163.எழுதிகழ்
தனதன தனன தனதன தனன
தனதன தனன தனதான
எழுதிகழ் புவன நொடியள வதனி
லியல்பெற மயிலில் வருவோனே
இமையவர் பரவி யடிதொழ அவுணர்
மடிவுற விடுவ தொருவேலா
வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
வழிபட மொழியு முருகேசா
மலரடி பணியு மடமகள் பசலை
மயல்கொடு தளர்வ தழகோதான்
முழுகிய புனலி லினமணி தரள
முறுகிடு பவள மிகவாரி
முறையொடு குறவர் மடமகள் சொரியு
முதுமலை யழக குருநாதா
பழகிய வினைகள் பொடிபட அருளில்
படிபவ ரிதய முறுகோவே
பருவரை துணிய வொருகணை தெரிவ
பலமலை யடைய பெருமாளே
-162குன்றுதோறாடல்
தனதன தனன தனதன தனன
தனதன தனன தனதான
எழுதிகழ் புவன நொடியள வதனி
லியல்பெற மயிலில் வருவோனே
இமையவர் பரவி யடிதொழ அவுணர்
மடிவுற விடுவ தொருவேலா
வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
வழிபட மொழியு முருகேசா
மலரடி பணியு மடமகள் பசலை
மயல்கொடு தளர்வ தழகோதான்
முழுகிய புனலி லினமணி தரள
முறுகிடு பவள மிகவாரி
முறையொடு குறவர் மடமகள் சொரியு
முதுமலை யழக குருநாதா
பழகிய வினைகள் பொடிபட அருளில்
படிபவ ரிதய முறுகோவே
பருவரை துணிய வொருகணை தெரிவ
பலமலை யடைய பெருமாளே
-162குன்றுதோறாடல்
சுருக்க உரை
ஏழு உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் மயில் மீது ஏறி வலம் வந்தவனே, தேவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கி அவுணர்கள் மாளும்படி வேலைச் செலுத்தியவனே, சங்கப் புலவர்களுக்கு அகப் பொருள் விளக்கத்தை உரைத்தவனே.
உனது மலரடி பணியும் இந்த மட மகள் மயல் கொண்டு வருந்தலாமோ? நல்ல முத்துக்களைக் குறச்சிறுமிகள் வாரி வழங்கும் முதுகிரியில் உறைகின்ற குருநாதனே, வினைகள் அழியும்படி அடியார்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும் தலைவனே, கிரௌஞ்ச மலை பொடிபட வேலாயுதத்தைச் செலுத்தியவனே, இந்தப் பெண் மயல் கொண்டு தளர்வது அழகோ தான்?

விளக்கக் குறிப்புகள்
1 தமிழில் ஒரு பொருள் அதனை....
இறையனார் அகப் பொருளுக்குச் சங்கப் புலவர் பலரும் செய்து வந்த
உரைகளைத் தனித்தனியே கேட்க, மதுரையில் ஊமைப் பிள்ளையாய் உருத்ர
சன்மன் என்ற பெயருடன் தோன்றிய முருகவேள், நக்கீரர் செய்த உரையை
மட்டும் கேட்டு வியந்தார்.
2. முறையொடு குறவர் மடமகள் சொரியு முதுமலை...
மணித் தரளங்கள் வரத் திரண்டங்
கெழிற் குறவர் சிறுமிமார்கள்
முறங்களினாற் கொழித்து மணி செல விலக்கி
முத்துலைப் பெய் முதுகுன்றமே) --சம்பந்தர் தேவாரம்.
3. வழுதியர்...
பாண்டியர்கள் போற்றி வளர்த்த தமிழ்.