Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html


    7.கருவடைந்து


    கருவ டைந்து பத்துற்ற திங்கள்
    வயிறி ருந்து முற்றிப்ப யின்று
    கடையில் வந்து தித்துக்கு ழந்தை வடிவாகிக்
    கழுவி யங்கெ டுத்துச்சு ரந்த
    முலைய ருந்து விக்கக்கி டந்து
    கதறி யங்கை கொட்டித்த வழந்து நடமாடி
    அரைவ டங்கள் கட்டிச்ச தங்கை
    இடுகு தம்பை பொற்சுட்டி தண்டை
    அவைய ணிந்து முற்றிக்கி ளர்ந்து வயதேறி
    அரிய பெண்கள் நட்பைப்பு ணர்ந்து
    பிணியு ழன்று சுற்றித்தி ரிந்த
    தமையு முன்க்ரு பைச்சித்தம் என்று பெறுவேனோ
    இரவி இந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
    னரச ரென்றும் ஒப்பற்ற உந்தி
    யிறைவன் எண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்
    எரிய தென்றும் ருத்ரற்சி றந்த
    அநும னென்றும் ஒப்பற்ற அண்டர்
    எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனமேவ
    அரிய தன்ப டைக்கர்த்த ரென்று
    அசுரர் தங்கி ளைக்கட்டை வென்ற
    அரிமு குந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே
    அயனை யும்ப டைத்துச்சி னந்து
    உலக மும்ப டைத்துப்ப ரிந்து
    அருள் பரங்கி ரிக்குட்சி றந்த பெருமாளே.



    - திருப்பரங்குன்றம்



    சுருக்க உரை
    நான் தாயின் கருவில் சேர்ந்து, பத்து மாதங்கள் வளர்ந்து, குழந்தை
    வடிவமாகத் தோன்றி, முலைப் பாலை உண்டு, வளர்ந்து, தவழ்ந்து,
    நடமாடி, பல அணிகலன்களை அணிந்து, வயது ஏறி, பெண்கள் நட்பைப் பெற்று, பிணியால் வாடி, சுற்றத் திரிந்தது போதும். இனி உனது கிருபைச் சித்தம் என்று பெறுவேன்?


    சூரியனும், இந்திரனும் குரங்களுக்கு அரசரான சுக்ரீவன், வாலி என்றும், பிரமன் சாம்பவன் என்றும், நீலன் நெருப்பின் தலைவன் என்றும், உருத்திரன் அநுமான் என்றும், மற்ற தேவர்களும் இவ்வகையாகப் பூமியில் வந்து அவர்களைத் தன் படைகளுக்குத் தலைவராகக் ண்டு, அரக்கர்களின் கூட்டத்தை வென்ற திருமாலின் மருகனே. பிரமனையும் கோபித்து, உலகையும் படைத்துத் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. உனது திருவருளை என்று பெறுவேன்?





    குகஸ்ரீ ரசபதி விரிவுரை


    பயனாக வர பலம் பெற்றான், அரக்கர் குலத்து அதிபதி ஆயினான், ஆள் பலமும் தோள் பலமும் அதிகரித்தன. அதனால் அநியாய தன் காலின் கீழ் உலகை அடக்கினான். மேலும் பொல்லா வழிகளில் புகுற்தான். அரிய பரத்தை அறவே மறந்தான். எதிர்ப்பாரின்றி இராவணன் இப்படி இருமாந்து இருந்தான்.
    ஒரு சமயம், அவன் தன் எடுப்பான விமானத்தில் ஏறினான். விரு விருத்த விமானம் விண்ணில் விரைந்தது. அது தன் கடும் வேகத்தை கையிலாயத்து அருகிலும் காட்டியது. காவலர் நந்தி தேவர் கண்டார். கனன்றார். எழுந்து குதித்தார். எதிர் வந்து தடுத்தார். இராவணா, இது திருமலை என்று அறியாயா ? முதல்வன் மலை மேல் செல்வது முறையாமா ? எனறார்.
    ஏய் நந்தி, எனக்குமா தடை ?. இங்கிருப்பவன் ஈசன், நான் இலங்கேசன், நீ குரங்கீசன், வழிவிடு என சீறினான். ஆத்திரம் நந்திக்கு அதிகரித்தது. குரங்கா நான்? , அட பதரே, உன் குலமும் அரசும் குரங்கால் அழியும், நிமலன் அடியாரை நிந்தனை செய்வோர் இப்படித்தான் வேரற்று பொசுங்குவர் என்று கடும் சாபம் கொடுத்தார். இறைவர் திரு உள்ளம் அது ஆதலின் தீயோன் அவனை வெறுத்து திரும்பினார்.


