Announcement

Collapse
No announcement yet.

வற்றல்கள்,

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வற்றல்கள்,



    சுண்டைக்காய் வற்றல்:
    எலந்தைப் பழத்தைவிட சிறியதாக இருக்கும். இதை வாங்கி நுனியைக் கல்லால் தட்டினால் வாய் பிளந்துகொள்ளும். அப்படியே வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கலாம். கடைகளில் வாங்குவதில் உள்ளே இருக்கும் விதைகள் எல்லாம் நீங்கி சரியாக இருக்காது, வீட்டிலேயே செய்வதுதான் நன்றாக இருக்கும் என்பது வீட்டுப் பெரியவர்களின் மாற்ற முடியாத கருத்து.

    மணத்தக்காளி வத்தல்: வாங்கி எதுவும் செய்யாமல் அப்படியே காய வைக்கலாம்

    மினுக்கு வத்தல் (aka மிதுக்கு வத்தல்): குட்டிக் குட்டியாய் கோவக்காய்(அல்லது கோவைக்காய்?) மாதிரி நீளமாக இருக்கலாம். ராமநாதபுரம் பகுதிகளில் கிடைக்கும் இதை ‘தும்டிக் காய்’ என்று சொல்வார்கள். இரண்டு மூன்றாக நறுக்கிக் காய வைக்கலாம்.

    காய்கறி வற்றல்:
    வெண்டை, கொத்தவரங்காய், பாகற்காய் போன்ற நாட்டுக் காய்களை லேசான புளித் தண்ணீரில் உப்பு மஞ்சள் தூள் போட்டு அரைவேக்காடு வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை ஒட்ட வடித்துவிட்டு, வெயிலில் காயவைத்து, பொரித்துச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
    மோர் வற்றல்:
    • சுண்டைக்காய், மணத்தக்காளி, தும்டிக்காய் மட்டுமல்ல, மிளகாய்(இது சின்னச் சின்னதாக பிஞ்சாக இருந்தால் இன்னும் சுவையாக இருக்கும். காரமில்காத பெரிய மிளகாயும் நன்றாக இருக்கும்.) போன்றவற்றில் தேவையானதை எடுத்துக் கொள்ளவும்.
    • சுண்டைக்காயாக இருந்தால், வாயை உடைத்துக் கொள்ள வேண்டும். மிளகாயாக இருந்தால் உடல் பகுதியில் கொஞ்சம் லேசாகக் கீறிக் கொள்ள வேண்டும். மினுக்கு வத்தலை நறுக்கியும் மணத்தக்காளியை அப்படியேயும் போடலாம்.
    • தயிரைக் கடைந்து கெட்டியான மோராக்கி, உப்புப் போட்டு அதில் இவற்றை இரவு முழுவதும் ஊறவைத்து பகலில் காயை மட்டும் எடுத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.
    • பின்னர் மீண்டும் மாலையில் அதே தயிரில் போட்டுவிட இரவு முழுவதும் ஊறவிட வேண்டும்.
    • இப்படி முழுத்தயிரும் காய்கிற வரை செய்து, நன்றாகக் காயவைத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.
    • தயிரில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் வற்றல் கருக்காமல் பார்க்க அழகாக இருக்கும்.
    • சாதா வற்றல் மற்றும் காய்கறி வற்றல்களை வற்றல் குழம்பிற்குஉபயோகிக்கலாம்.
      மோர் வற்றல்களை, எண்ணையில் பொன்னிறத்துக்கும் மேலேயே கொஞ்சம் கருக வறுத்தால், தயிர்சாதத்திற்கு மிகப் பொருத்தமான துணை. வெளியூர் பயணங்களுக்கு மிகவும் ஏற்றது. மோர் மிளகாயை தாளித்தும் தயிர்சாதத்தில் கலக்கலாம்.
      சூடான நெய் சாதத்தில் மோரில் நனைத்துக் காயவைத்த சுண்டைக்காய், மணத்தக்காளி அல்லது மினுக்குவத்தலைப் பொடித்துப் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

      by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு,


  • #2
    Re: வற்றல்கள்,

    nandri maamaa
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    Working...
    X