Announcement

Collapse
No announcement yet.

இணையதள நடவடிக்கைகளை பாதுகாப்பவர் யார்?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இணையதள நடவடிக்கைகளை பாதுகாப்பவர் யார்?

    முழு உலகமும், ஆன்லைன் முறையில் இயங்கும் காலம் இது. இணையதளத்தின் பயன்பாடு அனைத்திலும் வியாபித்திருப்பதால், நாமும் ஏறக்குறைய பலவிதமான பணிகளையும், அதிலேயே மேற்கொள்ள தொடங்கி விட்டோம்.
    கம்பெனிகள் மற்றும் வியாபாரத்தை நிர்வகித்தல், ஷாப்பிங் செய்தல், வங்கி செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் தகவல்தொடர்பு உள்ளிட்ட பல்வேறான பணிகள், ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, நாம் இணைய தொழில்நுட்பத்தை பெரிதும் நம்புகிறோம். அதன் பாதுகாப்பு தன்மையை சார்ந்திருக்கிறோம்.
    இணையத்தை அதிகளவில் சார்ந்திருக்கும் நாம், இணையப் பாதுகாப்பை பற்றியும் கவலைப்பட வேண்டியுள்ளது மற்றும் அதைப்பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டியுள்ளது. Ethical Hackers என்பவர்களின் மூலமாக, இணைய பாதுகாப்பு சாத்தியமாகிறது. இவர்கள், Cyber Cops என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
    Ethical Hacking தொழில் என்றால் என்ன?
    Internet Security என்றும் அறியப்படுகிற Ethical Hacking என்பது, பாரம்பரிய பாதுகாப்பு முறைகளிலிருந்து மிகவும் மாறுபட்டது. இணையதள பாதுகாப்பு நடவடிக்கை என்பது, பாரம்பரிய பாதுகாப்பு முறைகளிலிருந்து மாறுபட்டு, சுயமுனைப்பு செயல்பாட்டு தன்மையின் அடிப்படையிலானதாகும்.
    பாரம்பரிய முறையிலான பாதுகாப்பு என்பது, தவறு நடந்த பின்னர், தவறு செய்தவர்களைப் பிடிப்பதாகும். ஆனால், Ethical Hacker பணி என்பது, ஒரு தவறு நடப்பதற்கு முன்பாகவே, அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, நமது இணையவழி மற்றும் கணினி வழி ரகசியங்கள் திருடு போகாத வண்ணம், சரியான முறையில் ஆராய்ந்து பாதுகாப்பதாகும். மேலும், ஒரு நிறுவனத்தின் கணினி மூலமான செயல்பாட்டு அமைப்பில், எதிரிகள், எந்த சேதாரமும் ஏற்படுத்தி விடாமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதுமாகும்.
    ஒரு Ethical Hacker, தனது படைப்புத்திறன் மற்றும் இதர திறன்களைப் பயன்படுத்தி, தன்னை நம்பும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரின் வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கிறார். இவர், சைபர் குற்றங்களைத் தடுத்து, அது தொடர்பான பணி பாதுகாப்பை உறுதி செய்கிறார்.
    Ethical Hacking பணியை மேற்கொள்வதற்கு தேவைப்படும் திறன்கள்
    படைப்புத்திறன்
    நிறைய வள ஆதாரங்களைக் கொண்டிருத்தல்
    பகுப்பாய்வு சிந்தனை
    தர்க்க ரீதியான சிந்தனை
    ஊக்கம்
    நம்பகத்தன்மை
    அதிநுட்ப கவனம்
    சிக்கல் தீர்க்கும் திறன்கள்
    கிரகிக்கும் தன்மை
    முன்முயற்சி
    அர்ப்பணிப்பு
    விபரங்களைத் தேடும் பாங்கு
    விரைவான சிந்தனை
    ஆழமான கணினி அறிவு
    படிப்பு மற்றும் தகுதி
    இணையதள பாதுகாப்புக் குறித்த சிறப்பு படிப்பை மேற்கொள்ளும் முன்பாக, குறைந்தபட்சம் கணிப்பொறி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில், பி.டெக்., அல்லது பிஎஸ்.சி., படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த அடிப்படை கல்வித் தகுதி இருந்தால் மட்டுமே Ethical Hacker ஆக முடியும்.
    இதுதொடர்பான சில ஸ்பெஷலைஸ்டு படிப்புகள்
    Ethical Hacking -ல் சான்றிதழ் படிப்பு
    இன்பர்மேஷன் செக்யூரிட்டி மற்றும் சிஸ்டம் மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ படிப்பு
    சைபர் பாரன்சிக்ஸ் மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் எம்.எஸ்சி., படிப்பு
    சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் எம்.டெக்., படிப்பு
    நுழைவுத் தேர்வுகள்
    இன்பர்மேஷன் செக்யூரிட்டி பிரிவில் எம்.டெக்., அல்லது எம்.எஸ்சி., படிப்பில் சேர, பெரும்பாலும் GATE (Graduate Aptitude Test in Engineering) எனப்படும் நுழைவுத்தேர்வே தகுதியான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதேசமயம், சில கல்வி நிறுவனங்கள், இத்தகையப் படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு, தங்களின் சொந்த நுழைவுத் தேர்வுகளையும் நடத்துகின்றன.
    எங்கே படிக்கலாம்?
