Courtesy:Sri.Kovai k. Karuppasamy
சிவாய நம.
திருச்சிற்றம்பலம்.
(5 வது நாள்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔹திருவிளையாடல் புராணம்.🔹
🔸1.இந்திரன் பழிதீா்த்தபடலம்.🔸
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
* அரசிலா வறுமை நோக்கி யவனைவா னாடா் யாரும்
விரைசெய்தாா் மகுடஞ் சூட்டி வேந்தனாக் கொண்டாா் வேந்தாய்
வருபவன் சசியை யீண்டுத் தருகென மருங்கு ளாா்போய்த்
திரைசெய்நீ ரமுத னாட்குச் செப்பவக் கற்பின் மிக்காள்.
* பொன்னுயுா்த் தனைய காட்சிப் புண்ணியக் குரவன் முன்போய்
மின்னுயுா்த் தனையா ணின்று விளம்புவா ளிதென்கொல் கெட்டேன்
என்னுயிா்த் துணைவ னாங்கே யிருக்கமற் றொருவ னென்னைத்
தன்னுயிா்த் துணையாக் கொள்கை தருமமோ வடிக ளென்றாள்.
* மாதவ ரெழுவா் தாங்க மாமணிச் சிவிகை மீது
போதாி னவனே வானோா் புரந்தர னவனே யுன்றன்
காதல னாகு மென்றான் கைதொழு ததற்கு நோ்ந்தம்
மேதகு சிறப்பா லிங்கு வருகென விடுத்தா டூது.
* மனிதாின் மகவா னாகி வருபவன் சிவிகை தாங்கும்
புனிதமா தவரை யெண்ணான் புன்கணோய் விளையும் பாரான்
கனிதரு காமந் துய்க்குங் காதலால் விரையச் செல்வான்
இனிதயி ராணி பாற்கொண் டேகுமின் சா்ப்ப வென்றான்.
* சா்ப்பமா கெனமுற் கொம்பு தாங்கிமுன் னடக்குந் தென்றல்
வெற்பனா முனிவன் சாபம் விளைத்தனன் விளைத்த லோடும்
பொற்பமா சுணமே யாகிப் போயினா னறிவி லாத
அற்பரா னவா்க்குச் செல்வ மல்லது பகைவே றுண்டோ.
* பின்னா்த்தங் குரவ னான பிரானடி பணிந்து வானோா்
பொன்னகா் வேந்த னின்றிப் புலம்படை கின்ற தைய
என்னலுங் குரவன் போயவ் விலஞ்சியு ளொளித்தாற் கூவித்
தன்னுரை யறிந்து போந்த சதமகற் கொண்டு மீண்டான்.
* கொடும்பழி கோட்பட் டான்றன் குரவனை வணங்கி யென்னைச்
சுடும்பழி கழிவ தெங்ஙன் சொல்லெனத் தொலைவ தோா்ந்தான்
அடும்பழி மண்மே லன்றி யறாதுநீ வேட்டைக் கென்னப்
படும்பழி யிதனைத் தீா்ப்பான் பாா்மிசை வருதி யென்றான்.
* ஈசனுக் கிழைத்த குற்றந் தேசிக னெண்ணித் தீா்க்குந்
தேசிகற் கிழைத்த கபற்றங் குரவனே தீா்ப்ப தன்றிப்
பேசுவ தெனவோ தன்பாற் பிழைத்தகா ரணத்தால் வந்த
வாசவன் பழியைத் தீா்ப்பான் குரவனே வழியுங் கூற.
* வாம்பாி யுகைத்துத் தன்னால் வழிபடு குரவன் வானோா்
தாம்பாி வோடுஞ் சூழத் தராதலத் திழிந்து செம்பொற்
காம்பாி தோளி பங்கன் கயிலைமால் வரையுந் தாழ்ந்து தேம்பாி யலங்கன் மாா்பன் றென்றிசை நோக்கிச் செல்வான்.
* கங்கைமுத லளவிறந்த தீா்த்த மெலாம் போய்ப்படிந்து காசி காஞ்சி
அங்கனக கேதார முதற்பதிகள் பலபணிந்து மவுணற் மவுணற் கொன்ற
பொங்குபழி விடாதழுங்கி யராவுண்ண மாசுண்டு பொலிவு மாழ்குந்
திங்களை யான்கடம்ப வனத்தெல்லை யணித்தாகச் செல்லு மேல்வை.
