Announcement

Collapse
No announcement yet.

புல்லாணிப்பக்கங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புல்லாணிப்பக்கங்கள்

    தினமும் ஒரு பாதுகா ஸஹஸ்ரம்
    யதாதாரம் விச்வம் கதிரபி ச யஸ்தஸ்ய பரமா
    தமப்யேகா தத்ஸே திசஸி ச கதிம் தஸ்ய ருசிராம்
    கதம் ஸா கம்ஸாரேர் த்ருஹிணஹரதுர்போதமஹிமா
    கவீநாம் க்ஷூத்ராணாம் த்வமஸி மணிபாது ஸ்துதிபதம் II
    ஸ்ரீமத் ஆண்டவன்: பாதுகையே! எல்லா லோகத்தையும் பெருமாள் தூக்குகின்றார். அவரை நீயொருவனாகவே தூக்குகின்றாய். எல்லா ஜீவர்களும் பெருமாளைத் தான் போய்ச் சேரவேண்டும். அந்தப் பெருமாள் ஒரு இடத்துக்குப் போக வேண்டுமானால் உன்னைச் சாற்றிக்கொண்டுதான் போக வேண்டியிருக்கிறது.பிரமன், சிவன் முதலானவர்களாலும்கூட உன்னுடைய பெருமையை அறிய முடியாது.அப்படியிருக்க, என்னைப் போன்ற அற்பக்கவிகள் உன்னை எவ்விதமாய் ஸ்தோத்திரம் பண்ணமுடியும்? ஆழ்வார்பதத்தில், தூங்குகிற வஸ்து ஆத்மா. தூக்கப்படுகிறது சரீரம். ஸகல லோகத்துக்கும் பெருமாள் ஆத்மா. அந்தப் பெருமாளுக்கு ஜ்ஞானியான ஆழ்வார் ஆத்மா. ஆழ்வார் அனுக்கிரஹத்தினால்தான் ஒருவனிடத்தில் பெருமாள் வருகிறார். பிரம்மா, சிவன் முதலானவர்கள் ஐச்வர்யத்தை ஆசைப்படுகிறார்கள். ஆழ்வாருக்குப் பெருமாளைத் தவிர வேறொரு பதார்த்தமும் வேண்டாம். அந்த ஆழ்வாரை மூடனான நான் எப்படி ஸ்தோத்திரம் செய்வேன்? பெருமாள் சொல்லிக்கொடுத்தால்கூட என்னால் முடியாது.
    ஸ்ரீ ல.ந்ரு. மணிபாதுகையே! அனைத்து உலகங்களையும் பகவான் தாங்கி நிற்கிறார். அவரை நீ தாங்குகிறாய். பிரம்மா, சிவன் ஆகியோராலும் அறிந்து கூற முடியாத உன் பெருமைகளை அற்ப கவியான நான் ஸ்தோத்திரம் பண்ணுவது எப்படி முடியும்?
    தேசிக நூற்றந்தாதி
    பற்று ஒன்றும் இன்றிப் பராங்குசனையே பற்றும்
    சித்தம் உடை வேதாந்த தேசிகனை - குற்றம் இல்லா
    அன்பால் அடைபவர்க்கு ஆளாகும் அன்பரே
    என்பால் இருப்பர் இசைந்து.
    இசைந்தேன் மனம் இவரை ஏத்த எப்போதும்
    கசிந்துகரையும் உளம் என்செய்கேன் -- பசுந்துளவ
    மாலையான் தன்னிலும் மன்னினரே வண்டுஅறையும்
    சோலைசூழ் தூப்புல் இறை.
    Posted by Raguveeradayal Thiruppathi Iyengar
    தினம் ஒரு பாடல்
    தேசிக நூற்றந்தாதி


    2. மலர்மகள்கோன் தாளிணையை மன்னியிருப்பார்கள்
    சிலர் அவரால் செய்கருமம் என்னாம்? -- மலம் அறுசீர்
    வேதாந்த தேசிகனை வேறுஆகாது ஏத்துவார்
    பாதாம்புயம் நமக்குப் பற்று.
    Last edited by soundararajan50; 15-07-16, 21:40.
Working...
X