    விமானம் மலைக்கு மேல் பறக்க விரைந்தது. முதல்வன் மலை மேல் முந்த முடியவில்லை. என்ன அது என இரைந்தான் இராவணன். - கடுகிய தேர் செல்லாது கயிலை மலை மீது - என வினயம் காட்டி கூறினான் விமான ஓட்டி என்னடா உளறுகிறாய் ? செலுத்து விமானத்தை. பிரபு சிறந்த நம் வீரத்தை இங்கு சிதற விடக் கூடாது இது சிவ மலை. செலுத்துகிறாயா இல்லையா ? இடி என முழங்கினான் இராவணன். இயல்பாக எழுகின்ற விமானத்தை தள்ளி முடுக்குவது தர்மமல்ல பிரபு என பயத்தோடு கூறினான் பாகன். அப்படியா என அதிர்ந்தான். ஓங்கி கன்னத்தில் அறைந்தான். சிறந்த விமானத்தை தானே செலுத்த முயன்றான். அது எள்ளளவும் நகரவில்லை. அதனால் பெரும் கோபம் பிறந்தது. தூய மலையை தூக்கி எறியத் துணிந்தான்.


    பெயர்க்கும் அவனைப் பெருமான் நோக்கினான். கட்டை விரலால் லேசாக கயிலையை அழுத்தினான். அந்த அளவில் இராவணனின் உடல் என்புகள் நெறு நெறு என நொறுங்கியது. விழி பிதுங்குவது போன்ற வேதனை தாங்காமல் ஹீம் ஹீம் அஹா அஹா என அலறி அண்ட சராசரம் அதிர அழுதான். சாம கானத்தால் சங்கரனைத் துதித்தான். எடுத்தகானம் வானமெல்லாம் ஆகி வளர்ந்தது. சாமகானம் சங்கராபரணமாகியது.


    பாடுவோருக்குப் பரிசளிக்கும் பரமன் இனிய கானத்திற்கு திருவுளும் இரங்கினான். ஊன்றிய தூய திருவடியை தூக்கினான். விடுதலை பெற்ற இராவணன் எதிரில் விமலன் விடை மேல் விளங்கினான். பெருமானைச் சேவித்த பெரும் பயனாக போன பலம் உடம்பில் புகுந்தது. அதனால் புளகிதம் அடைந்த இராவணன் போற்றினான். அவனுக்கு சந்திரஹாசம் எனும் வாளையும் நீடித்த ஆயுள் நாளையும் சிவம் வழங்கியது.
    இப்படி இன்பம் எய்திய இராவணன் இலங்கையை அடைந்தான். சில நாளில் மோசமான அரக்கர்கள் வந்து மொய்த்தனர். அவர்களின் கூட்டுறவால் பழைய இரக்கமற்ற இதயம் பிறந்தது. வாளும் ஆயுளும் மேலும் மமதையை வளர்த்தன. அதன் பின்னர் ககனர் ஆட்சியைக் கைப்பற்றினான். பாதாள உலகை பறிமுதல் செய்தான். அவனது பயங்கரமான கொடி மூவுலகிலும் படபடக்காரம் செய்தது. அந்த அராஜக ஆட்சியில் தேவர்கள் வாழ்வு தேய்ந்தது. தவசிகள் ஆட்சி தளர்ந்தது. அகில உலகங்களும் கதறி அழுதன.


    மண்ணும் விண்ணும் புண்ணியம் குன்றி ஆத்ம சக்தி எனும் புண்ணிய பேரொளி குன்றிய போது அரக்கர் இருள் எங்கும் அடர்ந்தது. எங்கும் ஏதம் எழுவது இயற்கை. அந்நிலையில் பரந்த உலகை மறைந்து காக்கும் தேவ சக்திகள் களை நீக்கி பயிர்களைக் காப்பவர் போல் உயிர்களுக்கு நேர்ந்த இடையூறுகளை ஒழிக்க மனித உருவில் வருவது உண்டு. வந்த வரலாகளும் பல உள.
    அம்முறையில் இராவணனின் ஆட்சியில் தேவசகாதிகள் மேருவில் கூடின. தேவர்கள் பலர் அங்கு திரண்டு வந்தனர். காம தகனா, முப்புரம் எரித்த முதல்வா, கா கா என்று தேவ சக்திகள் கதறின. வாளும் நாளும் அவனுக்கு நாம் ஒரு கையால் வழங்கினம். கொடுப்பது ஒரு கையாலும் கொல்வது ஒரு கையாலும் ஆகாது. ஆதலால் அரக்கர் அழிவை திருமாலே செய்வார் என்றார்.அப்படியே செய்வேன் என்றார் திருமால். தசரதன் மதலையாய் தரணியில் வருவேன். ஜனகர் மகளாய் திருமகள் வருவள். ஆதிசேடனும், ஆழியும், அரிய வாளும் அருமைத் தம்பியராய் அவனியில் அமைவர். எனக்கு முன் நீங்கள் வானரங்களாய் பிறந்து வர வேணும் என அருளி ஆதிமாதவர் அகன்றார்.


    என் அம்சம் ஜாம்பவானாய் எழும்பி வரும் என்றான் நான்முகன். வாலி என் அம்சமாய் வருவான் என்றார் சூரியன். சுக்ரீவன் என் அம்சம் என்றான் இந்திரன். நீலனாய் என் அம்சம் நிலத்தில் பிறக்கும் என்றான் அக்னி. அருமை உருத்திரனும் வாயுவும் அநுமான் என்றனர் பலர் . இந்த முடிவின் படி எவரும் பிறந்தனர்.


