Announcement

Collapse
No announcement yet.

கற்பக விருட்சம் என்பது என்ன?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கற்பக விருட்சம் என்பது என்ன?

    கற்பக விருட்சம் என்பது என்ன?
    ---------------------------------------------------
    மனிதனுக்கு தேவையான அனைத்தையும் கொடுக்ககூடிய மரமே கற்பக(கல்ப) விருட்சம் ஆகும்.கற்பக விருட்சம் மரத்திற்கு தெய்வ அருள் உண்டு.இதற்கு ஒரு கதையும் உண்டு.

    பாற்கடலில் உள்ள அமுதத்தை எடுப்பதற்காக தேவர்கள் அனைவரும் சேர்ந்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மகாமேருவை மத்தாகவும் பயன்படுத்தி, ஆழமாகக் கடைந்து கொண்டிருந்த போது, அந்த அற்புதம் நடந்தது. அப்போது பாற்கடலில் இருந்து 16 வகையான பொருட்கள் விதவிதமாக வெளிவந்தது.

    வந்த பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு சென்றுவிட்டது.பச்சை நிறத்தில் உருவான மரம் நவரத்தினங்களால் காட்சியளித்தது.அதில் மகாலெட்சுமி பொற்காசுகளை இறைத்தவாறு காட்சி அளித்தார்.அந்த மரம் குபேரதிசையான வடக்கு நோக்கி செல்லத் தொடங்கியது. அதைக் கண்டு முனிவர்கள் வியந்தனர். அவர்கள் அதைப் பார்த்த உடன், “ஆகா…கற்பக விருட்சம்..! ஆகா…கற்பக விருட்சம்..!” என்று இரண்டு கைகளையும், கன்னத்தில் போட்டுக் கொண்டு கும்பிட்டனர். தேவர்களோ அமிர்தத்தை மட்டுமே எதிர்பார்த்தபடி இருந்ததால் இதைக் கவனிக்கவில்லை.

    இந்த மரம்தான் கற்பவிருட்சமாக போற்றப்படுகிறது.இந்த மரத்தில் இருக்கும் தேவிக்கு ஸ்வர்ணவர்ஷிணி என்று பெயர்.காலப்போக்கில் இந்தமரம் அன்னப்பறவையை போல் மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.இருந்தாலும் இந்த கதையின் சாராம்சம் என்னவென்றால் நமது மனம் ஒரு கற்பக விருட்சம் போன்றது.

    நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என்றால் நல்ல எண்ணம்,நல்ல புத்தி,நல்ல சிந்தனை மனித மனத்திற்கு இருக்க வேண்டும்,அப்படி இருந்தால் மட்டுமே வாழ்வில் கிடக்கும் அனைத்து செல்வங்களும் மகிழ்சியை கொடுக்கும்.இல்லையென்றால் செலவங்கள் இருந்து நிம்மதி இருக்காது.

    இப்பொழுது கற்பக விருட்சமான மரங்களாக தென்னையையும்,பனை மரத்தையும் கூறலாம்.

    அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
Working...
X