திதி பூஜைகள் தொடர்ச்சி-2.1
ஆதித்ய ஹ்ருதய வ்ருதம்:---சங்கராந்தி ஞாயிற்றுகிழமை வந்தால் அன்று வ்ருதத்தை தொடங்கலாம். 17-8-2014 அன்று ஆவணி மாத ஸங்க்ரமணம்.ஞாயிறு கிழமை. இன்று சூரிய பூஜை செய்து ஆதித்ய
ஹ்ருதயம் படித்து வழிபட வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்து ப்ராம்மண போஜனம் செய்வித்து , இரவில் வெள்ளரிக்காய் கலந்த அன்னத்தை புஜித்து , தரையில் படுக்க வேண்டும்
108 தினங்கள் இதை தொடர்ந்து செய்தால் எல்லா இஷ்டங்களும் நிறைவேறும்..
ரஹஸ்ய ஸப்தமி:--மிகவும் சிலாக்கியமானது. முந்தய பிறவிகளில் செய்த பாவங்களை போக்கவல்லது. வரும் பிறவிகளில் சிறப்பாக வாழ வகை செய்யும். குலத்தில் முன்னோர்கள்
செய்த பாவத்தையும் போக்கி அவர்களுக்கு நற்கதி அளிக்கும்.சித்திரை சுக்ல ஸப்தமியில் துவங்க வேண்டும். சதா சூரியனையே ஸ்மரிக்க வேண்டும். எல்லோருடனும் அன்பாக பழக வேண்டும்.
எக்காரணம் கொண்டும் எண்ணையை தொடக்கூடாது. நீல வர்ண துணிகளை அணியக் கூடாது .நெல்லிக்காய் தவிர்க்க பட வேண்டும். கலகம் எதுவும் செய்யக் கூடாது.
இந்த நாளில் வாய் பாட்டு, வீணை வாத்தியம் வாசிப்பது, நடனமாடுவது, அநாவஸ்யமாக சிரிப்பது, பெண்களுடன் படுப்பது, சூதாடுவது , அழுவது, பகலில் தூங்குவது, பொய் சொல்லுவது,
பிறருக்கு துன்பம் தர எண்ணுவது அடுத்த ஜீவனுக்கு கஷ்டம் தருவது, அதிகமாக சாப்பிடுவது துஷ்டத்தனம் சோகம், ஆகியவை கூடாது.
கோபபடக்கூடாது. கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது.
சித்திரை மாதம் துவங்கும் இந்த விரதத்தை 12 மாதங்களில் 12 ஆதித்யர்களான தாதா, அர்யமா, மித்ரன்,வருணன் ,இந்திரன், விவஸ்வான், பர்ஜன்யன், பூஷா,அம்சு, பகன், த்வஷ்டா, விஷ்ணு ,
ஆகியோர்களை மாதம் ஒருவராக பூஜை செய்து போஜக ப்ராஹ்மணனுக்கு நெய்யுடன் அன்னமளிக்க வேண்டும். அதன் பிறகு பாலுடன் ஸ்வர்ண பாத்திரத்தை தானம் செய்ய வேண்டும் தக்ஷிணையுடன், சூரிய லோகத்தில் வசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.
ஐப்பசி, கார்த்திகை, மாசி, சித்திரை மாதங்களீல் சிவன் அல்லது விஷ்ணு பூஜை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். ப்ரதமை திதியில் அக்கினி தேவனுக்கு சடங்குகள், ஹோமம் செய்வித்தல் போன்றவற்றை செய்வதால் தனம் தானியம் மற்றும் கோரிய பலன்கள் கிடைக்கும்.
ஆடி, ஆவணி மாதங்களில் சூரியன். ஆஷாட, கர்கடக ராசிகளில் பிரவேசிக்கும் சமயம் த்விதியை சேர்ந்தால் விஷ்ணு பூஜை மிக விசேஷம்.
ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷ த்விதியை அன்று லக்ஷ்மி நாராயண பூஜை செய்வது பல நற்பலன்கள் தரும். கணவன் மனைவி பிரிவு ஏற்படாது. பிறிந்தவர் கூடுவர். 10-9-2014.
வைகாசி மாதம் சுக்ல பக்ஷ த்ருதியை அன்று கங்கை ஸ்நானம் செய்வது விசேஷம், மாசி மாதம் த்ருதியையும் ரோஹிணியும் சேர்ந்தால் விசேஷம்.
ஐப்பசி த்ருதியையில் தானம் கொடுத்தால் நற்பயன் பெருகும்.,இன்று விசேஷ சித்ரான்னங்களும் , கொழுக்கட்டையும் நைவேத்யம் செய்தல் வேண்டும்.
