Announcement

Collapse
No announcement yet.

திதிகளில் பூஜைகள்.25

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திதிகளில் பூஜைகள்.25

    இவ்வாறு எவன் ஏழு ஸப்தமிகளில் நியமத்தோடு விரதம் இருக்கிறானோ அவனுக்கு எல்லா பாபங்களும் நீங்கி விடும்.

    எருக்கு இலைகளால் அர்ச்சனை செய்தால் பணம் பெருகும். மாசிபச்சை இலைகளால் அர்ச்சனை செய்தால் விருப்பமானவரோடு சிநேகம் உண்டாகும்.

    வேப்பிலையால் அர்ச்சனை செய்தால் வியாதி விலகும் .பழங்களால் அர்ச்சித்தால் உத்தமமான குழந்தைகள் பிறக்கும்.

    பிராமணர்களுக்கு சாப்பாடு போட்டு தக்ஷிணை தர வேண்டும். எதை விரும்பினாலும் அதை அடைய முடியும்.ஸப்தமி விரதத்தில் எவனொருவன் எந்தெந்த பொருட்களை மகிழ்ச்சியோடு தானம் செய்கிறானோ அந்தந்த பொருட்கள் அவனுக்கு பல மடங்கு பெருகும்..

    பனிரெண்டு சுக்ல ஸப்தமிகளில் எவன் பசுஞ்சாணியை உட்கொண்டு பூஜிகிறானோ அவன் அளவற்ற பலன் அடைவான் .கஞ்சி மட்டும் குடித்தும், பால் மாத்திரம் சாப்பிட்டும், உலர்ந்த சருகு மாத்திரம் சாப்பிட்டும்,

    ஒரு வேளை ஆகாரம் மட்டும் சாப்பிட்டுகொண்டும், ஜலத்தை மட்டுமே அருந்தியும், பிச்சை எடுத்து சாப்பிட்டு இருந்தும் இந்த ஸப்தமி விரதம் ஆண்/ பெண் இரு பாலாரும் இருக்கலாம். அவரவர் சக்திக்கேற்ப ஒவ்வொரு மாதமும் ஆராதனை செய்ய வேண்டும்.

    பசுஞ்சாணியால் மெழுகிய இடத்தில் சூரிய மண்டலம் வரைந்து அதில் ஆவாஹனம் செய்யலாம்.. ஆகாசத்தில் ப்ரகாசிக்கும் சூரிய பிம்பத்திலும், அக்னி, ஜலம், ப்ரதி பிம்பம், யந்திரம், தங்கம் அல்லது செப்பு பாத்திரத்திலும் ஆவாஹனம் செய்யலாம்..ஆல மரத்திலும் ஆவாஹனம் செய்யலாம்.

    சூரியனுக்கு ஒவ்வொரு உபசாரம் செய்யும் போதும் நமஸ்காரம் செய்யலாம்.ஸப்தமி வ்ருதம் இருந்து பூஜை செய்பவர்கள் சூரியனுக்கு இருபத்து நான்கு உபசாரங்கள் செய்ய வேண்டும்.அந்தந்த உபசாரத்திற்கு சொல்லப்பட்டுள்ள மந்திரங்களை பக்தியோடு சொல்லி பூஜிக்கவும்.

    முதல் உபசாரம்;1. ஆவாஹனம்:-- நிர்குண ஸ்வரூபியும், நிஷ்கல மானவருமான சூர்யனை ஸகுண ஸ்வரூபியாக பிம்பத்தில் ஸான்னித்யம் கொள்ளுமாறு மந்திரம் சொல்லி அழைப்பது.

    2.ஆசனமளித்து அதில் உட்காருமாறு வேண்டுவது. ஸ்தாபனம்.
    3.வேறு இடங்களுக்கு போகாமல் அந்த ஆசனத்திலேயே அமர வைப்பது ரோதனம்.

    4. சூரியனை ஒருமனத்தோடு தியானிப்பது ஸான்னித்யம்.
    5,கால்களில் ஜலம் விட்டு அலம்புவது பாத்யம்
    .
    6.தாமிர பாத்திரத்தில் சந்தனம் கலந்த ஜலத்தில் வாசனை பூக்கள் போட்டு இரண்டு முழங்கால்களால் நடந்து சூரியனுக்கு ஜலம் அளிப்பது அர்க்கியம்.

    7. பால்,தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிருதம், தேன், பழச்சாறு, வாசனை பவுடர், சுத்த நீராலும், அபிஷேகம் செய்வது ஸ்நானம்.

    8.சந்தனம், குங்குமம் திலகமிடுவது அக்ஷதை போடுவது சந்தனம் உபசாரம்.

    9. அழகிய வஸ்த்ரம் சூரியனுக்கு சார்த்தி அலங்கரிப்பது வஸ்த்ரம் என்ற உபசாரம்.
    10.மலர் மாலை சாற்றி பாதங்களில் மலர் தூவுவது புஷ்பம் என்ற உபசாரம்.

    11.ஆபரணங்கள் அணிவிப்பது ஆபரணம் என்ற உபசாரம்
    12.ஊதுபத்தி, சாம்பிராணி, தசாங்கம் புகை போடுவது தூபம் என்ற உபசாரம்.

    13.நெய்யிட்ட திரியை ஏற்றி சூரியனுக்கு அலங்காரமாக காட்டுவது தீபம்.

    சூரிய பூஜைக்கு குறைந்த பக்ஷம் அறுபது விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். இதற்கு மேலும் ஏற்றலாம்.

    14. சூரியனுக்கு அங்க பூஜை அங்கங்கள் பெயர் சொல்லி அந்தந்த அங்கங்களில் அர்ச்சனை செய்வது. அங்க பூஜை.
    15.சூரியனுக்கு நிவேதனம் செய்து பரிவார தேவதைகளுக்கு பலி போடுவது.

    16. மறுபடியும் சந்தன ஜலத்தால் அர்க்கியம் தருதல்.
    17.சூரிய ஜபம் செய்வது.
    18.முத்திரைகளால் தேகத்தை தேவதா மயமாக்கி கொள்வது நியாசம் எனும் உபசாரம்.

    19.மந்திர ஸ்லோகங்களால் துதி செய்வது ஸ்தோத்ரம் எனும் உபசாரம்.
    20. அக்னி குண்டத்தில் ஹோமம் செய்வது ஹோமம் என்ற உபசாரம்

    21.பூஜை செய்ததனால் ஏற்படக்கூடிய பலன்கள் தனக்கு சித்தியாக வேண்டும் என ப்ரார்திப்பது ஸம்ஹாரம் என்ற உபசாரம்.

    22சூரியனின் கை கால்களை அலம்பி விடுவது சுத்த பாதம் என்ற உபசாரம்
    23. பகவானை த்ருப்தி படுத்துவதற்காக விசிறி, பாட்டு, நடனம் முதலியன செய்வது விஹாரணம் என்னும் உபசாரம்.
    24. சூரியனை யதாஸ்தானம் செய்வது விஸர்ஜனம் எனும் உபசாரம்.

    மூல மந்திரங்களை கூறி இருபத்து நான்கு உபசாரங்களையும் செய்ய வேண்டும். விஸர்ஜனம் செய்து ஹோமம் முடிந்த பிறகு சிறிது புஷ்பம்,,ஹோம பஸ்பம் ஆகியவற்றை வடக்கு திக்கில் வைக்க வேண்டும்,
Working...
X