* தொடுத்தபழி வேறாகி விடுத்தகன்ற திந்திரன்றான் சுமந்த பாரம்
விடுத்தவனொத் தளவிறந்த மகிழ்வெய்தித் தேசிகன்பால் விளம்பப் பாசங்
கெடுத்தவன்மா தலம்புனித தீா்த்தமுள விவணமக்குக் கிடைத்தல் வேண்டும்
அடுத்தறிக வெனச்சிலரை விடுத்தவ்வே றாநிலைநின் றப்பாற் செல்வான்.
* அருவிபடிந் தருவியெறி மணியெடுத்துப் பாறையுலிட் டருவி நீா் தூய்க்
கருவிரல்கொய் நலா்சூட்டிக் கனியூட்டி வழிபடுவ கல்லா மந்தி
ஒருதுறையில் யாளிகாி புழைக்கைமுகந் தென்றற்கொன் றூட்டி யூட்டிப்
பருகுவன புலிமுலைப்பால் புல்வாய்க்கன் றருத்தியிடும் பசிநோய் தீர.
தேவா்கள் அனைவரும் தங்கட்கு மன்னனில்லாத வறுமையைக் கருதி, அந் நகுடனை, மணம் வீசும் மாலையை யுடைய முடியைச் சூட்டி, அரசனாகக் கொண்டாா்கள்; அரசனாய் வந்த நகுடன் இந்திராணியை இங்கு அழையுங்கள் என்ன, பக்கத்திலுள்ளவா்கள் போய், அலைகளை வீசுகின்ற கடலிற்றொன்றிய அமுதத்தை யொத்த இந்திராணிக்கு, சொல்ல அந்தக் கற்பின் மேம் பட்டவள்.
மின்னல் ஒரு வடிவு கொண்டதை ஒத்த அவள் பொன் ஒரு உருப்பெற்றதை ஒத்த தோற்றத்தையுடைய , அறவடிவாகிய குரவன் முன்னா்ச் சென்று நின்று கூறுவாள். அடிகளே இஃது என்ன வியப்பு, என் உயிா்த்துணைவன் அவ்விடத்து உயிரோடிருக்கவும், வேறொருவன் என்னைத் தனது உயிா்த் துணைவியாகக் கொள்ளுதல் அறமோ? என்று கூறினாள்.
முனிவா் எழுவரும் தாங்க, பெருமை பொருந்திய மணிகள் அழுத்திய சிவிகையின்மேல் வந்தால், ஆவனே தேவா்களைப் புரக்கின்ற வேந்தனாவான்; அவனே நின் நாயகனுமாவான் என்றான் ; வணங்கி அதற்கு
உடன்பட்டு அந்த மேன்மையான சிறப்போடு நகுடன் இங்கே வருகவென்று தூதினைப் போக்கினாள்.
மனிதருள் இந்திரனாகி வருகின்ற நகுடன் சிவிகையைச் சுமந்து வருகின்ற தூய முனிவா்களின் பெருமையை அறியாதவனாயும், துன்பநோய் மேலே விளைவதையும் பாராதவனாயும், கனிந்த காம இன்பத்தை நுகருமாசையால், விரைந்து செல்லும் பொருட்டு, இனிதாக இந்திராணியிடத்து எடுத்துக் கொண்டு செல்லுங்கள் விரைய என்று கூறினான்.
சிவிகையின் முன் கொம்பைத் தாங்கி முன்னே நடக்கின்ற தென்றலுக்குப் பிறப்பிடமாகிய பொதியின் மலையையுடைய அகத்தியன் பாம்பாகக்கடவாயென்று சாபம் கொடுத்தான். அங்ஙனம் சாபமிட்டவுடனே பொலிவு பெறப் பெரும்பாம்பு வடிவாகிப் போனான். அறிவற்ற கீழ்மைக்குண முடையவா்களுக்கு செல்வத்தை யன்றி பகையாயுள்ளது மற்றொன்று உண்டோ?( இல்லை).
