Announcement

Collapse
No announcement yet.

Saranagati - Total surrender

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Saranagati - Total surrender

    ஸ்ரீ:*சரணாகதி வைபவம்*
    ( *ஸ்ரீ உ.வே. D.S.தாதாசார்ய ஸ்வாமி* , வைகுண்டவாஸீ)
    *சரணாகதியால் நமக்கு ஏற்படும் பலம் என்ன?*
    சரணாகதியால் நாம் *க்ருதக்ருத்யர்* ஆகிறோம். அதாவது, மோக்ஷத்திற்காக நாம் செய்யவேண்டிய கார்யம் செய்தாய்விட்டது. *நமக்கு மோக்ஷம் நிச்சயம்*.
    நம்முடைய கர்மம் எப்படி என்றால், ப்ரஹ்ம கல்பத்தில் 10,000 கல்பம் ஜன்மம் எடுத்து நம்முடைய கர்மபலத்தை அனுபவித்தாலும் முடிவுபெறாத கர்மத்தை ஒருவன் அரை க்ஷணத்தில் செய்துவிடுகிறான். அப்படியானால் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு கர்மா? ஒரு நாளில் எவ்வளவு? ஒரு வருஷத்தில் எவ்வளவு? ஒரு ஆயுஸ்ஸில் எவ்வளவு? இப்படி எத்தனை ஜன்மம் நாம் எடுத்திருக்கிறோம்? இக் கர்மத்துக்கு *ஸஞ்சித கர்மம்* என்று பெயர்.


    இவைகளுக்குப் பெருமாள் *பேரேடு* போட்டுவைத்திருக்கிறார். இதில் ஒவ்வொரு கர்மமாக எடுத்து நமக்குப் பெருமாள் பலம் கொடுக்கிறார். அப்படிப் பலம் கொடுப்பதற்காக எடுத்திருக்கிற கர்மத்துக்கு ஐந்து ஜன்மம் அனுபவிக்கவேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்படி எடுத்த கர்மத்துக்கு *ப்ராரப்த கர்மம்* என்று பெயர்.


    இப்படி ப்ராரப்த கர்மத்தில் சில பாகம் (அதாவது 3 ஜன்மம்) அனுபவித்தாய்விட்டது. 4வது ஜன்மம் இப்போது நடக்கிறது. இதற்குப் பெயர் *அப்யுபகத ப்ராரப்தம்*.


    இன்னும் வரவேண்டியதான 5வது ஜன்மத்தைக் கொடுக்கிற பாகத்துக்கு *அநப்யுபகத ப்ராரப்தம்* என்று பெயர்.


    இனி ஜன்மம் எடுக்கிற காலங்களில் செய்கிற கர்மத்துக்கு *ஆகாமி கர்மம்* என்று பெயர்.


    *நம்முடைய சரணாகதியால் எது தொலைகிறது?*


    *ஸஞ்சித பாபம் பூராவும் போய்விடுகிறது*.


    ப்ராரப்தத்தில் *அநப்யுபகதம் பூராவும் போய்விடுகிறது*.


    *அப்யுபகதம் மட்டும் நடக்கிறது*. இது நம்முடைய சரணாகதியால் போகவில்லை. ஏன்?


    நம்முடைய ப்ரார்த்தனையில் *"ஏதத் தேஹாவஸாநே மாம்"* என்று கேழ்க்கிறோம். ததிபாண்டன் உடனே மோக்ஷம் வேண்டுமென்று கேட்டான்; உடனே மோக்ஷம் போய்விட்டான்.


    இனி ஆகாமி பாபம் என்ன ஆகிறது என்று பார்ப்போம். அதாவது *சரணாகதிக்குப் பிற்பாடு* நாம் இப்போது இருக்கிறோமே, இந்தக் காலத்தில் நாம் செய்கிற *கர்மங்களுக்குப் பலம் என்ன*?


    நாம் செய்கிற கர்மம் இரண்டு விதம் - *புத்தி பூர்வமானது, தன்னறியாமல் செய்வது*.


    நம்மைறியாமல் செய்கிற கர்மம் நம்மை ஒட்டாது. புத்திபூர்வமான கர்மமோ என்றால், நாம் பரமபதத்தில் போய்ப் பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்யவேணுமென்று ஆசைப்பட்டே சரணாகதி செய்திருக்கிறபடியால் அந்தக் கைங்கர்யத்தை இங்கே விடமாட்டோம்.


    *பெருமாளுக்குக் கைங்கர்யமாவது அவன் இஷ்டமான கார்யத்தைச் செய்வது தான்*. ஆனால் பெருமாளுக்கு இஷ்டமான கைங்கர்யம் எது என்று நாம் எப்படி அறியமுடியும்? பெருமாளோ நம்முடன் பேசுகிறதில்லையே என்றால், ஒரு தாசில்தார் ராஜஸேவகன்.


