Announcement

Collapse
No announcement yet.

தானத்துக்கும், தர்மத்துக்கும் வித்தியா&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தானத்துக்கும், தர்மத்துக்கும் வித்தியா&#

    உயர்ந்தவர்களுக்குக் கொடுப்பது தானம். எளியவர்களுக்கு கொடுப்பது தர்மம். பொதுவாக உதவி புரியும் எண்ணத்துடன் செய்யும் எந்த செயலுக்கும் இரவு, பகல் கிடையாது. அதற்குரிய புண்ணியம் கொடுத்தவருக்கு உடனே கிடைத்து விடும். ஆனால், மனதில் எண்ணியிருக்கும் விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படும் தானத்தை பகலில் தான் செய்ய รท வண்டும். ஏனென்றால், அதற்கு சூரியதேவன்சாட்சியாக இருப்பார் என்பது ஐதீகம். சந்திர கிரகணம், திருமணச் சடங்கு, மாதப்பிறப்பு, வெளியூர் கிளம்பும் நேரம், ஆபத்து காலம்,குழந்தை பிறப்பு, ராமாயணம், மகாபாரத சொற்பொழிவு போன்றவற்றின் போது இரவு நேரத்திலும் தானம் செய்யலாம்.

    ஒருவர் செய்யும் தானங்களும் அதற்கான பலன்களும்

    மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு அதன்பொருட்டு பிறர்க்கு தானம் செய்தலும் அதன் பலன்களும் தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.

    சக மனிதனின் பசியை போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதியை பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின்மீது பாய்ந்து கொள்ளும் தருனத்தில் உணவிட்டு காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது - வறுமை தீண்டாது - இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். - வள்ளலார்.

    தானங்களும் - அதன் பலன்களும்

    1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்
    2. பூமி தானம் - இகபரசுகங்கள்
    3. வஸ்த்ர தானம் (துணி) - சகல ரோக நிவர்த்தி
    4. கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி
    5. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்
    6. குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி
    7. நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
    8. வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும்
    9. தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல்
    10. சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்
    11. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்
    12. கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
    13. பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி
    14. பால் தானம் - சவுபாக்கியம்
    15. சந்தனக்கட்டை தானம் - புகழ்
    16. அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.

    சுடுகாட்டு சித்தன்
Working...
X