Announcement

Collapse
No announcement yet.

வைத்தமாநிதி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வைத்தமாநிதி

    வைத்தமாநிதி

    அ- சங்கநிதி

    (கௌஸ்துபமணி என்ற பிரும்மானந்த தீர்த்த சுவாமி தொகுத்தது)

    1. மச்சாவதாரம் (ஒரு மீன் உரு ஆகி)

    நிலையிடம் எங்கும் இன்றி முன்னீர் வளர்ந்து உம்பர் வளநாடு மூட, உலகம் எல்லாம் நெடுவெள்ளம் கொண்ட காலம், வானமும் நிலனும் மலைகளும் அலைகடல் குளிப்ப, மற்றும் எமக்கு ஓர் சரண் இல்லை அரண் ஆவான் என்று இமையோர் சரண் புக, திருமகள் கேள்வன்தான் ஒரு கொழுங்கயல் ஆய், வலி உருவின் மீனாய் வந்து, நீர் குழம்ப உலாவி, குலவரையின்மீது ஓடி, அகல்வான் உரிஞ்ச அகடு ஆட ஓடி, முதுகில் மலைகளை மீது கொண்டு அண்டத்து அப்பால் எழுந்து, இனிது விளையாடி, வியந்து உயிர் அளித்து, உய்யக்கொண்ட ஈசன், அருமறை தந்து கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமும் சொற்பொருள்தானும் மற்ற நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்தான் அமலன் ஆதிப் பிரான்.

    ஆறும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக்கூடில் அவனையும் கூடலாமே. பரம்! நின் அடி இணை பணிவன் வரும் இடர்அகல.

    2. கூர்மாவதாரம் (ஓர் ஆமையும் ஆகி)

    அமரர்கள் ஆழ்கடல் தன்னை மிடைந்திட்டு, நெடுவரை மந்தரம் மத்தாக நாட்டி, நீள் நாகம் வாள் எயிற்று அரவு வாசுகி வன்கயிறாக வடம் சுற்றி, கடல் மறுகக் கடைந்த காலம், திசை மண்ணும் விண்ணும் உடனே வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப, பொங்கு நீள்முடி அமரர்கள் தொழுது எழ, அமுதம்எய்தும் அளவும், அமுதினைக் கொடுத்தளிப்பான் அங்கு தடங்கடலுள், ஓர் ஆமையாய், பருவரை முதுஇல் சுழலத் தாங்கி, தலைமுகத்தான் ஒருகைப்பற்றிபா இரும் பௌவம் பகடு விண்டு அலற,படுதிரை விசும்பிடை படர, செய்இரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாம் உடன் திசைப்ப, மாநிலங்குலுங்க, குன்றுசூழ் மரங்கள் தேய, மாசுணைமசுலாய ஆயிரம் தோளால் நெருங்க, வெள்ளை வெள்ளம் நீலக்கடல் ஆகி, முழுதும் குழம்பி அலற, கடல்வண்ணன் தானே இலங்குசோதி ஆர்அமுது எழ, வங்கக்கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தான், ஆறுமலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி, அரவு ஊறு சுலாய் ரலை தேய்க்கும் ஒலி, கடல்மாறு சுழன்று அழைக்கும் ஒலி, அப்பன் சாறுபட அமுதம் கொண்டநான்று,

    குரைகடல் கடைந்து அமுதம் எழுமுன் சலம் கலந்த செஞ்சடை சிவன், தன்கூறு கொண்ட கழல்நிறவண்ணன் கண்ணுதல் மாகடல் நஞ்சுஉண்ணச்செய்தான் நிமலன், நான்முகன் தான்முகமாய்ப் படைத்திட்ட சங்கரனும் நஞ்சுண்டு கறுத்த கண்டனானான்.

    தீமை செய்யும் வல்அசுரரை அஞ்சி, விஞ்சைவானவர், சாரணர், சித்தர் வியந்துதி செய்ய,மாயப்பிரான் காமரூபம் கொண்டு தானே ஒரு பெண் ஆகி, நண்ணாதவாள் அவுணர் இடைப்புக்கு வஞ்சித்து, இன்அமுதம் உள்ள நோய்தீர் மருந்தாக அமுதினை வானவரை ஊட்டி அவருடைய மன்னுதுயர் கடிந்தான் மாமாயன்.

