Announcement

Collapse
No announcement yet.

ஏழு அஞ்சில் என்று ஒரு மரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஏழு அஞ்சில் என்று ஒரு மரம்

    ஏழு அஞ்சில் என்று ஒரு மரம்

    ஏழு அஞ்சில் என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு ஆகரஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக் கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்துவிடும் என்கிறார்கள்.

    பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும் இப்படியே அவன் பக்கமாக நகர்ந்து போய் முடிவில் அவனிடம் ஒட்டிக் கொண்டு ஒன்றாகிவிடவேண்டும்.

    நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி? கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவிருத்தியாகப் பெரிய பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம். நிவிருந்தியானால் அநேகமாகப் பூஜையையும் அதோடு விட்டுவிடுவோம். ஆகாவிட்டாலோ ஸ்வாமியையே திட்டுவோம். நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வருவதற்கு வழி என்ன?

    ஒரு ராஜகுமாரன் காட்டில் வேடர்கள் மத்தியில் - அதே வேஷத்தில் வளரும்போது தன்னையும் வேடன் என்று நினைத்துக்கொள்கிறான். அதே மாதிரி நாமெல்லாம் ஜீவாத்மா என்ற வேஷத்தில் ஸம்ஸரிகளாகவே நம்மை நினைத்துக்கொண்டிருந்தாலும் வாஸ்தவத்தில் நாமும் பரமாத்மாவேதான். வேஷம் இப்படியானாலும் நமக்கு உள்ளே இருக்கிற வஸ்து இப்போதும் பரமாத்மாதான்.

    ஜலமும், ஸ்படிகமும் ஒரே மாதிரிதான் வெளிப் பார்வைக்கு இருக்கின்றன. ஆனால், ஐஸ்தான் உருகி ஜலமாகுமே தவிர ஸ்படிகம் ஜலமாகாது. ஏனென்றால் எது ஜலமாகவே இருந்து அப்புறம் உறைந்து வேறு வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறதோ அதுதான் உருகி மறுபடியும் தன் ஸ்வயமான பூர்வ ரூபத்தை அடையமுடியும்.

    Source:Mannargudi Sitaraman Srinivasan
Working...
X