228.புலவரை ரக்ஷிக்கும்
228 சிக்கல் (நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ளது)
மிக அருமை பட்டு உன் பாத தாமரை
சரணம் என பற்றும் பேதையேன் மிசை
விழி அருள் வைத்து குன்றாத வாழ்வையும் அருள்வாயே
தனதன தத்தத் தந்தான தானன
தனதன தத்தத் தந்தான தானன
தனதன தத்தத் தந்தான தானன தனதானா
புலவரை ரக்ஷிக் குந்தாரு வேமது
ரிடகுண வெற்பொக் கும்பூவை மார்முலை
பொருபுய திக்கெட் டும்போயு லாவிய புகழாளா
பொருவரு நட்புப் பண்பான வாய்மையி
லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல
பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய கவிபாடி
விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள்
எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு மிடிதீர
மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை
சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை
விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு மருள்வாயே
இலகிய வெட்சிச் செந்தாம மார்புய
சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல்
இமயம கட்குச் சந்தான மாகிய முருகோனே
இளையகொ டிச்சிக் கும்பாக சாதன
னுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயக
எழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன் மருகோனே
அலர்தரு புட்பத் துண்டாக்ம் வாசனை
திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி யிசையாலே
அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
அசுரரை வெட்டிச் சங்கார மாடிய பெருமாளே.
பதம் பிரித்து உரை
சுருக்க உரை

புலவர்களை ஆதரிக்கும் கற்பகத் தருவே. எட்டுத் திக்குகளிலும் பரவிய புகழ் உடையவனே. சத்திய நிலையில் உனக்கு ஒப்பானவர் யாருமில்லை என்று நல்ல பொருள் கொண்ட சொற்களை அமைத்து, அருமையான பாடல்களைப் பாடி, தமிழை ஆதரிப்பதற்கு உன்னைப் போல் கொடையாளிகள் யார் தான் உள்ளார்கள் என்று நிரம்பப் புகழ்ந்து, உலோபிகளிடம் என் குறைகளை முறையிடும் தரித்திர நிலை நீங்க, உனது திருவடித் தாமரைகளைப் பற்றியுள்ள பேதையாகிய என்னிடம் அருள் வைத்து எனக்குப் பேரின்ப வாழ்வைத் தந்தளுக.
வெட்சி மாலை அணிந்த மார்பை உடையவனே, இமய மலைப் பயந்தருளிய பார்வதியின் மைந்தனே, மலை நாட்டுப் பெண்ணாகிய வள்ளிக்கும், இந்திரன் பெற்ற ஒப்பற்ற தேவசேனைக்கும் நாயகனே, எழில் மிக்க திருமேனி படைத்தத் திருமாலின் மருகனே, அழகு பெற்று விளங்கும் சிக்கல் என்னும் தலத்தில் வீறிருக்கும் வேலனே, அசுரர்களை வெட்டி அழித்த பெருமாளே, எனக்குக் குன்றாத வாழ்வை அளித்து அருள்வாய்.
சிக்கல் முருக வேளின் திருப் பெயர் சிங்கார வேலர்.