Announcement

Collapse
No announcement yet.

How to do darshan in temple?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • How to do darshan in temple?

    பற்றிக் கொள்ள வேண்டியது எதனை?பார்த்து மகிழ வேண்டியது எது?


    ஆலயத்தில் இறைவனைத் தரிசிக்கும்பொழுது முதலில் திருவடிகளைத்தான் தரிசிக்க வேண்டும். திருவடியிலிருந்து சிறிது சிறிதாக நம் முகத்தை உயர்த்தி கடைசியில் இறைவன் திருமுகத்தில் வந்து நிலைபெற வேண்டும். சில விவரமான அர்ச்சகர்கள் தீப ஆராதனை செய்யும்பொழுது திருவடிகளில் இருந்து துவங்கி சிறிது சிறிதாக முகத்திற்கு நேரே கொண்டு வருவார்கள். அதுதான் சரி!


    பற்றிக்கொள்ள இரண்டு என்று சொன்னது திருவடிகளை. பார்த்து மகிழ ஆறு என்பவை எவை? முருகனின் ஆறு திருமுகங்கள்!


    அது ஏன் திருவடிகள் மட்டும் இரண்டு? அடியவர்களாகிய நம் கரங்களோ சிறியவை.
    அவற்றால் பற்றிக் கொள்ள எளிதாய் இருக்க வேண்டாமா? அதனால்தான் திருவடிகள் மட்டும் இரண்டு!


    முருகனுக்கு மட்டுமல்ல; மற்ற தெய்வங்களுக்கும் முகங்கள் பலவானாலும் திருவடிகள் மட்டும் இரண்டேதான். பதினாறு கரங்கள் கொண்ட துர்க்கா தேவிக்கும் திருவடிகள் இரண்டுதான்.


    எல்லா தெய்வங்களுமே நம்மிடம் கருணை கொண்டவை. சரணடையும் நம்மைக் காப்பது அவர்கள் கடமை. ஆகவேதான் இறைவனை சரணாகதவத்சலன் என்கிறோம்.


    சரணம் என்ற சொல்லே திருவடியைக் குறிப்பதுதான். ஐயப்பன் வழிபாட்டின் மூலம் அது கோஷமாகி விட்டது.
    அருணகிரிநாதரும் திருப் புகழில் சரணக் கமலாலயம் என்கிறார். திருவடியையே ஆலயமாகக் கூறிவிட்டார்.


    "என்னைச் சரணடைந்து விடு; உன்னைக் காப்பது என் கடமை' என்கிறான் கீதாசார் யன் கண்ணன். "என்னை சரணடைந்த எல்லா உயிர் களையும் காப்பதை என் கொள்கையாகக் கொண்டிருக் கிறேன்' என்கிறான் இராமபிரான். (அபயம் சர்வ பூதேப்யோ ஏதத்வ்ரதம் மம.)✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡
Working...
X