Announcement

Collapse
No announcement yet.

கருடன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கருடன்

    கருடன்


    Click image for larger version

Name:	Kal Garudan.jpg
Views:	1
Size:	42.7 KB
ID:	35246

    தெய்வ வாகனங்களுள், திருமாலின் வாகனமாகிய கருடனுக்கு தனிச்சிறப்பு உண்டு. கருடனைத் துதிப்பவர்களுக்கு நாக தோஷம் மற்றும் பதினாறு வகை நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பர். மேலும் கருடனை வழிபடுபவர்களது வீட்டில் விஷ ஜந்துக்கள் அண்டாததோடு, தொலைந்த பொருட்களும் உடனே கிடைக்கும். இத்தனை சிறப்புமிக்க கருடன் ஆடி மாத சுக்ல பட்ச பஞ்சமியில், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தார். இந்நாள் கருட ஜெயந்தி எனும் பெயரில் வைணவ ஆலயங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.


    காசிப முனிவருக்கும் அவரது முதல் மனைவியான வினதைக்கும் மகனாகப் பிறந் தவர் கருடன். சூரியனின் தேர்ச் சாரதியான அருணன் இவரது சகோதரர் ஆவார். சிவா லயங்களில் நந்திக்கு இருக்கும் முக்கியத்துவம், வைணவ ஆலயங்களில் கருடனுக்கு உண்டு. எந்நேரமும் எல்லா விதங்களிலும் திருமாலுக்கு திருப்பணிகள் செய்பவர்களை நித்யசூரிகள் என்பர். அவர்களில் கருடனும் ஆதிசேஷனும் பிரதானமானவர்கள். இந்திரனே வல்கிய முனிவரின் சாபத்தால் கருடனாகப் பிறந்த தாகவும் கூறப்படுகிறது.

    திருநரையூர் என்ற நாச்சியார் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் பெருமாளைவிடவும் தாயாருக்கே முதலிடம். பூஜை, ஆராதனை, திருமஞ்சனம், புறப்பாடு எல்லாமே முதலில் தாயாருக்குத்தான். இக் கோவிலில் வேறெந்தக் கோவிலிலும் இல்லாத வகையில் கல்லாலான கருட வாகனம் காணப்படுகிறது. இதில்தான் கருட சேவையும் நடக்கி றது. கல்லாலான வாகனத்தில் கருட சேவை நடக்கும் ஒரே ஆலயம் இது மட்டும்தான்.

    இக்கோவிலில் பத்துக்குப் பத்தடி சதுரக் கருவறையை நிறைத்தபடி கல்லாலான கருடன் காட்சி தருகி றார். ஒரே கல்லாலான சிலை இது. பறக்கும் இறக்கை, கூரிய மூக்கு, பெரிய கண்கள், ஏந்திய கரங்கள், ஒரு காலை மடித்து மண்டியிட்ட கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்த கருட வாகனத்தில்தான் பெருமாளும் தாயாரும் எழுந்தருள்வார்கள். மார்கழி விழாவின் நான்காம் நாள், பங்குனி விழாவின் நான்காம் நாளென வருடம் இருமுறை கருட சேவை நடைபெறும்.

    இந்த கல்லாலான கருட சேவை யில் இரண்டு அதிசயங்கள் நிகழ் வதை இன்றும் காணலாம். கருவறை யிலிருந்து கல் கருடன் புறப்படும் போது அதனை நான்கு பாதந்தாங்கி கள் சுமந்து வருவர். நேரம் செல்லச் செல்ல அதன் கனம் கூடும். கருவறையை விட்டு வந்தபின் எட்டு பேர் சுமப்பர். பிராகாரத்தில் 16 பேரும், ஆலய வாயிற்படியில் 32 பேரும், கோவிலைவிட்டு வெளிவந்ததும் 64 பேரும், வீதியுலாவின்போது 128 பேரும் கருடனைச் சுமப்பர். சுமப் பவர்களைவிடவும் கருடனுக்கே அதிகம் வியர்ப்பது முதல் அதிசயம். இரண்டாவது அதிசயம் எப்படி கருடன் வெளியே வரவர கனம் அதிகரித்ததோ அதுபோல வீதியுலா முடிந்து கருவறை திரும்பும்போது அதன் கனம் குறைய ஆரம்பிக்கும். இப்போது 128 பேர், 64 32, 16, 8 பேர் என சுமப்பவர்கள் குறைந்த படி செல்வர். கருவறையில் கருடனை இறக்கி வைக்கும்போது முன் போலவே நால்வர் மட்டும் இறக்கி வைத்துவிடுவர்.

    இதுபோலவே ஆழ்வார் திருநகரி கருடனுக்கும் சிறப்பு அதிகம். இங்கும் தாயாருக்கே முதலிடம். ஆடி மாத திருவாதிரை தொடங்கி ஆடி சுவாதி வரை பத்து நாட்கள் விழா நடத்துவார்கள். விஷேச திருமஞ்சனம் செய்து அமிர்த கலச நைவேத்தியம் செய்வர். பாசுரங்கள் பாடி திருவாய்மொழி நூற்றியெட்டையும் ஓதுவார்கள்.

    ஆடி சுவாதித் திருநாளன்று கருடனுக்கு பல்வேறு ஆலயங்களில் சாயா பரிவட்டம் கட்டுவார்கள். இது பாம்பு, தேள், பூரான் வரையப் பட்ட நீண்ட வஸ்திரமாகும்.

    சென்னை சவுகார்பேட்டை வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் கார்த்திகை மாத விழாவின்ஆறாம் நாளன்று தாயார் பெண் கருட வாகனத்தில் வீதியுலா வருவார். வேறு எந்த ஆலயத்திலும் பெண் கருட வாகனம் கிடையாது என்பது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.

    வழிபாட்டு பலன்கள்.........

    கீழ்க்கண்ட தினங்களில் கருடனைத் தரிசித்தால் குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும். ஞாயிறு - நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும். திங்கள் - குடும்ப நலம். செவ்வாய் - தைரியம் ஏற்படும். புதன் - எதிரிகள் மறைவர். வியாழன் - நீண்ட ஆயுள் வெள்ளி - அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கும்.

    சனி - முக்தி கிடைக்கும். கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.


    Source: Nagarathar
Working...
X