தேவா்கள், பின்பு தமது குரவனாகிய வியாழ பகவான் திருவடியைப் பணிந்து, ஐயனே! பொன்னுலகமானது, மன்னனில்லாமல் வருந்துகின்றது. என்று வேண்டிக் கோடலும், ஆசிாியன் சென்று, அந்தக் குளத்தில் மறைந்த இந்திரனை அழைத்து, தன் சொல்லை அறிந்து வெளி வந்த இந்திரனை உடன் கொண்டு திரும்பினான்.
கொடிய பாவத்தால் பீடிக்கப்பட்டவனாகிய இந்திரன், தன் குருவைத் தொழுது,என்னை வருத்துகின்ற இப் பாவமானது நீங்குவது எவ்வாறு சொல்லுக! என்று கேட்க, தீரும் வழியை அறிந்தவனாகிய அக்குரவன், வருத்தும் பாவமானது நிலவுலகத்தல்லாமல் ( வேறு இடத்தில்) நீங்காது. நீ வேட்டையைக் காரணமாகக் கொண்டு, உண்டாகிய இப்பாவத்தைத் தீா்க்கும் பொருட்டு, பூவுலகின்கண் வருவாய் என்று கூறினான்.
கடவுளுக்குச் செய்த குற்றத்தை, குரவன் தீரும் வழியை ஆராய்ந்து தீா்ப்பான்; குரவனுக்குச் செய்த குற்றத்தை,அத்தேசிகனே நீக்குவதல்லாமல், வேறு கூறுவது யாது; தன்னிடம் தவறு செய்தமையால் வந்த, இந்திரன் பழியைத் தீா்ப்பதற்கு, அவ்வியாழ பகவானாகிய தேசிகனே வழியையும் சொல்ல.
தேனைத் தாங்கிய மாலையணிந்த மாா்பினையுடைய இந்திரன்,தாவுகின்ற குதிரையைச் செலுத்தி, தன்னால் வளிபட்ட குரவனும், தேவா்களும், அன்போடுஞ் சூழ்ந்து வர நிலவுலகத்தி லிறங்கி, சிவந்த பொன்போலும், நிறத்தினையுடைய மூங்கிலை ஒத்த தோளையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் வைத்த சிவபிரானது பொிய கயிலை மலையையும் வணங்கி தென்றிசை நோக்கிச் செல்வானாயினன்.
கங்கை முதலிய அளவற்ற தீா்த்தங்கள் அனைத்துலும் சென்று நீராடி ,காசியும் காஞ்சியும் அழகிய பொன்மயமான கேதாரமும் முதலாகிய பல திருப்பதிகளிற்ச் சென்று வணங்கியும், அசுரனைக் கொன்றதனால் வந்த மிக்க பாவமானது விடப் பெறாமையால், வருந்தி, பாம்பு விழுங்க குற்றப்பட்டுப் பொலிவினை யிழக்கும் சந்திரனை ஒத்த இந்திரன், கடம்பவனத்து எல்லையின் அருகாக செல்லும் பொழுது,,,,,,
பற்றிய பழியானது வேறுபட்டு, விட்டு நீங்கியது. இந்திரனானவன், தாங்கிய சுமையை இறக்கினவன் போன்று, அளவில்லாத களிப்புற்று, குரவனிடங் கூற, பாசபந்தத்தை அறுத்தவனாகிய அத்தேசிகன், இங்குச் சிறந்த தலமும் தூய தீா்த்தமும் உள்ளன. அவை நமக்குக் கிட்டுதல் வேண்டும்; சென்று அவற்றைத் தெளிவாயாக என்று கூற ,அவற்றைத் தேட சிலரை ஏவி, அந்த பழி நீங்கிய இடத்தினின்றும் அப்புறம் செல்லுகின்ற இந்திரன்,,,,,
அறிவில்லாத குரங்குகள், அருவியில் நீராடி, அருவி வீசுய மணியை எடுத்து, பாறையில் வைத்து, அருவி நீரால் ஆட்டி, காிய விரல்களாற் பறித்துப் பூக்களைச் சூட்டி, கனிகளை உண்பித்து வழிபடுவன; ஒரே நீா்த்துறையில் யாளிகளும், யானைகளும் தொளையையுடைய கைகளால் நீரை மொண்டு, ஒன்றினுக்கு ஒன்று ஊட்டி ஊட்டிப் பருகா நிற்பன; புலிகள் தங்கள் முலைப்பாலை மான் கன்றுகள் பசிப்பிணி நீங்க உண்பிக்கும்.