233
சீகாழி
தானத்தன தானன தந்த தானத்தன தானன தந்த
தானத்தன தானன தந்த தனதான
ஊனத்தசை தோல்கள்சு மந்த காயப்பொதி மாயமி குந்த
ஊசற்சுடு நாறுகு ரம்பை மறைநாலும்
ஓதப்படு நாலுமு கன்ற னாலுற்றிடு கோலமெ ழுந்து
ஓடித்தடு மாறியு ழன்று தளர்வாகிக்
கூனித்தடி யோடுந டந்து ஏனப்படு கோழைமி குந்த
கூளச்சட மீதையு கந்து புவிமீதே
கூசப்பிர மானப்ர பஞ்ச மாயக்கொடு நோய்கள கன்று
கோலக்கழ லேபெற இன்று அருள்வாயே
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள்ப கர்ந்து
சேனைச்சம ணோர்கழு வின்கண் மிசையேறத்
தீரத்திரு நீறுபு ரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
தீமைப்பிணி தீரவு வந்த குருநாதா
கானச்சிறு மானைநி னைந்து ஏனற்புன மீதுந டந்து
காதற்கிளி யோடுமொ ழிந்து சிலைவேடர்
காணக்கணி யாகவ ளர்ந்து ஞானக்குற மானைம ணந்து
காழிப்பதி மேவியு கந்த பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
குகஸ்ரீ ரசபதி விரிவுரை
ஒப்புக

நிலையில்லாத உடலைப் பேணி, பிரமனால் படைக்கப்பட்ட இந்த குடிலில் எழுந்து, வளர்ந்து, நோய் வாய்ப் பட்டு நான் அழியாமல், உனது அழகிய திருவடியைப் பெறுமாறு இன்று அருள் புரிவாயாக
சேனன் என்னம் பட்டப் பெயர் சூடிய சமணர்களைச் சம்பந்தராக அவதரித்து, ஞானத் தமிழ் நூல்களாகிய தேவாரப் பாடல்களைப் பாடி, கழுவில் ஏறும்படி செய்து,பின் திரு நீறு தந்து, பாண்டியனின் நோயை நீக்கிய குருநாதா தினைப் புனத்தில் காவல் புரிந்த வள்ளியை விரும்பி வேடர்கள் காணும்படி வேங்கை மரமாகி நின்று,அவளை மணம் புரிந்த பெருமாளே உன்னுடைய கோலக் கழலைப் பெற இன்று அருள்வாயே

1 சேனக் குரு
சேனைக் குரு = சமண குருக்கள் சேனன் என்னும் பட்டத்தைத் தாங்கி இருந்தார்கள்
சந்து சேனனும் இந்து சேனனும் தரும சேனனும் கருமைசேர்
கந்து சேனனும் கனக சேனனும் முதலதாகிய பெயர் கொளா
--- சம்பந்தர் தேவாரம்
2 குரு கூடல்
சம்பந்தர் காலத்தில் மதுரையில் பாண்டிய நாட்டில் சமண குருக்களால் சமண மதம் மிகப் பரவி இருந்தது
திகுதிகென மண்ட விட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி வாருகர்------------ -திருப்புகழ்,திடமிலி
3 காணக் கணியாக வளர்ந்து
வேங்கை யடவி மறவர் ஏங்க வனிதை யுருக
வேங்கை வடிவு வருவுங் குமரேசா ------ - திருப்புகழ், கோங்கமுகை
சேனைச்சம ணோர்கழு வின்கண் மிசையேறத்
தீரத்திரு நீறுபு ரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
தீமைப்பிணி தீரவு வந்த குருநாதா
சம்பந்தர் தொடர்பு கொண்ட இந்த வரலாற்று நிகழ்ச்சியை பாடல் 187 விளக்கத்தில் காணலாம்
சீகாழிக்கு பன்னிரண்டு பெயர்கள்
1 வேணுபுரம் கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூசித்த தலம்
2 திருப்புகலி சூரனுக்கு அஞ்சி தேவர்கள் புகலிடமாக வந்த தலம்
3 வெங்குரு பிரகஸ்பதி பூசித்த தலம்
4 பூந்தராய் பூவும் தாரையும் பூசித்த தலம்
5 சிரபுரம் அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத்
திரும்பப் பெற பூசித்த தலம்
6 புறவம் புறாவான பிரசாபதி என்னும் முனிவர் தம்
உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம்
7 சண்பை சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூசித்த தலம்
8 சீகாழி காளி என்னும் நாகம் பூசித்த தலம்
9 கொச்சை பராசர முனிவர் மற்ற ரிஷிகளiன் சாபத்தால் துர்க்கந்தம்உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம்
10 கழுமலம் ஆன்மாக்களiன் மலம்கழுவப்படுகின்ற தலம்
11 பிரமபுரம் பிரமன் பூசித்த தலம்
12 தோணிபுரம் பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது