திருவாதிரை களி
தேவையானவை:
புழுங்கல் அரிசி-2 டம்ளர்
வெல்லம்-500கிராம்
நெய்-250கிராம்
தேங்காய் துருவல்-2கப்
முந்திரி-100கிராம்
திராட்சை-100கிராம்
ஏலக்காய் தூள்-1டீஸ்பூன்.
செய்முறை; அரிசியை 1மணிநேரம் ஊறவைத்து இட்லி மாவு பதத்திற்கு நைசாக அரைக்கவும். பாத்திரத்தில் வெல்லம் தூள் செய்து அதில் போட்டு கரைந்ததும் வடிகட்டி தேங்காய் துருவல் சேர்த்து (இதில் நெய் சிறிது ஊற்றினால் கொதிவரும் போது அடிபிடிக்காது.) பிறகு அரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறவும். அவ்வபோது நெய் சிறிது ஊற்றி 3/4 மணிநேரம் கைவிடாமல் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய்யில் வருத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும். இந்த களியை முதல் நாள் இரவு செய்து மறுநாள் சாப்பிடசுவை நன்றாக இருக்கும்.
குறிப்பு: மார்கழி மாத திருவாதிரை நட்சதிரத்தன்று இதை சிவனுக்கு பிரசாதமாக செய்வார்கள்.