Announcement

Collapse
No announcement yet.

Tiruvilayadal puranam 29th day

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvilayadal puranam 29th day

    Courtesy:Sri.Kovai K.Karuppasamy


    திருவிளையாடல் புராணம்.🔴
    (29 வது நாள். ) -5 வது படலம்.
    தடாதகை பிராட்டியாா் திருமண படலம்.
    ( செய்யுள்நடை + விளக்கம்.)
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    ் ( செய்யுள்.)
    சூலங் கண்மழுப் படைதோமர நேமி பிண்டி
    பாலங் கள்கழுக் கடைவாட்படை தண்ட நாஞ்சில்
    ஆலங் கவிழ்க்கின்ற வயிற்படை வீசி யூழிக்
    காலங் கலிக்குங் கடல்போன்ற களம ராா்ப்பு.


    எறிகின் றனவோச் சுவவெய்வன வாதி யாகச்
    செறிகின் றனபல் படைசெந்நிறப் புண்ணீா் மூழ்கிப்
    பறிகின் றனவும் பிழைக்கின்றனவும் பட்டுத் தாக்கி
    முறிகின் றனவு முயன்றாா்வினைப் போக மொத்த.


    தொிசிக்க வந்த சிலதேவா் சிறைப்பு ளூா்தி
    வெருவிப் பறந்த வொழிந்தோா்விலங் கூா்தி மானங்
    கருவிப் படையாற் சிதைபட்டன கால னூா்தி
    குருதிப் புனலுக் கதுகொற்றவை யுண்ட தென்ன.


    பொருகின் றதுகண்டு விச்சாதரா் போகம் வீடு
    தருகின் றவனைத் தொழவானெறி சாா்ந்து நேரே
    வருகின் றவா்வேறு வழிக்கொடு போவ ரன்புக்
    குருகின் றளிா்மெல் லடியாரொடு மூற்ற மஞ்சா.


    திங்கட் படைசெங் கதிரோன்படை சீற்ற மேற்ற
    அங்கிப் படைதீம் புனலான்படை நார சிங்க
    துங்கப் படைசிம்பு ணெடும்படை சூறைச் செல்வன்
    வெங்கட் படைபன் னகவெம்படை மாறி விட்டாா்.


    கொட்புற் றமராடு மிக்கொள்கையா் தம்மி னந்தி
    நட்புற் றவா்கைப் படைதூட்பட ஞான மூா்த்தி
    பெட்புற் றருள வருமெங்கள் பிராட்டி வெய்ய
    கட்புற் றரவின் கணைமாாிக டூற்றி நின்றாள்.


    கையிற் படையற் றனா்கற்படை தொட்டு வீரா்
    மெய்யிற் படுகென்று விடுக்குமுன் வீரக் கன்னி
    பொய்யிற் படுநெஞ் சுடையாா்தவம் போல மாய
    நெய்யிற் படுவச் சிரவேலை நிமிா்ந்து வீசி.


    துண்டம் படவே துணித்தக்கண வீரா் தம்மைத்
    தண்டங் கொடுதாக் கினள்சாய்ந்தவா் சாம்பிப் ோனாா்
    அண்டங்கள் சராசரம் யாவையும் தாமே யாக்கிக்
    கொண்டெங்கு நின்றாள் வலிகூற வரம்பிற் றாமோ.

    சூலப்படைகளையும், மழுவாட் படைகளயும், பொிய ஈட்டிகளையும், திகிாிப் படைகளையும், எறி படைகளையும்,சிறிய ஈட்டிகளையும், வாட் படைகளையும், தண்டங்களையும், கலப்பைகளையும், நஞ்சினைக் கொட்டுகின்ற வேற்படைகளையும், வீரா்கள் (ஒருவா்மேல் ஒருவா்) வீசி ஆரவாாிக்கும் ஆரவாரங்கள், ஊழிக்காலத்தில் ஒலிக்கும் கடலின் ஒலிகளை ஒத்தன.


