Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    103.குமரகுருபர
    குமரகுருபர முருக சரவண
    குகசண் முககரி பிறகான
    குழக சிவசுத சிவாய நமவென
    குரவ னருள்குரு மணியேயென்
    றமுத இமையவர் திமிர்த மிடுகட
    லதென அநுதின முனையோதும்
    அமலை அடியவர் கொடிய வினைகொடு
    மபய மிடுகுர லறியாயோ
    திமிர எழுகட லுலக முறிபட
    திசைகள் பொடிபட வருசூரர்
    சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
    திறைகொ டமர்பொரு மயில்வீரா
    நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
    நதிகொள் சடையினர் குருநாதா
    நளின குருமலை மருவி யமர்தரு
    நவலுல மறைபுகழ் பெருமாளே.



    -103 திருவேரகம்



    பதம் பிரித்து உரை


    குமர குருபர முருக சரவண
    குக சண்முக கரி பிறகான


    குமர = குமரனே குருபர முருக = குருவாகிய முருகனே சரவண =சரவணப் பொய்கையில் உதித்தவனே குக = குகனே சண்முக =ஆறு திருமுகங்களை உடையவனே [முற்றுமுணர்தல் [ஸர்வஞ்ஞத்வம்], வரம்பில் இன்புடைமை [திருப்தி],என்றும் அறிபவன் [அநாதிபோதம்], தன்வயத் தனாதல் [ஸ்வதந்த்ரம்], பேரருளுடைமை [அலுப்த சக்தி],முடிவிலா ஆற்றலுடைமை [அநந்த சக்தி] என்ற ஆறு குணங்களும் முகங்களாக விளங்கும் ஆறுமுகப் பெருமானே!]கரி = யானை முகத்தை உடைய கணபதிக்கு பிறகான = பின் பிறந்த.


    குழக சிவ சுத சிவய நம என
    குரவன் அருள் குரு மணியே என்று


    குழக = அழகனே, இளையவனே சிவ சுத = சிவபெருமானுடைய குமாரனே சிவய நம என = சிவாய நம என்னும் ஐந்தெழுத்துக்கு குரவன் = குருவாகிய சிவபெருமான் அருள் =அளித்த குரு மணியே என்று = குரு மணியே என்று.


    அமுத இமையவர் திமிர்தம் இடு கடல்
    அது என அநுதினம் உனை ஓதும்


    அமுத இமையவர் = அமுதத்தைத் தேவர்கள். திமிர்தம் இடு =போரொலியுடன் (கடைந்த). கடல் அது என = கடல் ஒலியோ என்று சொல்லும்படி அநுதினம் = நாள்தோறும். உனை ஓதும் =உன்னை ஓதுகின்ற.


    அமலை அடியவர் கொடிய வினை கொடும்
    அபயம் இடு குரல் அறியாயோ


    அமலை அடியவர் = தினந்தோரும் உன்னையெண்ணி அபயம் காத்தருள்க என வேண்டும் அடியவர்களின் கொடிய = கொடியதான வினை கொடும் = வினைகளை நீக்கும் பொருட்டு அபயம் இடு குரல்= ஓலமிடுகின்ற குரல் ஒலியை அறியாயோ = நீ உணர்ந்தது இல்லையோ?


    திமிர எழு கடல் உலகம் முறிபட
    திசைகள் பொடிபட வரு சூரர்


    திமிர = இருண்ட எழு கடல் உலகம் = ஏழு கடல்களும்உலகங்களும் முறிபட = அழிபடவும் திசைகள் பொடிபட =திசைகள் பொடிபடவும் வரு சூரர் = (போருக்கு) வந்த சூர்களுடைய.


    சிகர முடி உடல் புவியில் விழ உயிர்
    திறை கொடு அமர் பொரும் மயில் வீரா


    சிகர முடி உடல் = உச்சி முடியும் உடலும் புவியில் விழ = பூமியில் விழும்படி. உயிர் திறை கொடு = (அவர்களுடைய) உயிரைக் கவர்ந்து கொண்டு அமர் பொரு = போரைப் புரிந்த மயில் வீரா =மயில் வீரனே.


    நமனை உயிர் கொளும் அழலின் இணை கழல்
    நதி கொள் சடையினர் குருநாதா


    நமனை உயிர் கொளும் = காலனின் உயிரையும் கவர்ந்தஅழலின் = நெருப்பை ஒத்த இணை கழல் = இரண்டு திருவடிகளையும் நதி = கங்கை ஆற்றையும் கொள் சடையினர் =கொண்ட சடையை உடைய சிவபெருமா னுடைய குரு நாதா =குரு நாதனே.


    நளின குரு மலை மருவி அமர் தரு
    நவிலு(ம்) மறை புகழ் பெருமாளே.


    நளின = தாமரை போன்று (இனிய) குரு மலை = சுவாமி மலையில் மருவி அமர் தரு = விரும்பிப் பொருந்தி வீற்றிருக் கும்பெருமாளே = பெருமாளே நவிலும் மறை புகழ் =சொல்லப்படுகின்ற வேதங்கள் புகழ்கின்ற பெருமாளே =பெருமாளே.



    அடைப்புக்குறி [ ] க்குள் இருப்பன நடராஜன் கொடுக்கும் விளக்கம்









    ஒப்புக


    முருகன் குமரன் குகனென் றுமொழிந்
    துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய் ......... . அநுபூதி
Working...
X