53. வரியார்
வரியார் கருங்கண் மடமாதர்
மகவா சைதொந்த மதுவாகி
இருபோ துநைந்து மெலியாதே
இருதா ளினன்பு தருவாயே
பரிபா லனஞ்செய் தருள்வோனே
பரமே சுரன்ற னருள்பாலா
அரிகே சவன்றன் மருகோனே
அலைவா யமர்ந்த பெருமாளே.
- 53 திருச்செந்தூர்
வரியார் கருங்கண் மடமாதர்
மகவா சைதொந்த மதுவாகி
இருபோ துநைந்து மெலியாதே
இருதா ளினன்பு தருவாயே
பரிபா லனஞ்செய் தருள்வோனே
பரமே சுரன்ற னருள்பாலா
அரிகே சவன்றன் மருகோனே
அலைவா யமர்ந்த பெருமாளே.
- 53 திருச்செந்தூர்
சுருக்க உரை
இரேகைகள் கொண்ட கண்களை உடைய மாதர்கள்,குழந்தைகள், என்னும் பந்தத்தால் நான் அகப்பட்டவனாகி,பகல், இரவு ஆகிய இரண்டு பொழுதுகளிலும் மனம் வருந்தி உடல் மெலிந்து போகாமல், உனது இரு திருவடிகளின் மீது அன்பைத் தந்து அருளுக. உலகைக் காத்து அருள்வோனே. பரம சிவன் அருளிய குழந்தையே. திருமாலின் மருகனே.
கடல் அலைகள் மோதும் திருசீரலைவாய் என்னும் திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே, உன் தாளில் நான் இடையறாது வளரும் அன்பைத் தருவீர்.