Announcement

Collapse
No announcement yet.

Palindrome

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Palindrome

    Palindrome




    தேரு வருதே, மாடு சாடுமா, மோரு தாருமோ தோடு ஆடுதோ..
    மாலைமாற்று அல்லது இருவழியொக்கும் சொல் (Palindrome) என்பது எந்தத் திசையிலிருந்து வாசித்தாலும் ஒரே மாதிரி இருக்கும் சொல்.
    Palindrome என்பது ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் (316 ஆண்டுகளுக்கு முன்பு) பயன்படுத்தப்பட்டது ஆனால் தமிழில் இது திருஞான சம்மந்தர் நாயனார் காலத்தில் (7ஆம் நூற்றாண்டு - 1316 ஆண்டுகளுக்கு முன்பு) இருந்தே இருக்கிறது.
    :::::ஆங்கிலத்தில்:::
    Was it a cat I saw?,
    Do gees see God?,
    A Toyota's a Toyota,
    A nut for a jar of tuna,
    Madam, I am Adam
    போன்ற தொடர்கள் மாலைமாற்றுகள் ஆகும்.
    ::::தமிழ் மொழியில்:::
    தேரு வருதே,
    மாடு சாடுமா,
    மோரு தாருமோ
    தோடு ஆடுதோ
    போன்ற தொடர்கள் மாலைமாற்றாக அமைந்துள்ளது
    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களும் ஒரு மாலைமாற்றுத் திருக்கடைக்காப்பும் உள்ளன.
    கீழ்வரும் பாடல் அவற்றுள் ஒன்று.
    யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
    காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
    இந்தப் பாடலைக் கடைசி எழுத்திலிருந்து முதல் எழுத்து வரையில் ஒவ்வொரு எழுத்தாகத் திருப்பி எழுதிப் படித்தாலும் இதே பாடல் வருவதைக் காணலாம்.
    பாடலின் பொருள்:
    யாம் ஆமா - யாம் ஆன்மா என்னும் பசு, சீவாத்மா
    நீ ஆம் மாமா - நீ பெரிய ஆன்மா, பரமாத்மா
    யாழ் ஈ காமா - யாழிசை நல்கிய என் ஆசைப் பொருளே
    காணாகா - இப்படியெல்லாம் கண்டு என்னைக் காப்பாற்று
    காணாகா - இப்படியெல்லாம் பிரித்துக் காணாமல்
    என்னைக் காப்பாற்று
    காழீயா - சீர்காழியானே
    மாமாயா நீ - அம்மை அம்மை ஆம் நீ
    மாமாயா - (இப்படி) பெரிய மாயமானவனே
    இப்படிப் பத்துப் பாடல்கள் உள்ளன.
    எளிய பாடல்:
    தேரு வருதே மோரு வருமோ
    மோரு வருமோ தேரு வருதே
    இதனைத் திருப்பிப் படித்தாலும் இதே பாடல் வரும்
    பாடலின் பொருள்
    வெயில் கடுமையாக உள்ளது. தேர் வரும்போது நீர் மோர் வருமோ? நீர் மோர் வருகிறது. ஓ! தேரும் வருகிறது. நன்று, நன்று.
Working...
X