Announcement

Collapse
No announcement yet.

Giving loan to kanchi mutt - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Giving loan to kanchi mutt - Periyavaa

    "குருவே சரணம்" மகா பெரியவா நாங்கள் உங்கள் பொற்பாதங்களை பிடித்துக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு உங்கள் ஆசி வேண்டும். சொன்னவர்-எஸ்.மீனாட்சிசுந்தரம்
    தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
    தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
    (1983-ல் மூன்று பெரியவர்களும் கர்நூலில் முகாம்)
    விடியற்காலை ஐந்து மணியிருக்கும்,
    மகாப்பெரியவாள் தங்கியிருந்த ஒரு தட்டி
    மறைப்புள்ள இடத்திலிருந்து மகாபெரியவாள்
    உரத்த குரலில் ஒருவரிடம் பேசுவது கேட்டது.
    ஸ்ரீ ஜயேந்திரரிடம் பேசிக் கொண்டிருந்த
    சம்பாஷணையைக் கேட்க நேர்ந்தது
    பெரியவா-"நாங்கள் காசிக்குப் புறப்பட்டபொழுது
    மடத்திலிருந்த எல்லோருக்கும் காசி போக ஆசை
    வந்து விட்டது. காசிராஜா நன்றாக ஏற்பாடுகள்
    செய்தார்.உபசாரங்களுக்குக் குறைவில்லை.
    திரும்ப வரும் பொழுது விசாகப்பட்டினத்தில்
    மடத்தில் உக்ராண தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது.
    ஆந்திர மக்கள் அங்கிருக்கும் வரை எங்களுக்கு
    ஒரு குறையும் வைக்கவில்லை.
    ராமேஸ்வரம் வந்த பொழுது கஷ்டதசை ரொம்ப
    அதிகமாகிவிட்டது. மடத்திலிருந்து தங்க சாமான்களை
    எல்லாம் விற்றோம்.அப்பொழுது சவரன் என்ன விலை
    தெரியுமா? பதினைந்து ரூபாய்க்கும் குறைச்சல்.ஆனால்
    தஞ்சாவூர்க்காரர்கள் எல்லாவற்றையும் மறுபடி
    செய்து கொடுத்துவிட்டார்கள்.
    "ஆமாம்! ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும் தாரா
    பாத்திரம் ஒன்று இருக்குமே? அது இருக்கிறதோ?
    அது சொக்கத் தங்கம்."
    ஸ்ரீ ஜயேந்திரர்-"பத்திரமாக இருக்கிறது"
    பெரியவா-கும்பகோணத்தில் ராமஸ்வாமி
    சாஸ்திரிகள் என்பவரைப் பற்றித் தெரியுமோ?"
    ஸ்ரீ ஜயேந்திரர்-"தெரியுமே"
    பெரியவா-அவர் இல்லை. அவருடைய பாட்டனாரைப்
    பற்றிச் சொல்கிறேன். மடத்து சுவரில் நோட்டீஸ்
    ஒட்டி விட்டார்.-'இந்த மடத்தை நம்பி கடன் கொடுத்து
    விடாதீர்கள்; திரும்பி வராது' என்று."
    சொல்லிவிட்டு பெரியவா உரக்கச் சிரித்தார்.
    "இப்போ மடத்துக்குப் பேரும் புகழும் வந்திருக்கிறது
    என்றால், அது என்னால்தான் என்று நினைத்துக்
    கொண்டிருக்கிறார்கள்.கலவை பெரியவாள்
    கொடுத்த பாக்கியம்.
    "எனக்கு ஒன்றும் தெரியாது. பணத்தைப் பற்றி
    சுத்தமாகத் தெரியாது. செக்,டிராஃப்ட் எல்லாம்
    எனக்குப் பரிச்சயம் இல்லை.
    "பல விஷயங்களை என்னிடம் வரும் பக்தர்களைத்
    துருவித் துருவி கேட்டுத் தெரிந்துகொண்டு
    மற்றவர்களிடம் சொல்லுவதால் என்னைப் பெரிய
    'பிராக்ஞன்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
    "மடத்துக்குப் பணக்கஷ்டம் எப்போதும் வரக்கூடாது.
    ஊராளாத்துப் பிள்ளை (குழந்தைப் பெரியவாளைக்
    குறித்து) அழைத்து வந்திருக்கிறோம்.அவனுக்குப்
    பணக்கஷ்டம் தெரியாமலிருக்க வேண்டும்.
    ஸ்ரீ ஜயேந்திரர்-"ஆமாமாம்.விலைவாசி ரொம்ப
    அதிகம்.தேங்காய் ஐந்து ரூபாய் விற்கிறது. மடத்துக்குத்
    தபால் செலவே வருஷத்திற்கு ஒரு லட்சத்திற்கு
    மேல் ஆகிறது!"
    பெரியவா-"அதைக் குறைக்காதே.வெளிநாட்டுக்காரர்கள்,
    குறிப்பாக,ஹரே ராமா,ஹரே கிருஷ்ணாவினர் நம்
    மதத்திற்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள்!
    எவ்வளவு உழைக்கிறார்கள்!
    இந்த சம்பாஷணையைக் கேட்க நேர்ந்த எங்களுக்கு
    எளிமையும்,மேலாண்மையும்,தியாக உணர்ச்சியும்
    தெளிவாகத் தெரிந்தது.அவருடைய சமீபத்தில்
    அடிக்கடி சென்று ஆசிகள் பெரும் பாக்கியம் பெற்றதை
    நினைத்துப் பெருமிதமும் பேரானந்தமும் அடைந்தோம். MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM!
Working...
X