Announcement

Collapse
No announcement yet.

Mylapore

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Mylapore

    Courtesy:Sri.N.jayakumar


    மயிலைக்குத்தான்
    எத்தனைப் பெயர்கள்?


    மயிலாப்பூர் என்பதே மயிலை என்றும் மருவியது. மயிலையே கயிலை கயிலையே மயிலை என்றும் அழகுறச் சொல்வார்கள், இந்தத் தலத்தை! மயில், ஆர்ப்பு, ஊர் என்பதே மயிலாப்பூர் என்றானதாம்! அதாவது, மயில்கள் அதிகம் நிறைந்திருக்கும் இடம் என்று அர்த்தம். மயில்கள் ஆரவாரம் செய்த ஊர் என்றும் கொள்ளலாம்.
    அதுமட்டுமா? மயூராபுரி, மயூராநகரி என்றெல்லாம் இந்தத் தலம் குறித்து பிரம்மாண்ட புராணம் விவரிக்கிறது. ஸ்ரீபார்வதிதேவி, மயிலாக வந்து சிவனாரை வழிபட்ட அற்புதமான திருத்தலம். எனவே மயூராபுரி, மயிலை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.


    சோமுகாசுரன் என்பவன் வேதங்களை களவாடிச் செல்ல, மகாவிஷ்ணு அவனை அழித்து, வேதங்களைக் காத்தருளிய தலம் இது. எனவே புராணத்தில் வேதபுரி என்று மயிலாப்பூருக்குப் பெயர் உண்டு.


    சுக்ராச்சார்யர், இங்கே உள்ள சிவலிங்கத்திருமேனியை தினமும் வழிபட்டு, தவம் இருந்தாராம். இதனால் சிவனருளைப் பெற்று, உமையவள் சகிதமாக சிவனாரின் திருக்காட்சியைத் தரிசிக்கும் பாக்கியத்தையும் பெற்ற திருத்தலம். எனவே, சுக்ராபுரி என்றும் மயிலாப்பூருக்குப் பெயர் இருந்திருக்கிறது என்கிறது ஸ்தல புராணம்!
    ஏழுக்கும் மயிலைக்கும் தொடர்பு!
    பொதுவாகவே, ஏழு என்ற எண்ணுக்கும் இந்து மதத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. ஏழு ஜென்மம் என்பார்கள். ஏழு புண்ணிய நதிகள் என்பார்கள். ஏழு ஸ்வரங்கள் என்று இசையைச் சிலாகிப்பார்கள். சப்த முனிவர்களுக்கு புராணத்தில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.


    தஞ்சைக்கு அருகில் சப்த ஸ்தான ஸ்தலங்கள் என்று உள்ளன. அதேபோல் சப்த மங்கை திருத்தலங்கள் என்று அமைந்திருக்கின்றன. திருவாரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள தியாகாராஜர் குடிகொண்டிருக்கும் தலங்களை, சப்த விடங்க தலங்கள் என்று போற்றுவார்கள்.


    அதேபோல், ஏழுக்கும் மயிலாப்பூர் தலத்துக்கும் தொடர்புகள் பல உண்டு. ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீவெள்ளீஸ்வரர், ஸ்ரீகாரணீஸ்வரர், ஸ்ரீமல்லீஸ்வரர், ஸ்ரீவிருபாட்சீஸ்வரர், ஸ்ரீவாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய சிவாலயங்கள் இங்கே அமைந்துள்ளன. இந்த ஏழு சிவன் கோயில்களும் அருகருகே உள்ளன. இந்தக் கோயில்களை முறையே ஒரேநாளில் தரிசிக்கலாம். அப்படித் தரிசித்தால், சகல வினைகளும் தீரும். முக்தி பெறலாம் என்பது ஐதீகம்! இத்தனைப் பெருமைக்கு உரிய தலம் என்பதால்தான், கயிலையே மயிலை, மயிலையே கயிலை எனும் பெருமை பெற்றது இந்தத் திருத்தலம். அதாவது திருக்கயிலாயத்துக்கு இணையானது மயிலாப்பூர் தலம்!


    அதேபோல் மயிலாப்பூரில் ஏழு பெருமாள் கோயில்கள் உள்ளன. மயிலாப்பூர் கோயிலுக்கு அருகில் உள்ள திருக்குளம் உட்பட ஏழு திருக்குளங்களும் உள்ளன. கபாலி தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், கடல் தீர்த்தம் (கடவுள் தீர்த்தம் என்பார்கள்), ராம தீர்த்தம் என ஏழு தீர்த்தங்களைக் கொண்டது மயிலாப்பூர்.⁠⁠
Working...
X