    வரைச்சந்தனக் குழம்பும், வான்கலனும் பட்டும், விரைப்பொலிந்த வெண்மல்லிகையும், நிரைத்துக்கொண்டு நின்ற மணவாளன், கடைந்த அமுதை விண்ணவர் உண்ண, அமுதினில் வந்த மின்ஒத்தபெண் அமுதத்தைத்தன் தடங்கொள் தாள்மார்பில் மன்னவைத்து, கொங்குஆர்இலைப்புண்டரீகத்தவன், இன்பம் அன்போடு அணைத்திட்டான்,பின் காமனைத் தந்தான் பயந்து நூற்று இதழ் அரவிந்த மலர்ப் பாவைக்கு அருள் செய்தான் கறைதங்கு வேல்த்தடங்கண் திருவை மார்பில் கலந்த மணாளன்.

    இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே, எப்போதும் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான் மொய்கழலே ஏத்த முயல்.

    தன்வந்திரி அவதாரம் , வராகாவதாரம் நாளை …….

  • #2
    Re: வைத்தமாநிதி

    சங்கநிதி தொடர்ச்சி
    3. தன்வந்திரி அவதாரம்

    கிடந்த அமுதாகிய வேதப்பிரான் தானே அமுதுஎழ கடல் கடைந்து நோய்தீர் மருந்து ஆக அமுதினை, நான்முகனார் பெற்ற நாட்டுளே அளித்தான் நோய்கள் தீர்த்தான்.
    நெய்க்குடத்தைப்பற்றி ஏறும் எறும்புகள்போல் நிரந்து எங்கும் கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்! காலம் பெற உய்யப் போமின்! மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்! இங்கு புகேன்மின், புகேன்மின், எளிது அன்று கண்டீர்; புகேன்மின்! பாணிக்கவேண்டா நடமின், உற்ற உறுபிணி நோய்காள்! உமக்கு ஒன்று சொல்லுகேன்மின்! பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்பேணும் திருக்கோயில் கண்டீர்! அற்றம் உரைக்கின்றேன் இன்னம்; ஆழ்வினைகாள் உமக்கு இங்கு ஓர் பற்றில்லை கண்டீர், நடமின் பண்டு அன்று பட்டினம் காப்பே.
    அவர்அவர் தாம்தாம் அறிந்தவாறு ஏத்தி இவர் இவர் எம்பெருமான் என்று அலர்மிசைச்சார்த்தியும் வைத்தும் தொழுவர்.

    4, வராகவதாரம் (பன்றியும் ஆகி)

    ஆதிஅம்காலத்து அரக்கனால் ஆழப்பெரும் புனல்தன்னுள் அழுந்திய நிலமடந்தை பொருட்டு, வளர்சேர்திண்மை விலங்கல் மாமேனி வெள்எயிற்று ஒள்எரித்தறுகண் பொருகோட்டு கேழலாகி, திக்கோட்டின வராகம்ஆகி அரண் ஆனான் தரணித்தலைவன். நீலவரை இரண்டுபிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப கோலவராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக்கொண்டான். அழியாத ஞானமும் வேள்வியும் நல்லறமும் இயல்வாய் நின்று ஏழ்உலகும் தானத்தேவைக்க எயிற்றினில் கொண்டபோது, நான்றிலவேழ் மண்ணும் தானத்தவே, பின்னும் நான்றிலவேழ்மலை தானத்தவே, பின்னும் நான்றிலவேழ் கடல் தானத்தவே, அப்பன் ஊன்றியிடந்து எயிற்றினில் கொண்ட நாளே, தீதுஅறுதிங்கள், பொங்குசுடர்மாதிரம் மண்சுமந்த வடகுன்றும், நின்றமலைஆறும், எழுகடலும், பாதமர் குளம்பின் அகமண்டலத்தின் ஓர்பால் ஒடுங்க, சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரியமேரு திருக்குளம்பில் கணகணப்ப திருஆகாரம் குலுங்க, சிலம்புமுதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம் திகழ்ந்தது எனத்தோன்றி இமையவர் வணங்க நின்று, வலம்கொள்ள வானத்தில் அவர்முறையால் மகிழ்ந்து ஏத்தி வணங்க, பாரதம் தீண்டு மண் எல்லாம் இடந்து இலங்கு புவி மடந்தை தனைப்புல்கி வல் எயிற்றினிடை வைத்து அம்மடவரலை மணந்து உகந்தான். பாசி தூர்த்துக்கிடந்த பார்மகட்கு பண்டொரு நாள் மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாய் தேசுடை தேவர் பேசியிருப்பன்கள் பேர்க்கவும் பேராதே.
    செந்திறத்தத்தமிழ் ஓசைவட சொல்ஆகி, திசைநான்கும் ஆய், திங்கள் ஞாயிறு ஆகி, அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை, அந்தணர்மாட்டு அந்திவைத்த மந்திரத்தை, மந்திரத்தை மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மடநெஞ்சமே.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X