ஶ்ரீராம நவமி பாடல்
ஶ்ரீராம நவமியன்று காலையில் பாடவேண்டும்
"நன்மையும் செல்வமும் நாளும் நலகுமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென்றிரண்டெழுத்தினால்"
வேய்புனர் பூசமும் விண்ணுளோர்களும்
தூயகற்கடகமும் எழுந்து துள்ளவே
சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும் விண்ணுளோர்களும்
நித்தரும் முறைமுறை நெருங்கி யார்புறத்
தத்துறல் ஒழிந்து நீள் தருமமும் ஓங்கவே.
ஒரு பகல் உலகெலாம் உதரத்துட் பொதிந்து
அருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக்
கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்கொள் சோசலை.
ஶ்ரீராம நவமியன்று காலையில் பாடவேண்டும்
"நன்மையும் செல்வமும் நாளும் நலகுமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென்றிரண்டெழுத்தினால்"
வேய்புனர் பூசமும் விண்ணுளோர்களும்
தூயகற்கடகமும் எழுந்து துள்ளவே
சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும் விண்ணுளோர்களும்
நித்தரும் முறைமுறை நெருங்கி யார்புறத்
தத்துறல் ஒழிந்து நீள் தருமமும் ஓங்கவே.
ஒரு பகல் உலகெலாம் உதரத்துட் பொதிந்து
அருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக்
கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்கொள் சோசலை.