Courtesy: http://thiruppugazhamirutham.blogspo...012/09/80.html
2. பக்கரை
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டள்கை வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே.
பதம் பிரித்தல்
பத உரை
சுருக்க உரை
விரிவுரை குகஸ்ரீ ரசபதி

பக்கரை = அங்கவடி. { குதிரைக்கு முதுகில ஏறி உட்காருவதற்காக போடப்படும்அணி}
விசித்ர மணி = பேரழகான மணி.
பொன் கல்லணை இட்ட = பொன் நிறமான சேணம் (இவைகளைப் பூண்டு).
நடை = நடக்கும்.
பட்சி எனும் = பறவையாகிய.
உக்ர = மிடுக்குள்ள.
துரகமும் = (மயிலாகிய) குதிரையையும்.
நீப = கடம்ப (மரத்தின்).
பக்குவ மலர்த் தொடையும் = தக்க மலர் மாலையையும்.
அ = அந்த.
குவடு = (கிரௌஞ்ச) மலை.
பட்டு ஒழிய = அழிந்து ஒழியும்படி.
பட்டு உருவ = அதன் மேல் பட்டு ஊடுருவிச் செல்லும்படி.
விட்டு அருள் = விட்டருளிய.
கை = கையில் உள்ள.
வடிவேலும் = கூர்மையான வேலையும்.
திக்கு அது = திக்குகள்.
மதிக்க வரும் = மதிக்கும்படி எழுந்துள்ள.
குக்குடமும் = சேவலையும்.
ரட்சை தரு = காத்தளிக்கும்.
சிற்றடியும் = சிறிய திருவடிகளையும்.
முற்றிய = திரண்ட, வலிமைப்பெற்ற
பன்னிரு தோளும் = பன்னிரண்டு தோள்களையும்.
செய்ப்பதியும் = வயலூரையும்.
வைத்து = வைத்து.
உயர் திருப்புகழ் = உயர்ந்த திருப்புகழை.
விருப்பமொடு செப்பு என = விருப்பமோடு சொல்லுக என்று.
எனக்கு அருள்கை மறவேனே = எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன்.
இக்கு = கரும்பு. அவரை = அவரை.
நல் கனிகள் = நல்ல பழங்கள். சர்க்கரை = சர்க்கரை. பருப்புடன் நெய் = பருப்புநெய். எள் பொரி = எள், பொரி.
அவல் = அவல். துவரை = துவரை.
இள நீர் = இள நீர். வண்டு எச்சில் = தேன்.
பயறு அப்ப வகை = பயறு, அப்ப வகைகள்.
பச்சரிசி பிட்டு = பச்சரிசி, பிட்டு.
வெ(ள்)ளரிப் பழம் = வெள்ளரிப்பழம்.
இடி = மாவு.
பல் வகை = பல வகையான.
தனி = ஒப்பற்ற.
மூலம் = கிழங்குகள்.
மிக்க அடிசில் = சிறந்த உணவு (வகைகள்).
கடலை = கடலை (இவைகளை).
பட்சணம் எனக் கொள் = பட்சணமாகக் கொள்ளும்.
ஒரு = ஒப்பற்ற.
விக்கிந சமர்த்தர் = வினைகளை நீக்க வல்லவர்
என்னும் = என்று சொல்லப்படும்.
அருள் ஆழி = அருட் கடலே.
வெற்ப = (அருள்) மலையே.
குடில = வளைந்த. ( குடிலம் என்றால் குரா மலர் என்றும் பொருள் உண்டு –தொகுப்பாசிரியர்கள் )
சடில = சடையையும்.
வில் = (பினாகம்) என்னும் வில்லையும் (கொண்ட).
பரமர் அப்பர் அருள் = மேலான அப்பர் பெற்றருளிய.
வித்தக = திறலோனே.
மருப்பு உடைய பெருமாளே = (யானைக்) கொம்பு உடையபெருமாளே.

