Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    119.உடையவர்கள்
    உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
    யுளமகிழ ஆசு கவிபாடி
    உமதுபுகழ் மேரு கிரியளவு மான
    தெனவுரமு மான மொழிபேசி
    நடைபழகி மீள வறியவர்கள் நாளை
    நடவுமென வாடி முகம்வேறாய்
    நலியுமுன மேயு னருணவொளி வீசு
    நளினஇரு பாத மருள்வாயே
    விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்
    விகிர்தர்பர யோகர் நிலவோடே
    விளைவுசிறு பூளை நகுதலையொ டாறு
    விடவரவு சூடு மதிபாரச்
    சடையிறைவர் காண உமைமகிழ ஞான
    தளர்நடையி டாமுன் வருவோனே
    தவமலகு நீல மலர்சுனைய நாதி
    தணிமலையு லாவு பெருமாளே

    -119 திருத்தணிகை



    பதம் பிரித்து உரை
    உடையவர்கள் எவர் எவர்கள் என நாடி
    உள(ம்) மகிழ ஆசு கவி பாடி


    உடையவர்கள் ஏவர் எவர்கள் என நாடி = (பொருள்) உடையவர்கள் எவர் எவர் என்று தேடிச் சென்று உள(ம்) மகிழ = மனம் மகிழும்படி ஆசு கவி பாடி = அவர்கள் மீது ஆசு கவிகளைப் பாடி.


    உமது புகழ் மேரு கிரி அளவும் ஆனது
    என உரமுமான மொழி பேசி


    உமது புகழ் மேரு கிரி அளவும் ஆனது = உங்களுடைய புகழ் மேரு மலையைப் போல் மிக உயர்ந்தது என் = என்று. உரமுமான =மிகப் பலமான மொழி பேசி= துதி மொழிகளைப் பேசி.


    நடை பழகி மீள வறியவர்கள் நாளை
    நடவும் என வாடி முகம் வேறாய்


    நடை பழகி = பல நாள் போய்ப் பழகியும் வறியவர்கள் மீள =தரித்திரர்களாகவே மீளும்படி. நாளை = நாளைக்கு வா என்றே. நடவும் = வெளியே செல்லுங்கள் என = என்று அவர்கள் கூறவாடி = மனம் வாட்டமுற்று. முகம் வேறாய் = முகமும் வேறுபட்டு.


    நலியும் முனமே உன் அருண ஒளி வீசு
    நளின இரு பாதம் அருள்வாயே


    நலியும் முனமே = (நான்) வருந்தும் முன்னரே உன் அருண ஒளி வீசும் = உனது செவ்விய ஒளி வீசும் நளின = தாமரை போன்றஇரு பாதம் அருள்வாயே = இரண்டு திருவடிகளை அருள் புரிவாயாக.


    விடை கொளுவு பாகர் விமலர் திரி சூலர்
    விகிர்தர் பர யோகர் நிலவோடே


    விடை கொளுவு பாகர் = இடப வாகனத்தை உடையவர் விமலர் = பரிசுத்தமானவர் திரி சூலர் = திரி சூலத்தை ஏந்தியவர் விகிர்தர் = கடவுள் பர யோகர் = மேலான யோகத்தினர்நிலவோடே = பிறைச் சந்திரனுடன்.


    விளவு சிறு பூளை நகு தலை ஒடு ஆறு
    விட அரவு சூடு அதி பார


    விளவு = கூவிளம் (வில்வம்) சிறு பூளை = சிறிய பூளைப்பூ. நகை = பல்லோடு கூடிய தலையொடு = வெண்டலை ஆறு = கங்கை நதி விட அரவு = விஷப் பாம்பு சூடு = இவை களைச் சூடியுள்ளஅதி பார = மிகவும் கனமான.


    சடை இறைவர் காண உமை மகிழ ஞான
    தளர் நடை இடா முன் வருவோனே


    சடை இறைவர் காண = சடையை உடைய சிவபெருமான்.காண = காணவும் உமை மகிழ = பார்வதி தேவி மனம் மகிழவும்ஞான தளர் நடை இடா முன் = குழந்தை நடை இட்டு அவர்கள் முன்பு வருவோனே = வருபவனே.


    தவ மலரும் நீல மலர் சுனை அநாதி
    தணி மலை உலாவு பெருமாளே.




    தவ = மிகுதியாக மலரும் = மலரும் நீல மலர் சுனை =நீலோற்பலச் சுனையை உடைய அநாதி = மிகப் பழமையானதணி மலை உலாவு பெருமாளே = திருத்தணிகை மலையில் உலவி வரும் பெருமாளே.








    1.பர யோகியர்...
    பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி -- திருநாவுக்கரசர் தேவாரம்
    பண் ஆர் நால்மறை பாடும் பரமயோகி -- சம்பந்தர் தேவாரம்


    2 நகுதலையொடு....
    பல்லார் பகுவாய நகு வெண்டலை சூடி
    -- சம்பந்தர் தேவாரம்
Working...
X