ஆவணி மாதம் புதன் கிழமையும் த்ருதியையும் சேர்ந்து அமைந்த நாளில் உபவாசம் இருப்பது நல்லது.
சதுர்த்தியும் பரணியும் சேர்ந்த நாளில் யம தேவதைக்காக உபவாசமிருந்தால் எல்லா பாவங்களும் விலகும். 23-3-2015.
29-9-2014 புரட்டாசி மாதம் சுக்ல பஞ்சமியில் பூஜையும், உபவாசமும் சிவலோக ப்ராப்தி கொடுக்கும்.
கார்த்திகை, மாசி மாதங்களில் வரும் கிரஹணங்களின் போது குளித்து ஜப தபாதிகள் , உபவாசம் ஏராளமான நற்பயன் தரும்.
1-8-14 சிராவண மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமி அன்று நாகங்களுக்கும், ப்ரதிமைகளுக்கும் பால், தயிர், சந்தனம், சிந்தூரம்,கங்கா ஜலம் மூலிகை கலந்த திரவியங்கள் கொண்டு பூஜை செய்தால் பல கோடி திரவியங்கள் கிடைக்கும். குலம் வ்ருத்தி அடையும். வம்சம் செழிக்கும்.
ஆவணி க்ருஷ்ண பக்ஷ பஞ்சமியன்று வீட்டு முற்றத்தில் வேப்பிலையால், மனசார, தேவியை பூஜை செய்வது மிக உத்தமம், ஏகாதசி விரதம் இவைகளை விட சிறப்பு வாய்ந்தது.
ஜமதக்னி முனிவர் சூரியனை மிரட்டினார். உலக நன்மைக்காக நீ வெப்பத்தை காட்டினாலும் அதனால் ஏற்படும் தாபம் போக என்ன வழி என்று சூரியனைக் கேட்டார். சூரியன் காலுக்கு செறுப்பும் தலைக்கு குடையும்
அணிந்து கொண்டு செல்ல வேண்டும் எனச்சொன்னார் .சூரியனே ஜமதக்னி முனிவருக்கு குடையும் செறுப்பும் கொடுத்தார்.. குடை செறுப்பு தானம் செய்பவர் ஸ்வர்க்கம் செல்வர் என சூரியன் திரு வாய் மலர்ந்து அருளினார்.
ஸப்தமி விருதத்தை உத்தராயணத்தில் சுக்கில பக்ஷ ஞாயிற்றுகிழமைகளில் துவங்க வேண்டும்.. எல்லா பாபங்களையும் இந்த வ்ருதம் போக்கடிக்கும்.
ஞாயிற்றுகிழமை ப்ரதமை திதி முதல் ஸப்தமி வரை எருக்கு இலையை கொண்டு சூரியனை பூஜிக்க வேண்டும். .ப்ரதமை முதல் ஸப்தமி வரை உபவாசம் இருக்க வேண்டும். அர்ச்சனை செய்த அந்த எருக்கம்
இலைகளையே உண்ண வேண்டும். முதல் நாள் ஒரு எருக்கு இலை. இரண்டாம் நாள் இரண்டு எரூக்கு இலை. மூன்றாம் நாள் மூன்று ; நான்காம் நாள் 4 இலை; 5ம் நாள் 5 இலை. 6ம் நா 6 இலை. 7ம் நாள் 7எருக்கு இலைகள் அர்ச்சனைக்கு…. இவைகளையே சாப்பிட வேண்டும்
இரண்டாம் மாதம் ப்ரதமை முதல் ஸப்தமி வரை மேற்சொன்ன வகையில் மாசிப்பச்சை இலைகளால் அர்ச்சனை செய்து அந்த இலைகளையே சாப்பிடவும். முதல் மாதம் செய்த மாதிரியே மற்ற மாதங்களும் செய்யவும்.
மூன்றாம் மாதம் வேப்பிலையை அர்ச்சனைக்கு உபயோகிக்கவும்..
நான்காம் மாதம் பழத்தை அர்ச்சனைக்கு உபயோகிக்கவும்..
ஐந்தாம் மாதம் பாகம் செய்யாத ஆகாரத்தை உபயோகிக்கவும்.
ஆறாவது மாதம் எதயுமே சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் பூஜை செய்ய வேண்டிய இலைகளை எடுத்து வந்து ஒரு புது குடத்தில் போட்டு ஒரு புருஷனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் எடுத்து செல்லப்பட்டு திரும்பவும் கொண்டு வரப்பட்டு
அவற்றால் பூஜை செய்ய வேண்டும் .இரவும் பகலும் கண் விழித்து பகவானை தியானிக்க வேண்டும்.