அங்கவடி, அழகிய மணி, சேணம் இவைகளைப் பூண்டு நடக்கும், மிடுக்கானமயிலான குதிரையையும், கடம்ப மரத்தின் மலர்களையும், கிரௌஞ்ச மலைபொடிபடச் செலுத்திய, கரத்தில் ஏந்திய வேலையும், திக்குகள் மதிக்கும்சேவலையும், வயலு\ரையும் வைத்துத் திருப்புகழ் பாடுக என்று எனக்கு அருள்செய்ததை நான் மறவேன்.
கரும்பு, அவரை, அப்பம் முதலிய உணவு வகைகளைப் பட்சணமாகக் கொண்டுவிக்கின சமர்த்தர் என்று பெயர் கொண்ட அருள் கடலே, அருள் மலையே. வளைந்த சடையைக் கொண்ட சிவபெருமான் அருளிய திறலோனே. யானைக்கொம்பு உடைய பெருமாளே. திருப்புகழ் பாடுக எனக்குச் செப்பியதை நான்மறவேன்.

விளக்கக் குறிப்புகள்
இப்பாடல் விநாயகர் துதிப் பாடல்.
முத்ததை தரு என்ற பாடல் அடி எடுத்துக்கொடுத்த பிறகு அருணகிரியார் பாடியமுதல் பாடல் இதுதான். கைத்தல என்பது வழி வழியாக முதல் பாடலாகஇருந்தாலும் அருணகிரியார் பாடிய முதல் பாடல் இதுதான்
“எப்படிப் பாடுவது?” என்று கேட்ட அருணகிரியை வயலூருக்குவரச்சொல்லிவிட்டார். அங்கு சென்ற அருணகிரி மீண்டும் முருகனிடம்கேட்டபோது, தம்முடைய மயில், வேல், சேவல், மலர்மாலை, தம்முடைய திருவடி, பன்னிரு தோள்கள், தாம் அமர்ந்துள்ள பதி ஆகியவற்றை வைத்துப் பாடுமாறுகூறினார். ஆகவே, முதல் பாடலை விநாயக வணக்கமான பாடலாக அமைத்துஅதிலேயே,
முருகனுடைய மயில் – பக்கரை விசித்ர மணி பொற்கலனை இட்ட நடை
பட்சி எனும் உக்ர துரகம்,
மலர்மாலை – நீபப் பக்குவ மலர்த் தொடை
வேல் – அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேல்
சேவல் – திக்கு அது மதிக்க வரும் குக்குடம்
முருகனுடைய திருவடி – ரக்க்ஷ தரு சிற்றடி
பன்னிரு தோள் – முற்றிய பன்னிரு தோள்
முருகனுடைய திருப்பதி – செய்ப்பதி வைத்து உயர் திருப்புகழ்
விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே
முருகன் குறிப்பிட்ட அனைத்தையுமே அமைத்துப் பாடிவிட்டார். தாம் பாடுவதுதிருப்புகழ் என்று பெயரையும் குறிப்பிட்டுவிட்டார். அவர் இந்த அமைப்பில்பாடிய பதினாறாயிரம் பாடல்களும் திருப்புகழ் என்ற பெயரைப் பெற்றன. இதில்இன்னொரு விசேஷமும் உண்டு. விநாயகப் பெருமானுக்கு உகந்தநைவேத்தியங்களையெல்லாம் வரிசையாகப் பட்டியல் போட்டிருக்கிறார்.
இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள்பொரி, அவல், இளநீர், வண்டெச்சில்=தேன், பயறு அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள்ளரிப்பழம், இடியப்பம் வகையறா, தனிமூலம் மிக்க அடிசில், கடலை…..
இந்தப் பாடலை அருணகிரிநாதர் பாடியபோது விநாயகர் அதில் மிகவும்லயித்துப்போய், ரசித்து தலையை அசைத்துக் கேட்டாராம். திருப்புகழ் நூலுக்குஅதிகாரபூர்வமாகப் பாடப்பட்ட முதற்பாடல் வயலூர் விநாயகரைத் துதித்துமுருகனின் சிறப்பம்சங்களை அமைத்து முருகன் ஆணையிட்டது போலப் பாடிய‘பக்கரை விசித்ரமணி’ திருப்புகழ் பாடல்தான்.