Courtesy: Sri.Rajan
மிக பிரசித்தமான பாடல். பட்டிதொட்டியெல்லாம் பரவிய திருப்புகழ். இராமயணத்தில் காகசுரனை மன்னித்து அருள் புரிந்த செயலை நினைவு கூர்ந்ததுக்கு ஒரு காரணமும் உண்டு
இராமன் ஒரு புல்லை அஸ்த்திரமாக காகாசுரன் மேல் ஏவ, அது அவனை எங்கு சென்றாலும் துரத்தியது. அசுரனும் இனி வேறு கதியல்லை எனறு உணர்ந்து இராமன் கால்களை தஞ்சமடைந்தான். இராமன் ஏவிய அஸ்திரம் அந்த அசுரன் உயிரையையே கொல்லக்கூடிய வல்லமை வாய்ந்தது. இருந்தாலும் இராமனை தஞ்சமெனறு எவன் அடைந்தாலும் அவனை காத்திடுவான் என்ற ஒரு ஒப்பற்ற குணமானது இந்த கதையின் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அந்த அசுரனின் உயிரை பறிக்காமல், அவனது ஒரு கண்ணை மற்றும் குத்தியது. 'அந்த இராமனின் அம்பு அவனை துரத்தினது போல காலன் என்னை துரத்துகிறான். அந்த அசுரன் இராமன் காலில் விழுந்தது போல் உன் காலில் நான் விழ அருள் புரிவாயாக ' என்பதை குறிப்பால் உணர்த்துகிறார்.
எல்லா எதிர்ப்புக்களையும் எதிரிகளையும் தீர்க்க வல்ல பாடல் இது ஆகும். மரண பயத்திலிருந்து நம்மை காக்கும் மந்திரப் பாடலாகவும் நாம் கருதத் தக்கது
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.
நாத ரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.
யமன் என்னை அணுகாதபடி என்னை உனது காலை வழிபடும் படியான புத்தியை அருள் புரிவாயாக என வேண்டுகிறார் அருணகிரிநாதர் யாரை வேண்டிகிறார் என்றால் முருகனைத்தான். அவர் கொடுக்கும் அடை மொழிகளை பார்க்கலாமா! பிறைசந்திரன், கங்கை, பூ இவைகளை அணிந்திருக்கும் சிவபெருமான் அருளிய குமரன், சர்க்கரை, பழம் போல் இனிக்கும் மொழியை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியின் பாதங்களை வருடிய மணவாளன், ஒரு கண்ணைக மட்டும் காகாசுரன் இழக்கும் படியாக அருள் புரிந்த இராமனின் மருகன், பிரமனும் தேவர்களும் விண்ணுலகத்தை ஆளும் படி அவர்களைச் சிறையிலிருந்து மீட்டு, ஆடும் மயிலின் மேல் ஏறி வரும் இளையவன், மா மரங்கள் வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்துள்ள சுவாமி மலையில் வீற்றிருப்பவன், சூரனுடைய உடல் துணி படவும், கடல் வற்றிப் போகவும் வேலைச் செலுத்திய பெருமாள். ஒரு எட்டு வரி பாடலில் 7 வரி முருகனக்கே உரித்தான அடைமொழிச் சொற்கள். ஒரே ஒரு வரியில் பிரார்த்தனை. அதுவும் எப்பேர்பட்ட பிரார்த்தனை! காலன் எணை அனுகாமல் காப்பாறு முருகா. முடியுமா?. அருணகிரியாரின் வரலாற்றைப் படித்தால் தெரியும்.