Announcement

Collapse
No announcement yet.

கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய முருகன் கோயில

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய முருகன் கோயில

    கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய முருகன் கோயில் எது?

    உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் அனைவரும் நாள் தோறும் மனமுருகிப் பாராயணம் செய்யும் “கந்த சஷ்டி கவசத்தை” இயற்றியவர் “பாலன் தேவராய ஸ்வமிகள்” இவர் கந்த சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய வேண்டி முருகனை நினைத்து வழிபட்டார். அப்போது சென்னிமலை முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என முருகன் அருளால் உணர்ந்தார். அங்கேயே சீரோடும் சிறப்போடும் அரங்கேறியது. இந்த கவசத்தில் “சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக” என்ற வரி வரும். இதில் “சிர கிரி” என்பது {சிரம்-சென்னி, கிரி-மலை} என்பது சென்னிமலையை குறிக்கும்.

    லிங்கொத்பவர் வழிபாடு...

    சிவன் கருவரையின் பின்புறம் கோஷ்ட்த்தில் லிங்கோத்பவர் இருப்பார். இவரது தோற்றத்தை உற்றுநோக்கினால் செங்குத்து வடிவிலான கண் போன்ற அமைபின் நடுவில் இருப்பதை காணலாம். இந்த அமைப்பிற்கும் நமது பார்க்கும் செயலுக்கும் ஒற்றுமைகள் உள்ளது.

    ஒரு பொருளை நாம் காணும்போது இரண்டு கண்கள் வழியே செல்லும் பிம்பமானது பின் மூளையில் உணரப்பட்டு முழு காட்சி யாகத் தெரிகிறது. பின் மூளை சரியாக இயங்கவில்லையெனில் கண்பார்வை மங்கும், பொருட்கள் சரியாக தெரியாது. பார்வையை உணர்த்தும் பின் மூளை அதிக முக்கியத்துவம் பெற்றிருப்பதைப் போல லிங்கோத்பவர் பிரதானமானவராக உள்ளார்.


    லிங்கோத்பவரை வணங்கினால் அறிவும், உண்மை பேசும் திறனையும் பெறலாம் என்பது நம்பிகை...

    செவி சாய்க்கும் சண்டிகேஸ்வரர்...

    நாம் தகவல்களை தெரிந்து கொண்டு அதன் மூலம் பேசுவதற்கு செவிகளே ஊடகமாக இருக்கின்றன. இதை உணர்த்துவது போல சண்டிகேஸ்வர் சிவன் சன்னதியின் பிரகாரத்தில் செவி இருக்கும் இடத்தில் உள்ளார். சிவனின் உதவியாளராக அவரை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் குறித்து கணக்கெழுதும் பணி செய்யும் இவரை வணங்கிட பேச்சுத்திறன், நினைவாற்றல் பெருகும் என்பது ஐதீகம். சில கோயில்களில் சிவனின் இடது பிரகாரத்தில் செல்வத்திற்கு அதிபதியான லட்சுமிக்கு சன்னதி இருக்கும். பேச்சுத்திறன் நினைவாற்றல் திறன் இல்லாதவன் செல்வத்தை சேமித்து வைக்க முடிவதில்லை. எனவேதான் இவளுக்கு கோயில்களில் இவ்விடத்தில் சன்னதி அமைக்கப்படுகிறது.

    சிவனை வணங்கிய பலன் சண்டிகேஸ்வரரை வணங்கினால்தான் கிடைக்கும் என்பது சாஸ்த்திரம்.

    ராவணன் கொண்டு வந்த லிங்கம்..


    கர்நாடக மானிலம் கோகர்ணம் என்ற இட்த்தில் ராவணன் கொண்டு வந்த ஆத்மலிங்கம் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு பூஜை நடைபெறும்.

    மலர்களின் நாட்கள்.

    பறித்த அன்றே பயன்படுத்த வேண்டிய மலர்கள் மல்லிகை, பிச்சி, மூன்று நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டியது அரளி. 5.நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டியது தாழம்பு, 7.நாட்களுக்குள் பயன்பத்த வேண்டியது தாமரை, 3.மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டியது துளசி, 6.மாதங்கள் வர பயன்படுத்துவது வில்வம்.



    Source:Swarnagiri Vasan
Working...
X