஈடுபட்டு, இறந்த பின், கழுகுகள் இவ்வுடல் மலை குகையா, பொதி சோறா என்று எண்ணி, விரும்பி உண்ணுவதற்கு முன், பாம்பு சுற்றிய காலை உடைய மயில் மீது வந்து எனக்கு அருள் புரிவாயாக
அரக்கு மாளிகையில் பாண்டவர்களை அடைத்து,நெருப்பை இட்ட துரியோதனன நாட்டை விட்டும் போகும்படி பல சூதாட்டங்களில் ஏற்பட்ட விதிப்படி அவர்கள் காட்டுக்குப் போய், அஞ்ஞாத வாசம் செய்யும்போது, முடிவு நாள் வந்தவுடன் பாரதப் போரை மேலே நடக்கச் செய்த திருமாலின் மருகனே சூரனின் கோட்டையை அழித்தவனே யமனை உதைத்த பார்வதிக்கு இனிமை தரும் வள்ளிக்குக் கணவனேஎனக்கு அருள் புரிவாயாக
அரக்கு மாளிகையில் பாண்டவர்களை அடைத்து,நெருப்பை இட்ட துரியோதனன நாட்டை விட்டும் போகும்படி பல சூதாட்டங்களில் ஏற்பட்ட விதிப்படி அவர்கள் காட்டுக்குப் போய், அஞ்ஞாத வாசம் செய்யும்போது, முடிவு நாள் வந்தவுடன் பாரதப் போரை மேலே நடக்கச் செய்த திருமாலின் மருகனே சூரனின் கோட்டையை அழித்தவனே யமனை உதைத்த பார்வதிக்கு இனிமை தரும் வள்ளிக்குக் கணவனேஎனக்கு அருள் புரிவாயாக
கசை மூணு - சுழுமுனை, இடைக்கலை, பிங்கலை என்னும் மூன்று நாடிகள்
ஒப்புக
1 ஏட்டின் விதிப்டி
நமனோட்டிவிடக் காய்ந்துவரி வேதனடை யாளமருள் சீட்டுவரக்
காண்டுநலி காலனணுகா— திருப்புகழ், வாட்டியெனைச்சூழ்
2 பூட்டு மணிப்பத மாமயில்
நாக பந்தம யூரா நமோ நமோ ---திருப்புகழ், நாதவிந்துகலாதீ
3 கூற்று மரித்திட
சிவபத்தினி கூற்றினை மோதிய பதசத்தினி
---திருப்புகழ், சதுரத்தரை
சீராரும் மார்க்கண்டன் செய்த பூஜனைக்காகச் சினந்து கூற்றைப்
பாராரும் விண்ணவரும் பன்னகரும் காண இடப்பாதத்தாலே
காராரும் கரத்தளவினுலகில் விழவுதைதத்தருளி
வாராரு முலைமடந்தை யருபாகன் இருதாளை மனத்துள் வைப்போம்.
- அபிராமி அந்தாதி
அருணகிரியாரின் இந்த அழகிய திருப்புகழ் பாடலை ஒருமுறை என் சித்தியும், திருப்புகழின் பெருமையைப் பரப்பி வருபவருமான திருமதி ராதா முத்துசாமி சென்னையை அடுத்த பள்ளிக்கரணை எனும் ஊரில் ஒரு முருகபக்தர் வீட்டில் பாடிக்கொண்டிருக்கும்போது நிஜமாகவே ஒரு நாகப்பாம்பு வீட்டின் தாழ்வாரம் வரை வந்திருந்து நின்று தலையெடுத்து பாடல் முடிந்த பின்னர் மெதுவாக சென்றுவிட்டதையும் இன்றைக்கும் சொல்லுவார். சாட்சாத் முருகன் அவனே பாம்பு வடிவில் வந்து இந்தப் பாடலைக் கேட்டுவிட்டுப் போனான் என்பார்.