    அவர் ராஜாவுக்கு இஷ்டமான வேலை என்னது என்பதை லண்டன் மாநகரத்தில் போய் நேரில் அறிந்துகொள்ள முடியவில்லை. அப்படி இருந்தும் அதற்காக ராஜா தன் இஷ்டமான வேலை ஓர் தாசில்தார் செய்யவேண்டுவது என்னவென்று *Standing Orders* இல் எழுதிவைத்துள்ளார்.


    அதுபோல் நம்முடைய ராஜாவான பெருமாள் நமக்கு Standing Orders எழுதிவைத்துள்ளார். *அது தான் ச்ருதி ஸ்ம்ருதி*.


    இப்படிப் பெருமாள் இஷ்டப்படி வேலை நித்யமாகச் செய்வதற்காக நாம் சரணாகதி செய்திருந்தபோதிலும், பெருமாள் இஷ்டம் இன்னது என்று ச்ருதி ஸ்ம்ருதி மூலமாக நாம் அறிந்திருந்தபோதிலும், நம்முடைய ப்ராரப்த பாபத்தில் சில கர்ம பலமாக நமக்குச் சில பாபம் இப்போது செய்யும்படி நேரிடுகிறது. இதை *பாபாரம்பக பாபம்* என்று சொல்லுகிறது. இந்தப் பாபாரம்பாக பாப பலமாக *புத்தி பூர்வமாகப் பாபம் செய்கிறோம்*.


    இப்படியான புத்தி பூர்வகமான கர்மத்துக்கு என்ன பலன்?


    அவைகளின் பலனை அனுபவிப்பதற்காக வேறு எத்தனையோ ஜன்மங்கள் எடுக்கத்தானே வேணும்? - எப்படி க்ருதக்ருத்யன்? என்று கேழ்வி ஏற்படுகிறது.


    இப்படி புத்திபூர்வமான கர்மம் நேர்ந்தால் அதற்காகப் *பெருமாள் நமக்கு ஏற்படுத்துகிற தண்டனை புநர்ஜன்மம் இல்லை*.


    ஏனென்றால் நாம் பெருமாளைச் சேர்ந்தவர்கள். பெருமாளுக்கு நாம் வாழ்க்கைப்பட்டுவிட்டோம். *நம்முடைய சரணாகதி மூலமாக, ஆசார்யாள் நம்மைப் பெருமாளுக்குக் கன்னிகாதானம் செய்துகொடுத்துவிட்டார்கள்*.


    ஒரு குறவன் ஒரு குற்றத்தைச் செய்துவிட்டால், அவனுக்கு விதிக்கிற தண்டனை எப்படி அரசன் தன் பெண்ஜாதியன இராணி செய்துவிட்டால் அவளுக்குத் தண்டனை எப்படி? ராஜகுமாரன் அதே குற்றத்தைச் செய்துவிட்டால் அவனுக்குத் தண்டனை எப்படி? அதுபோல் *ப்ரபன்னன் செய்த பாபத்துக்குப் தண்டனை ரொம்ப இலகுவானது தான். மறு ஜன்மம் இவனுக்குக் கிடையாது*.


    அதிலும் இப்படிப் *பாபம் செய்கிறவன், மன்னிப்புக் கேட்டுவிட்டால் உடனே இதையும் க்ஷமித்துவிடுகிறான்*. அந்தக் கர்மமும் போய்விடுகிறது.


    ஆனதால் ஒவ்வொரு ப்ரபன்னனும் *தினம் ராத்ரியில் படுக்கும்போது ஒரு சின்ன கார்யம்* செய்தால் அது *மஹத்தான உபகாரமாகும்*.


    *தெரிந்தும் தெரியாமலும் நாம் என்ன பாபம் செய்தாலும்* அதற்கு *ப்ராயச்சித்தம் பெருமாளிடம் போய் பொறுத்துக்கொள்ளும் என்று கேழ்ப்பது தான்*.


    ஆனதால் எந்த விதத்திலும் நமக்கு இந்த தேஹம் போன பிறகு *மோக்ஷம் நிச்சயம் தான்*. நாம் இப்படி ப்ராயச்சித்தம் செய்யாவிட்டாலும் பெருமாள் நம்முடைய குற்றத்துக்காக நமக்கு ஒரு *இலகுவான தண்டனை* கொடுத்து எப்படியும் நமக்கு மோக்ஷம் கொடுப்பது நிச்சயம்.


    ஆசார்யன் திருவடிகளே சரணம்.
Working...
X