தவளை ஒன்று காட்டில் வாழ்ந்தது - அது
தினம் கிடைக்கும் பூச்சி தின்றது
கவலை இன்றி வாழ்ந் திருந்தது - அதை
கவ்விட வோர் பாம்பும் வந்தது
இரண்டு காலை பாம்பு பிடித்தது - தவளை
அந்த வலியில் துடி துடித்தது
இறக்கும் தவளை வாயருகிலோர் - பூச்சி
இறக்கை ஆட்டி பறந்து வந்தது
அரவம் கவ்வி நின்ற போதிலும் - தவளை
அதனை வாயிற் போட்டுக் கொண்டது
மரணம் காத்து நிற்கும் போதிலும் - நாம்
மண்டூகம் போலே வாழ லாகுமோ?
தினம் கிடைக்கும் பூச்சி தின்றது
கவலை இன்றி வாழ்ந் திருந்தது - அதை
கவ்விட வோர் பாம்பும் வந்தது
இரண்டு காலை பாம்பு பிடித்தது - தவளை
அந்த வலியில் துடி துடித்தது
இறக்கும் தவளை வாயருகிலோர் - பூச்சி
இறக்கை ஆட்டி பறந்து வந்தது
அரவம் கவ்வி நின்ற போதிலும் - தவளை
அதனை வாயிற் போட்டுக் கொண்டது
மரணம் காத்து நிற்கும் போதிலும் - நாம்
மண்டூகம் போலே வாழ லாகுமோ?