    வாக்களித்தபடி திருமால் தசரதன் களிக்கத் தோன்றி, தாடகை உரத்தைப் போக்கி, அகலிகை சாபம் நீக்கி, மங்கள ஜானகியை மணந்து, கைகேயியின் வஞ்சக சூழ்ச்சியால் கனகம் எய்தி, சீதையை இராவணன் சிறை எடுக்க, அவளை மீட்கும் வேட்கையை மேற்கொண்டு, பேசிய வண்ணம் பிறந்திருக்கும் குரங்கினங்களின் துணை கொண்டு இலங்கை எய்தி, அரக்கர் பூண்டை கருவறுத்த வரலாறு இராமாயணமாக மலர்ந்திருக்கிறது. இவ்வளவும் செய்தவரை அரிமுகுந்தர் என்று அருமை பெற அறிவித்தார். அரி = பகைமையை அழிவிப்பவர் எனும் பொருள் பெயர்.


    அரக்கரை கருவறுக்க நான் அடிக்கடி அவதரிப்பேன். ஏத்துவார் இதயத்திலிருந்து அசுர உணர்வையே அழிக்கிறான் முருகன் எனும் பொருளில் முகுந்தன் மெச்சும் மருகோனே எனும் பகுதி என்றும் எவரும் எண்ணுவதற்கே ஓரெழுத்தை உணரான், நான்கு வாயாலும் ஓயாமல் வேதம் ஓதுகிறான். வேதன் என்ற பெயரோடும் விளங்குகிறான். அனைத்தும் அறிவேன் எண்றும் இறுமாக்கிறான். படைப்பான் மனநிலை அதுவாயின் படைக்கப் பொருளும் பழுதடையும். இங்கனம் எண்ணிய குமரன் அவனைக் குட்டி சிறையிட்டு குணப்படுத்தினான். இங்ஙனம் சினத்தலில் மறமும், பரிதலில் அருளும் காட்டி பரங்கிரியில் செவ்வேள் சிறந்த சேவை தரும் அருமையே அருமை.


    பத்துத்தலை இராவணும் பழுதுகள் பல செய்தான். நான்கு தலை பிரமனும் நன்னெறி மறந்தான். இருவரும் முற்றக் கற்கும் முட்டாள்கள் ஆயினர். ஒரு தலையும் இரு கைகளையும் உடைய அடியேன் தந்தை கருவில் இருந்தேன். தாய் கருவில் மாறினேன். அங்கிருந்த போது வாழும் துர்கந்தத்தில் பழகினேன் பிறந்தேன். தொடுவதற்கும் தகுதியற்ற அசுசியாய் இருந்த என்னை தூய்மை செய்த பின் தொட்டனர். தாயின் உடல் சத்துவம் பாலாகி சுரக்க அதைப் பருகினேன். வளர்ந்தது உடல். வளமான உடம்பிற்கு அணி பல செய்து அழகுபடுத்தினர். வர வர வளர்ந்தேன். வாலிபன் ஆனேன். பழைய வாசனை வர வர பாலித்தது. பாயும் நோயும் ஆனேன். இறந்தேன் பிறந்தேன். போதுமே பட்ட பாடு பிரபோ . தொல்லை இவை அனைத்தும் தொலைய உன் திருவுளக் கருபையை பேதையேன் என்று பெறுவேனோ என பிரார்த்தித்தபடி.




    விளக்கக் குறிப்புகள்
    அ. கருவடைந்து பத்துற்ற திங்கள்....
    (இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது
    கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
    தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
    ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
    யிச்சீர் பயிற்றவய தெட்டோடு மெட்டுவர
    வாலக் குணங்கள்பயில் கோலப் பெரும்பையர்க ளுடனுறவாகி...)
    - திருப்புகழ் (இத்தாரணிக்குள்)
    ஆ. வயதேறி அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து....
    (...வயதுபதி னாறு சென்று வடிவாகிக்
    கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று
    கனிவதுட னேய ணைந்து
    கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த
    கசடனெனை யாள வனுன்ற னருள்தாராய்) --- திருப்புகழ் (வனிதையுடல்)


    இ. அயனையும் புடைத்துச் சினந்து....
    (வேத நான்முக மறையோ னொடும்விளை
    யாடி யேகுடு மியிலை கரமொடு
    வீற மோதின மறவா குறவர்கு றிஞ்சியூடே) - திருப்புகழ் (காணொணாதது)
    (ஆர ணன்றனை வாதாடி யோருரை
    ஓது கின்றென வாராதெ னாவவ
    ணான வங்கெட வேகவ லாமதி லிடும்வேலா)--- திருப்புகழ் வாரணந்தனை)

    ஈ. உலகமும் படைத்து....
    பிரமனைச் சிறையில் வைத்த பின் முருகன் படைப்புத் தொழிலைத் தாமே மேற்கொண்டார்.
    (மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
    வளமைபெற வேசெய் முருகோனே..)--- திருப்புகழ் (எழுதுநிறைநாபி)
Working...
X