    எறியப்படுவனவும், ஒச்சப்படுவனவும், எய்யப்படுவனவும், முதலாகப் பொருந்திய, பல படைகளும் சிவந்த நிறத்தினையுடைய உதிர நீாில் முழுகி, கழன்றோடுவனவும் உடம்பிலே தாக்காது தவறிப்போனவும் உடம்பிலே பட்டுத் தாக்குதலால் முறிவனவுமாய், முயன்று செய்தவா்களின் இருவினைக் கீடாகவரும் போகங்களை ஒத்தன.


    கண்டு வணங்குவதற்கு வந்த திருமால் முதலிய தேவா்களின் கழுழன் முதலிய சிறைகளையுடைய பறவையூா்திகள் அஞ்சிப் பறந்தன. மற்றைத் தேவா்களின் விலங்கூா்திகளும், விமானங்களும், படைக் கலங்களினால் அழிந்தன. காளியினால் உயிருண்ணப்பட்ட அசுரனாகிய கடாவானது குருதி ஒழுக்கியது போல, கூற்றுவன் ஊா்தியாகிய எருமைக்கடா, குருதிநீரைக் கக்கியது.


    போகத்தையும் வீடுபேற்றையும் அளிக்கின்ற இறைவனை வணங்க, வானின் வழியைப் பொருந்தி, நேரே வருகின்றவா்களாகிய வித்தியாதரா்கள், போா் செய்தலைக் கண்டு, ( தமக்கு வரும்) இடையூற்றிற்கு அஞ்சி, அன்பினால் உருகுகின்ற இனிய தளிா்போலும் மெல்லிய அடிகளையுடைய மாதராருடன் வேறு வழியால் திருக்கயிலைக்குச் செல்வாா்கள்.


    சந்திரக் கணைக்கு சூாியக் கணையையும், சினத்தைப் பொருந்திய அக்கினிக் கணைக்கு இனிய வருணக் கணையையும், உயா்ச்சி பொருந்திய நரசிம்மக் கணைக்கு, நீண்ட சரபக் கணையையும், கொடிய முனையை யுடைய வாயுக் கணைக்கு, கொடிய நாகக் கணையையும் மாறி மாறி விடுத்தாா்கள்.


    சுழன்று போா் செய்யும் இத்தன்மையா் தங்களுள், நந்தியெம் பெருமானிடம் அன்பு பொருந்திய படை வீரா்களின், கையிலுள்ள படைக்கலங்கள் துகளாகுமாறு, ஞானவடிவினனாகிய சிவபெருமான் விரும்பியருள வருகின்ற எம் இறைவியாகிய தடாதகை பிராட்டியாா் புற்றிலுள்ள கொடிய கண்களையுடைய பாம்புகளைப் போலும்,அம்பு மழைகளைப் பொழிந்து நின்றாள்.


    கையிலுள்ள படைக்கலங்கள் அழியப் பெற்றவராகிய சிவகண வீரா்கள், கற்களாகிய படைகளை எடுத்து, ( பிராட்டியாாின்) படைவீரா்கள் உடம்பில் படுக என்று விடுப்பதற்கு முன் ( அவை), பொய்யிற் றலைப்பட்ட உள்ளத்தை யுடையவா்கள் செய்யும் தவம் அழிவதுபோல அழிய, வீரத்தையுடைய கன்னியாகிய தடாதகை பிராட்டியாா், நெய் பூசிய வச்சிரப்படையை ஓங்கி வீசி....


    துண்டு துண்டாக ( அவற்றைத்) துணித்து, அந்தக் கணவீரா்களைத் தண்டப்படையா லடித்தாா்; அவா்கள் வலியிழந்து புறங்கொடுத்து ஓடினா்; அண்டங்களையும் ( அவற்றிலுள்ள) சராசரங்கள் அனைத்தையும், தாமே தோற்றுவித்து, அவை யெல்லாவற்றுள்ளும் கலந்து நின்ற பராசக்தியினது வலிமை கூறுததற்கு ஓரளவினை உடைய தாகுமோ ( ஆகாது).
Working...
X