ஸ்வாமின்,
தாங்கள் ஸ்ரீ.தாமல் லக்ஷ்மிநரசிம்ஹ ஸ்வாமிக்கு கூரிய விரிவான பதிலை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.ஏனென்றால் எங்கள் அகத்தில் நடந்த இரண்டொரு சம்பவங்களிள் ஏனோ தானோ வென்று சில பாசுரங்களை சொல்லிவிட்டு கை நிறைய சம்பாவனையை மாத்திரம் வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். வந்திருந்த பெரியோர்களும் இதைப்பற்றி வாய் திறக்கவில்லை. எனக்கோ அப்போது எதுவும் தெரியாது. அடியேன் எதாவது இந்த வைதீகாளை பற்றி சொன்னால் சில பலருக்கு கோபம் வந்து விடுகிறது. நீர் மேல சொன்ன விபரங்களை குறித்துவைத்துக்கொண்டுஇருக்கிரேன். இனி அடியேனை யாரும் ஏமாற்றமுடியாது. இந்த விஷயத்தில் ஸ்ரீ தாமல் ஸ்வாமிக்கு அடியேனின் நன்றி உரித்தாகுக. இல்லை என்றால் இதைப்பற்றி எனக்கு தெரியாமலே இருந்திருக்கும். இம்மாதிரி பல வைதீக விஷயங்களை உம்மாதிரியான பெரியோர்கள் பலருக்கும் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று ப்ராத்திக்கின்றேன். அடியேன்... நரசிம்ஹதாசன்.
Comment