56. வெங்காளம்
வெங்கா ளபா ணஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற் குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப் பொருள்தேடி
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
வன்பே துன்பப் படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப் பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக் கினியோனே
குன்றே டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
ரும்போய் மங்கப் பொருகோபா
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
கன்றே வும்பர்க் கொருநாதா
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தார் செந்திற் பெருமாளே.
- 56 திருச்செந்தூர்
வெங்கா ளபா ணஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற் குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப் பொருள்தேடி
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
வன்பே துன்பப் படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப் பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக் கினியோனே
குன்றே டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
ரும்போய் மங்கப் பொருகோபா
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
கன்றே வும்பர்க் கொருநாதா
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தார் செந்திற் பெருமாளே.
- 56 திருச்செந்தூர்
சுருக்க உரை
விடம், அம்பு, சேல் இவைகளுக்கு ஒப்பான கண்கள், பால்,வெல்லம் இவைகளைப் போல் இனிய பேச்சு, இருளை நிகர்க்கும் கூந்தல் ஆகியவற்றைக் கொண்ட விலை மாதர்களின் தோள்களைக் கூடும் பொருட்டு, வேண்டிய பொருள் தேடுவதற்காக, பல நாடுகளுக்குப் போய்க் கொடிய துன்பங்கள் படலாமோ? வலிமை மிக்க தோள்களைக் கொண்ட குமரனே. அழகனே. இப்போதே வந்து என்னை ஆண்டருள்க.
பசிய தேனை உண்ட வண்டுகள் நிரம்பும் மலையில் வாழும் வள்ளியின் கொங்கைகளுக்கு இனிமையானவனே, ஏழு மலைகளும், கடலும், சூரனும் பட்டு அழிய கோபம் கொண்டவனே, எலும்பு மாலை அணிந்த சிவ பெருமானின் குழந்தையே, தேவர்கள் தலைவனே, சங்குகள் தவழும் கடற்கரைத் தலமாகிய திருச் செந்தூரில் வீற்றிருப்பவனே,என்னை இப்போதே வந்து ஆண்டருள்க.

ஒப்புக
குன்று ஏழும்...
குன்று கிரவுஞ்சம் அல்ல. சூரனுக்கு அரணாயிருந்த ஏழு மலைகள்
கடலழக் குன்றழச் சூரழ............................................................... கந்தர் அலங்காரம்