திருவாதிரை களி-தமிழ்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கிண்ணம்
வெல்லம் (பொடித்தது) - 2 கிண்ணம்
பயிற்றம் பருப்பு -1/2 கிண்ணம்
கடலைப் பருப்பு -1/2 கிண்ணம்
நெய் - 6 தேக்கரண்டி
ஏலக்காய் - 4 எண்ணம்
தேங்காய் - 1 எண்ணம்
செய்முறை:
1. பச்சரிசியை வெறும் வாணலியில் போட்டு பொரியரிசி போல் வரும்வரை சிவக்க வறுக்கவும்.
2. பயிற்றம் பருப்பையும், கடலைப் பருப்பையும் இதேபோல் தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.
3. தொடர்ந்து, இந்த மூன்றையும் மிக்சியில் ரவை பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.
4. வெல்லத்தை ஆறு கிண்ண அளவுள்ள தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
5. அதில் அரைத்து வைத்த மாவைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். மாவு கெட்டியாகி விடாமல் நன்றாக கிளறி விடவும்.
6. மாவு வெந்தவுடன், அதனுடன் நெய் சேர்த்து, தேங்காய்த் துருவல் மற்றும் ஏலக்காயையும் போட்டு கிளறி இறக்கி விடுங்கள்.
-நெல்லை விவேகநந்தா