    மும்பை மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களிலுள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் இன்பர்மேஷன் செக்யூரிட்டி
    Ethical Hacking பயிற்சி கல்வி நிறுவனம், புதுடில்லி
    புதுடில்லி, பீகார், சத்தீஷ்கர், தமிழ்நாடு, ஜார்க்கண்ட், பஞ்சாப், திரிபுரா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள ஆன்கிட் பாடியா(Ankit Fadia) பயிற்சி நிலையம்
    நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி, கோழிக்கோடு
    சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
    ஐ.ஐ.ஐ.டி., அலகாபாத்
    SRM பல்கலைக்கழகம், தமிழ்நாடு
    ஐ.எம்.டி., காசியாபாத்
    அகமதாபாத் மற்றும் புதுடில்லியுள்ள டெக் டிபென்ஸ்
    அம்ரிதா ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்
    ஸ்கூல் ஆப் ஒகேஷனல் எஜுகேஷன் அன்ட் ட்ரெய்னிங், இக்னோ
    இண்டியன் ஸ்கூல் ஆப் Ethical Hacking, கொல்கத்தா.
    பணி தன்மைகள்
    ஒரு Ethical Hacker, கணினி தொடர்பான ஆழமான அறிவையும், படைப்புத் திறனையும் பயன்படுத்தி, ஒரு நிறுவனத்தின் கணினி நெட்வொர்க்கில் என்னென்ன பலவீனமான அம்சங்கள் உள்ளன என்பதைக் கண்டறிந்து, அதைக் களைவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொடுத்து, அதன்மூலம் நெட்வொர்க் பாதுகாப்பை உறுதிசெய்து கொடுப்பது அவரின் பிரதானப் பணியாகும்.
    Hacking என்ற பணியைத் தவிர்த்து, ஒரு Ethical Hacker, பல நேரங்களில், இணைதள பாதுகாப்புத் தொடர்பான வேறு பல பணிகளிலும் ஈடபடுகிறார். Encryptions, Security protocols and Firewallsபோன்றவை, அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
    பணி வாய்ப்புகள்
    அரசு மற்றும் தனியார் துறைகள் ஆகிய இரண்டிலும் இத்துறை சார்ந்த பணி வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
    அரசுப் பணிகள்
    அரசு ஏஜென்சிகள்
    ராணுவம்
    பாதுகாப்பு அமைப்புகள்
    ராஜதந்திர ரீதியிலான தகவல் தொடர்புகள்
    சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயல்பாடு
    CBI அமைப்பு
    FBI (Federal Bureau of Information) அமைப்பு
    தடய அறிவியல் ஆய்வகங்கள்
    தனியார் பணி வாய்ப்புகள்
    ஐ.டி., நிறுவனங்கள்
    நிதி நிறுவனங்கள்
    கன்சல்டிங் நிறுவனங்கள்
    ப்ரீலேன்சிங்
    வங்கிகள்
    விமானப் போக்குவரத்து
    உணவகங்கள்
    சில்லறை வணிகம்
    இத்துறை சார்ந்த சில புகழ்பெற்ற நபர்களை அறிவோமா?
    ஆன்கிட் பாடியா
    சன்னி வகேலா
    திரிஷ்னீட் அரோரா
    விவேக் ராமச்சந்திரன்
    கெளசிக் துத்தா
    அசீம் ஜாக்கர்
    சாய் சதீஷ்
    பால்கன் ரதோட்
    ராகுல் தியாகி
    ரிஷிராஜ் சர்மா
    சங்கீத் சோப்ரா
    வாய்ப்புகள்
    Ethical Hacking தொடர்பான பணி வாய்ப்புகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இணையப் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, இவர்களின் தேவையும் அதிகரித்தே வருகிறது. தற்போது, இத்துறையில், குறைந்தளவு நிபுணர்களே இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
    முன்பெல்லாம், ஐ.டி., துறைக்குத்தான் இந்த நிபுணர்கள் அதிகம் தேவைப்படுவார்கள். ஆனால், இப்போது, அனைத்து நிறுவனங்களுக்கு Cyber security அமைப்பு தேவைப்படுகிறது. ஆன்லைன் பயன்பாடுகள் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது மேம்பட்டுக் கொண்டேயிருக்கும் இணையப் பாதுகாப்பின் தேவையும் அதிகரிக்கிறது.
    பெரிய நிறுவனங்கள், தங்களின் இணைய செயல்பாடுகள் திருடப்படுவதை ஒருபோதும் விரும்பாது. ஏனெனில், அதன்மூலம் அவை இழப்பது கொஞ்ச நஞ்சமல்ல. எனவே, அவை, நல்ல Ethical Hacker -களை பணியமர்த்துவதில் அக்கறை காட்டுகின்றன.
    மேலும், ஒரு அரசாங்கத்தின் ரகசியங்களும், அனைத்து வகையிலும் பாதுகாக்கப்படுவது முக்கியம். என்ன விலை கொடுத்தேனும் அதைப் பாதுகாக்க வேண்டும். ஒரு நிறுவனம் பெரியதோ அல்லது சிறியதோ, அங்கே ஆன்லைன் செயல்பாடுகள் நடைபெறும்போது, Ethical Hackers என்ற நபர்களும் அவசியமாகிறார்கள்.
    எப்படி, Cops எனப்படும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் சமூகத்திற்கு மிகவும் முக்கியமோ, அதைப்போல், Ethical Hackers எனப்படும் Cyber Cops -களும் சமூகத்திற்கு மிகவும் அவசியம்.

    Sourceinamalar
Working...
X